ரொட்டியும் பாராளுமன்றமும்
________________________________
ஒரு மனிதன்
ரொட்டி தயாரிக்கிறான்
ஒரு மனிதன்
ரொட்டி சாப்பிடுகிறான்
ஒரு மூன்றாவது மனிதனும் இருக்கிறான்
அவன் ரொட்டி தயாரிப்பதில்லை..
ரொட்டி சாப்பிடுவதில்லை..
அவன் ரொட்டியோடு மட்டும் விளையாடுகிறான்
நான் விசாரிக்கிறேன் __
” இந்த மூன்றாவது மனிதன் யார் ? ”
என் தேசத்து பாராளுமன்றம்
மெளனமாக இருக்கிறது.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
என் கவிதை
__________________
இது
என்கவிதை : என் வீடு
நீர் கொண்டு தருபவளே !
இதை துடப்பத்தினால்
பெருக்காதே
முந்தானையால் சுத்தம் செய்
என்ன சொன்னாய் _
மொழி__ ? பார் அந்தமூலையில் __
சொற்களின் அர்த்தம் நிறைந்து
மூலையில் வைக்கப்பட்டிருக்கிறது
அட… சகோதரி ! அங்கில்லை , அங்கே
மாடப்பிறை மேல்
அந்த தம்ளருக்கு அருகே
அதில் என்னுடைய பற்கள்
வைக்கப்பட்டிருக்கின்றன
ஆ… ஆம்…
ஆழ்ந்த சிந்தனையோடு எடுத்து
பிறகு
வார்த்தை _ வார்த்தை
துடை
சிறிய முளையின் மேல் தொங்கும் சட்டையை
உற்று நோக்காதே
வீணாக யோசிக்காதே
நட.
உன்னுடைய வேலையை செய்
பிளவுபட்ட புஜத்தோடு
தேசத்தின் ஏழ்மைக்கு
என்ன பொருள் !
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
விமர்சகன்
_______________
அவன்
உன்னுடைய கவிதையின்
ஒரு வார்த்தையை முகர்கிறான்
பிறகு
மூக்கின் நேரில்
பணப்பெட்டியின் பக்கம்
ஓடிப் போகிறான்.
மேலும் எடுத்துக் கொள்…
அவன் உறுமல்
எல்லா முகங்களை சிராய…
ஒரு கவலையற்றுத் தூங்கி எழுந்தான்
பிறகு
சிறுநீர் கழித்தான்.
இது காளான்..
கிராமத்தில்
சிறுவர்கள் இதை குடை என்கிறார்கள்.
ஹிந்தியில் : தூமில்
தமிழில் : வசந்ததீபன்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தூமிலின் வாழ்க்கைக் குறிப்பு :
____________________________________
தூமில் ( ஸுதாமா மாட்டேன்)
பிறப்பு : 09 , நவம்பர், 1936
இறப்பு : 10 , பிப்ரவரி, 1975
பிறந்த இடம் : கேகலி, வாரணாசி ( உ.பி. மாநிலம் , இந்தியா )
படிப்பு : மெட்ரிக் ( முதல் தரம்) ,டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல்.
தொழில் : 1964 வரை உத்தரபிரதேசத்தில் மாநில அரசு தொழிற்பயிற்சி பயிற்சி நிலையத்தில் வேலை. அடிப்படையாக விவசாயம்.
வெளிவந்த நூல்கள் : ஸம்ஸத் ஸே ஸ்டிக் தக் (1972)
கல் சுன்ன்னா முஜே (1977)
பெற்ற பரிசு : முக்திபோத் புரஸ்கார்


சிறப்பான கவிதைகள்..இந்தி மொழி என்ற மூலவாசனை தெரியாமல் தமிழ் போலவே அமைந்திருப்பது மொழிபெயர்ப்பின் வெற்றி
நன்றிகள் நண்பரே