என்
ஜன்னலோரத்தில்
பின்னி முடிக்காத
கூந்தல் இழையில்
நறுமணம்…
அடர்ந்த வனாந்தரத்தை
ஞாபகப்படுத்துகிறது
உன் வருகை.
என்
ஆழமான நட்பு
ஒரு வசந்த காலம் போல
உன்னிடம்
ஒவ்வொரு முறையும்
ரோஜா போன்றே
அறிமுகம்
செய்து கொள்ளத்
துடிக்கும்.
நீ தந்து விட்டுச்
சென்ற பரிசு மழை
உன் கூந்தலின்
ஒற்றை முடியும்
உன் குரலும்.
நீ…
என் வீட்டு அலமாரியில்
ஒளிந்து கொண்டிருக்கும்
நினைவுப் பெட்டகத்தின்
புதிய ஆன்மா.
உன் முத்தத்தில்
நனைந்திட்ட
ரோஜாவாக
இருந்திட
வேண்டும் என்பது
என் பெரும் லட்சியங்களில்
ஒன்று.
2. மரணம்
என்னிடம் பேச்சுவார்த்தை
நடத்தியது.
என்னிடம் வந்துவிடு
இந்த நிலமும் மண்ணும்
அவ்வளவு உகந்தது
இல்லை என்றது.
உனக்காக
நான் ஒரு அற்புதமான
உலகத்தை உருவாக்குகிறேன்.
அதில் நீ எங்கு வேண்டுமென்றாலும்
எதை வேண்டுமானாலும்
கேட்டவுடன் கிடைக்கச் செய்வேன்.
போயும் போயும்
இந்தப் பாழாய்ப் போன
உலகத்தில் வாழப் போகிறாய்?
என்னிடம் வந்துவிடு.
உனக்கு நான்
தங்கம்
வைரம்
பணம்
பொருள்
புகழ்
மண்
பெண்
எல்லாவற்றையும் தருகிறேன்.
மட்டுமல்ல
நவரத்தினங்களால் மாலை
கோர்த்து அணிவிக்கிறேன்.
நான் அதனிடம்
இப்படி சொன்னேன்.
உன்னை எப்பொழுதும்
எண்ணியதில்லை
நிச்சயம் நீ எனக்கு வேண்டாம்.
கறாராகக் கூறிவிட்டேன்.
இப்பொழுது
அதன் கோர
முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 பாவலன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இதழின் ஸ்பரிசம்
எதிர்க்கத் தூண்டும்
காலனையும்….
*நீ தந்துவிட்டு போன பரிசு மழை
உன் கூந்தலின்
ஒற்றை முடி*
இன்னும் உன் நினைவிலும் அலமாறியிலும் அற்புதம். நெஞ்சில் நின்றவை❤️❤️❤️