அ.சீனிவாசன் கவிதைகள்
**********************************************
1. வாழ்வோவியம்
தலையில் எழுத்தோ,
தலையெழுத்தோ—
ஏதும் இல்லை.
பிறப்பில் எல்லோரும்
வண்ணமில்லா
கருப்பு–வெள்ளை
கோட்டோவியம்.
எண்ணங்களே வண்ணங்கள்;
தீட்டலே முயற்சி;
தீட்டிப் முடித்ததே வாழ்க்கை.
உணராதோர்
அவசர ஓவியமாய் தீட்டுகிறார்;
வேகமாய் தீட்டிய பின்
“இவ்வளவுதானா?” என திகைக்கிறார்.
கோட்டோவியமே போதும் என்போர்
பற்றற்ற துறவியார்.
வண்ண ஓவியமும் போதாது என்போர்
வண்ணங்களை வாரி இறைத்து
ஓவியத்தையும்
வண்ணங்களையும்
மறைத்துவிடுகிறார்.
தீட்டுமுன்—ஓவியம்;
தீட்டியபின்—வண்ண ஓவியம்.
இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை;
ஆனால்
தீட்டியபின் செய்ய
ஏதுமில்லை என்பதை
தீட்டுமுன்பே அறிந்தோர்—
பொறுமையாய் தீட்டுகிறார்;
ரசித்துத் தீட்டுகிறார்;
கடைசி வரை தீட்டுகிறார்;
தீட்டிக்கொண்டே இருக்கிறார்—
திகட்டுவதுமில்லை,
தீட்டாமல் இருப்பதுமில்லை.
**********************************************
2. அன்னை
வயிறு
நிரம்பியதை அறிந்தும்
அறியாதது போல
கூடுதலாய்
பாலூட்டியவள்.
தூங்கிவிட்டதை அறிந்தும்
உணராதது போல
கூடுதலாய்
தாலாட்டியவள்.
போதுமென்று சொல்லியும்
கேளாதது போல
இன்னொரு தோசை
வார்த்தவள்.
இன்று
மறுமுனையில்
இணைப்பு துண்டிக்கப்பட்டதை
அறிந்தும்
மேலும் கொஞ்சம் நேரம்
காதிலேயே
அலைபேசியை
வைத்திருக்கிறாள்.
**********************************************
📚 எழுதியவர்:
அ.சீனிவாசன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
