கி. கவியரசன் கவிதைகள்
******************************
1
காக்கைகளும்… குருவிகளும்….
புறாக்களும்….
சூரியனும்… நிலவும்… வானமும்
தினம் தினம்
தன்னைப் பதித்து விட்டுச் செல்லும்
அந்தத் தொட்டியின் நீரை
செடிகளுக்கு ஊற்றிவிட்டு….
சிறகுகளோ… அலகுகளோ….
சின்னச் சூரியனோ…
குட்டி நிலவோ…
சிறிய பால்வெளியோ…
பூத்து விடுமென்று
தினம் தினம்
காத்திருக்கிறேன்.
2
மரத்தைப் பிடித்து
மிக மிகப் பத்திரமாகக் கீழிறங்கிய
சூரியன்….
திசைக்கு ஒவ்வொன்றாகப்
பறந்து வந்து கூடடையும்
பறவைகள்….
கொஞ்சம் கொஞ்சமாக
இருளைப் பூசிக் கொண்ட
மரக் கிளைகள்….
மெது மெதுவாகச்
சுற்றிலும் தன்னை
நிறைத்துக் கொண்ட மௌனம்….
வயல்வெளியில் எங்கிருந்தோ
பேசத் தொடங்கிய
ஒரு தவளை…..
தூரத்திலிருந்து பதிலுக்கு
என்ன பேசுவதெனத் தெரியாமல்
நான்
————————————————————————–
நூல் அறிமுகம் எழுதியவர் :
செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
E : kaviyarasu1411@gmail.com
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்….
© கி.கவியரசன்