வெறுத்தா கவிதைகள்
*******************************************************************
கவிதை 1: அப்பா பிடித்த நட்சத்திரம்.
நடுநிசியில்
சோர்ந்து வந்திருந்த அப்பாவிடம்
வழக்கத்தைப் போல
இனிப்பு கார பொட்டலத்தின்
வாசம்
எப்போதும் போல
தம்பியிடம் போட்டி போட்டு
கொட்ட கொட்ட
முழித்திருந்த எனக்கு
நள்ளிரவில் புசிக்கும்
கூகையின் சாயலில்
நல்ல வேட்டை
அது ஒன்றுமில்லை
மேகத்தின் சிராய்ப்புகளும்
மின்னலின் கீறல்களுமென்று
தன் காயங்களை
வர்ணித்துக்கொண்டே
அம்மாவின் விசும்பலை
ஆற்றுப்படுத்தியபடி
அப்பா சொன்னார்
தங்கத்தின் விலை கூடியதால்
மகளுக்கு
நட்சத்திரங்களை பிடிக்கப் போயிருந்தேனென்று
அந்த ஒரு இரவு முதல்
ஆபரணங்களை
வெறுக்கத் தொடங்கினேன்
நான்.
*******************************************************************
கவிதை 2
நசநசத்துப் பிசுப்பிசுத்து
சுனைமுள்ளேறிய உடல் கடந்து
கள்ளிக்காட்டில்
வேட்டைக்கு காத்திருக்கும்
ஓணான்களுக்குப் போக்கு காட்டி
தப்பிப் பிழைத்து
வானம் பார்த்த பூமியில்
வலசைத்தேடி அலைகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
மனிதமற்ற கங்குகளை
உமிழ்ந்தது போதும்
பீரங்கிகளே
கொஞ்சம்
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
*******************************************************************
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
