இ.முகில் வேந்தன் கவிதைகள்
***********************************************
1. நெடுங்கால வருத்தம்
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் ஆகும்
அனைவரும் சமமாவதற்கு?
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் ஆகும்
அனைவரும் ஒன்றாவதற்கு?
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் ஆகும்
முழுவதும் சாதி ஒழிவதற்கு?
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் ஆகும்
அனைவரும் மனமாறுவதற்கு?
இன்னும் எத்தனை
நூற்றாண்டுகள் ஆகும்
எனக் கேட்பதற்கு
வருத்தமாக இருக்கிறது
பல நூற்றாண்டுகள்
போராடியும்
இன்னமும்
கேட்டுக் கொண்டிருப்பதற்கு.
***********************************************
2 . கல்வி போதும்
சமூகத்தை நேசிப்பதற்கும்
புத்தகங்களை வாசிப்பதற்கும்
அறிவியல், வரலாறு
போன்றவற்றை அறிவதற்கும்
இலக்கியங்கள் புரிவதற்கும்
கருத்தியல் பேசுவதற்கும்
கேள்விகள் கேட்பதற்கும்
அதிகாரம் பெறுவதற்கும்
சமமாய் நினைப்பதற்கும்
அறிவு தெளிவதற்கும்
எமக்குப்
போதும் கல்வி மாத்திரம்
வேண்டாம் மாட்டு மூத்திரம்.
***********************************************
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
