க. புனிதன் கவிதைகள்
*********************************
1. ஒரு கறுப்பு பலூன் உடையும் சப்தம்
உடைந்த பலூன்
சப்தத்திற்கே அழுபவள்
எப்படித் தாங்கி கொள்கிறாளோ
யுத்த சப்தம்
இடி பாடுகள் இடையே
ஒரு கை இழந்த
பொம்மையை
இடுப்பில் வைத்துச் சுமக்கிறாள்
இரவில் வெளியில்
படுத்து உறங்கையில்
பொம்மைக்கும் தலைவலி தைலம்
பூசுகிறாள்
அவள் மற்றொரு கையில்
மரிக் கொழுந்து பூக்கள்
அலுமினியம் இறக்கைகள் கொண்ட
போர் விமானங்கள் அருகில்
அவளது கனவில்
ஒரு கறுப்பு பலூன் உடையும் சப்தம்
கேட்டது
மனம் உடைந்து
கேவிக் கேவி அழ ஆரம்பிக்கிறாள் அவள்
*********************************
2. கவிஞனின் நிரந்தர மறதி
கவிஞனின் நிரந்தரமறதி
போர்
அவன் தொட்டிச் செடிகளைக்
கூண்டில் வைத்து வளர்ப்பது
பற்றிக் கேள்வி கேட்பவன்
போர்க் கப்பலுக்குள்
சமாதானப் புறாக்களை
வளர்ப்பவன்
ஆழமான எண்ணெய்க் கிணறுகளில்
நிலாவைத் தேடுபவன்
ஆயுள் ரேகையை வளர்க்கும் பூனையை
வெடிகுண்டு வீசப்பட்ட
இடிந்த வீட்டுக்குள்
தேடி அழுபவன்
அணுக் கதிர்களால் அழியும்
வயல்களில்
செம்பருத்தியைப் பதியன் போடுபவன்
பட்டினிச் சாவுகள் நடக்கும் ஊரில்
எறும்புகள் மட்டும் புத்த மதத்தில்
சேர்ந்ததைப் பற்றிக் கவிதை எழுதுபவன்
கவிஞனின் நிரந்தர மறதி
போர்
*********************************
எழுதியவர்:
க. புனிதன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

