Two Poetries (Nagamum Sathaiyum, Ammakkalin Ammakkal) by Pitchumani in Tamil Language. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

பிச்சுமணியின் இரண்டு கவிதைகள்



நகமும்..சதையும்..

நாம் கேள்விப்பட்ட
நட்பின் அடையாளம்.

நகத்திற்கும் சதைக்கும்
இடையில்
சமூகம் போதிக்கும்
அழுக்கும்
கொடூர குருதியும்
நமக்கு மறந்துவிடுகிறது

அவனுக்கும்.. அவனுக்கும்
அவ்வூரே. சொந்த ஊர்!
அவ்வூர் அரசு
கட்டடங்களே.
அவர்கள் இருவருக்கும்
பொது.- அதில்
பள்ளிக்கூடமும்
அடக்கம்.

பள்ளிக்கூட மக்கு (திறமை) மாணவர் பட்டியலில்..
இருவரும் சமமாய்தான்
இருந்தார்கள்..

அவன்.. இவனோடு விளையாண்டதில்லை.
இவன் அவனோடு
சினிமா பார்த்தில்லை.
அவன்.. இவனோடு
திருவிழா கொண்டாடியதில்லை.
இவன்.. அவனோடு
திருமண விழாக்களில்
சேர்ந்து பந்தி பரிமாறியதுமில்லை..
ஒன்றாய் அமர்ந்து
உண்டதில்லை.

அவ்விருவருக்கும்.
ஒரே பண்டிகை
தனித்தனியே
கடந்துபோகும்..

அவர்கள்
குடும்பத்தினருக்கிடையே
விருந்தோம்பல்
நிகழ்வு சாத்தியப்பட்டதேயில்லை.

வயது வந்தவுடன்
சடங்கு கழிக்கப்படுகிறது.
ஜாதகம் பார்க்கப்படுகிறது
திருணமணஞ் செய்வதுபோல்
நட்பும் நிச்சயிக்கப்படுகிறது

யாருடன் நெருங்கவேண்டும்
யாரிடமிருந்து விலகவேண்டும்
யாரை மாமா என்றழைக்கணும்
யாரை அண்ணன்னு சொல்லணும்
யாரை பெயர் சொல்லிக் கூப்பிடணும்
யாரை எப்படி அழைக்கணும்
இப்படியெல்லாம் தெரிந்த பின்னேதான்
ஹாய்.. என சொல்லவைக்கிறது

நட்பின் பெருமை பேசுகிறது
நட்புக்கு இலக்கணம் வகுக்கிறது.
நண்பர்கள் தினம் கொண்டாடுகிறது
எல்லாம் தனக்குரிய
குரூரத்தை மாற்றாமலேயே..
“உடுக்கை இழந்த கை.
கண்களை மூடிக்கொண்டு
மானம் காத்ததாய்க் கூச்சலிடுகிறது “.

Welcome Friends Goodevening @ Balageetham Tamil - பாலகீதம் தமிழ் - YouTube

அம்மாவின் அம்மாக்கள்.

ஒரு குழந்தை பிறக்கிறது.
குழந்தையின் அம்மாவுக்கு
இரண்டு குழந்தைகள்!.

ஒரு குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்
இன்னொரு குழந்தைக்கு-
தான் பட்டபாடுகளை பாடுகிறாள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *