அ.சீனிவாசன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள்

அ.சீனிவாசன் கவிதைகள்

***********************************************

1. கண்ணுக்கு (அ)நீதி

உடலோ
உள்ளமோ
எவ்வலியிலும்
வெளிக்காட்டவும்,
ஆறுதலுக்காகவும்
அழுகின்றன கண்கள்.

கண்கள் அழுகையில்
வலி குறையாவிட்டாலும்,
அழுகையின் ஆறுதல்
வலி பொறுக்க
வகை செய்கிறது.

கண்களுக்கு
ஒரு வலியென்றாலும்,
அழ வேண்டியது
கண்களே!

கண்களைப் போல
உமைப் பார்த்துக்கொள்பவர்,
பார்த்துக்கொள்வதும்
அவரின்
வலியைத் தாங்கவே…

***********************************************

2. தாய் தீபாவளி

சிற்றப்பா, பெரியப்பா,
அத்தை, சித்தி, பசங்களோடு
தெருவிலிருக்கும் ஏழைப் பிள்ளைகளையும் சேர்த்து,
குறைந்தது பதினைந்து பேருக்காவது,

ஒவ்வொரு தீபாவளி முன்னிரவிலும்
மொத்த பட்டாசுகளையும் கணக்காய்
பகிர்ந்துவிட்டு மகிழ்ந்தவள்
அம்மா.

இன்று,
தமிழகத்தின் நான்கு திசைகளிலும்
வீடமைத்துக் கொண்டிருக்கும்
நான்கு குழந்தைகளுக்கெல்லாம்,
தன்னிருப்பைத்தான் சமமாக
பிரித்துக் கொடுக்க முடியவில்லை.

இதிலும் அமைதியாக இருந்து,
அப்பாதான் ஜெயிக்கிறார் —
நான்கு வீட்டு சுவர்களிலும்
ஒரே மாதிரி புகைப்படத்தில்
தொங்கிக் கொண்டு!

எப்போதும் போல்,
கணவரின் வெற்றியில்
திருப்தி அடைந்துவிடுகிறாள்
அம்மா.

ஆனாலும் அவள் கண்ணில்
ஒரு ஏக்க மத்தாப்பு
பளீரிடுகிறது.

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *