சா.சமீமா சிரின் எழுதிய இருபது புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்

******************************************

இறந்தவர்களின் நினைவாய்
விபத்துப் பகுதி என்ற
அறிவிப்புப் பலகை சாலைகளில்

******************************************

தினமும்
ஹோலி பண்டிகை
நிறம் மாறும் பச்சோந்திக்கு

******************************************

இறந்த அக்காவின் கணவருக்கு
இலவசம்
தங்கையின் வாழ்க்கை

******************************************

மூடாத குழாய்
தாகம் தீர்ந்தன
காய்ந்த நிலங்கள்

******************************************

நெற்கதிர்களை வெட்டின
வெட்டுக்கிளிகள்
என்ன கோபமோ?

******************************************

ஐந்தடி தொட்டியில்
அகப்பட்ட மீன்கள்
ஆழத்தை மறந்தன

******************************************

அவசர அவசரமாகப் படிக்கிறது
புத்தகத்தின் தாளைப்
புரட்டும் காற்று

******************************************

வெளிச்சம் கண்டதும்
ஓடி வந்துவிடுகிறது
நிழல்

******************************************

அழுகிய நாற்றத்தில் குப்பை தொட்டிகள்
அழுகின்றனவோ?
சிரிக்கும் அநாதைக் குழந்தை

******************************************

சிதறி கிடக்கும் உணவுகள்
சுத்தம் செய்கின்றன
எறும்புகள்

******************************************

சுதந்திரமாகச் சுற்றி திரிந்தன
ஆண் புழக்கம் இல்லாத இடத்தில்
கடல் கன்னிகள்

******************************************

வெட்டிய கைகள்
உடனே துடைக்கிறன கண்ணீரை
வெங்காயம் இறந்த பின்

******************************************

வனக்காப்பாளர் வீடு
வாசலில் வரவேற்றன
யானை தந்தங்கள்

******************************************

வடிவமைத்தாலும்
வாசலில் நின்றே கும்பிட்டான்
சிலையைச் செதுக்கிய சிற்பி

******************************************

குப்பை தொட்டிகளை
காவல் காத்தான்
பசியுள்ள சிறுவன்

******************************************

ஏரைச் சுமந்த முதுகுகள்
இளைப்பாறுகிறன
மாட்டுப்பொங்கலில்

******************************************

நூலகத்தில்
தூசுகள் துணை கொள்கிறன
புரட்டப்படாத புத்தகங்களை

******************************************

மழலைப் பருவத்தில்
மறக்க முடியாத இசை
ஐஸ் வண்டி மணி

******************************************

சூது விளையாட்டு
பரிசாய்க் கிடைத்தது
தற்கொலை

******************************************

வட்ட மைதானம்
வாழ்க்கை முழுவதும் ஓடுகின்றன
கடிகார முட்கள்

******************************************

📚 எழுதியவர்:

– சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *