டில்லி பாபுவின் கவிதைகள்

டில்லி பாபுவின் கவிதைகள்

டில்லி பாபுவின் கவிதைகள் 

*****************************************
1.என்னவள்

சுற்றிலும் அடை மழை,

என்னை நோக்கி வீசும் அனல் காற்று,

என்னவளின் பார்வை கணைகள் …

 

மலரினும் மெல்லியது,

நிலவினும் ஒளி வீசுவது,

என்னவளின் குறுநகை…

 

மானைப் போல துள்ளுவது,

மயிலைப் போல வசீகரிப்பது ,

என்னவளின் நடையழகு

 

கரு மரம் போல் மிதமானது

என்னவளின் கார்குழல்

நிலவின் பள்ளங்கள் போல் உள்ளது

என்னவளின் கன்னக் குழி

*****************************************

2.மகள்

 

ஏதும் செய்ய வில்லை

எதையும் கொடுக்க வில்லை

அவள் மட்டும் தந்து கொண்டே இருக்கிறாள்

அன்பை மழையாக

 

அவள் தரும் எண்ணிக்கையில் அடங்கா முத்தங்களை

வைக்க இடம் இல்லாமல் போனது

என் கன்னத்தில்

 

சில சமயம்

அவள் கடிக்கும் போதும் ரசிக்கிறேன் கனியாக

அவள் அடியை தடுப்பதில்லை

அது இதம் தரும் வலி ஆக இருப்பதால்

 

சில நேரம் அவள் கோபம் சுட்டெரிக்கும்

சில நேரம் அவள் சிரிப்பு

தென்றலாய் வீசும்

*****************************************

எழுதியவர்:

✍🏻 – டில்லி பாபு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *