மனோந்திராவின் இரண்டு தமிழ் கவிதைகள்
*****************************************************************
சாதியும் மதமும்
(இலாவணி)
சாதிகள் பெரியதென்று
வாதிடும் கயவர்களின்
தத்துவங்கள் என்னவென்று சொல்லு! சொல்லு!
ஆதியில் மநுதருமம்
ஓதிய சதுர்வருண
ஆணைகள் அவைகளெனக் கொள்ளு! கொள்ளு!
இந்துத்துவம் இன்றுவந்து
சிந்திடவே செய்கிறது
இந்தியர் குருதியினை பாரும்! பாரும்!
நொந்துபோன மானிடரின்
சிந்தையிலே மதவெறி
நுட்பமாகத் தினம்தினம் ஏறும்! ஏறும்!
ஆணவக் கொலைகள்செய்யும்
ஈனர்கள் இருக்கிறார்கள்
ஆயிரமாய்த் தானேயிந்த நாட்டில்! நாட்டில்!
வீணர்பலர் சாதிகளைப்
பேணவே சாதிகளுக்குள்
வீண்சண்டைகள் மூட்டுகிறார் ரோட்டில்! ரோட்டில்!
கோமியம் புனிதமென்று
சாமிகள் உரைப்பதாகக்
கூறுகிறார் இங்குசிலர் கூடிக்! கூடி!
பூமியில் அதையும்நம்பி
சேமித்த அறிவைவிற்று
போகிறார் சிலர்பசுவைத் தேடித்! தேடி!
தெய்வமெனப் பசுக்களை
வைதிகரும் சொல்லிக்கொண்டு
சனங்களைக் கொல்லுகிறார் ஐயோ! ஐயோ!
வையகம் தனில்எளியோர்
கைநிறைய வாங்வுண்டு
மாட்டிறைச்சி மட்டுமெனில் பொய்யோ! பொய்யோ!
மண்ணிலே சமத்துவத்தைக்
கண்ணென வளர்ப்பதற்கு
மார்க்சிஸம் இருக்கிறது தம்பி! தம்பி!
திண்ணிய தோளைநிமிர்த்தி
விண்ணதிர கோஷமிட்டு
சீறிடுவாய் நீயும்அதை நம்பி! நம்பி!
*****************************************************************
பொறுத்தது போதும்!
(கண்ணிகள்)
ஏறுது பார்விலை வாசி தினம்தினம்
ஏணிகள் இல்லாமல்!
சோறுகள் இன்றி எளியவர் வாடிடச்
சொல்லுது சொல்லாமல்
ஆறுகள் போலவே செல்வம் சிலரை
அடையுது நில்லாமல்
பேறுகள் பெற்றயிம் மானுட வாழ்வினில்
பேதமை ஏனோசொல்!
காய்கறி வாங்கக் கடைசெல் பவரோ
கவலைப் படுகின்றார்
சேய்களைப் பள்ளியில் சேர்க்கச் செல்பவர்
செத்துப் பிழைக்கின்றார்
ஏய்ப்பவர் இன்று ஏழையைத் தின்று
எளிதில் செரிக்கின்றார்
பாய்ந்து வரும்விலை வாசியைக் காண்போர்
பயந்து கிடக்கின்றார்
வண்டிகள் உண்ணும் எரிபொருள் மீது
வரியை விதிக்கின்றார்
எண்ணி லடங்காப் பண்டங் களின்விலை
ஏறப் புரிகின்றார்
விண்ணைத் தொடும்விலை வாசியால் மக்களும்
விம்மி அழுகின்றார்
வண்ண மிழந்த சனங்கள் தினமும்
வருத்தம் அடைகின்றார்
எண்ணெய் பருப்பு விலைகளைக் கேட்டாலோ
எண்ணம் சிதையாதோ!
உண்ணும் அரிசி விலைகளைப் பார்த்தாலோ
உள்ளம் நடுங்காதோ!
கண்ணைக் கவரும் நுகர்பொருள் மக்கள்
கதையை முடிக்காதோ!
மண்ணில் மனிதரின் வாழ்வு இவற்றினால்
வண்ணம் இழக்காதோ!
பொறுப்பத னாலே எளியவர் இன்று
பொதிகள் சுமக்கின்றார்
வறுக்கும் வறுமையில் ஏழைகள் இன்று
வதைகள் படுகின்றார்
அறுத்திட வேண்டும் வறுமைத் தளையை
அதனால் எழுதம்பி!
பொறுத்தது போதும் புறப்படு தம்பி
புரட்சியை நீநம்பி!
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 மனோந்திரா
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
