மனோந்திராவின் கவிதைகள்
*****************************************************************
1. கார்த்திகை தீபம்
(எழுசீர் ஆசிரிய விருத்தம்)
திருப்பரங் குன்றத் திருமலை மேலே
திருவிளக் கேற்றிடும் நாளில்
உருப்படி யாக இதுவரை தீபம்
உலகினர் ஏற்றியே வந்தார்
ஒருதருக் காதான் உச்சியில் இருக்க
ஒருசிலர் அதனையே உடைக்க
அருகினில் கற்றூண் இருந்திடக் கண்டே
அதில்விளக் கேற்றிட வந்தார்
நீதியை ஆள்வோர் நீதியைத் துறந்து
நிதம்பல தீர்ப்புகள் உரைத்தார்
ஆதியில் தீபம் ஏற்றினர் மக்கள்
அவ்விடம் என்றவர் சொன்னார்
காதினில் பூக்கள் சுற்றிடும் அவர்தம்
கருத்தினை ஏற்பதற் கில்லை
வீதியில் மக்கள் மோதிடும் நிலைதான்
விளைந்திடும் என்பது உண்மை
மதங்களுக் குள்ளே பிரிவுகள் இன்றி
மக்களும் வாழ்கிறார் ஒன்றாய்
மதவெறி கொண்டோர் மக்களைப் பிரிக்க
மதங்களைத் துணைக்கழைக் கின்றார்
விதவித மாகப் பொய்களைச் சொல்லி
வெறியினை வளர்த்திடு கின்றார்
மதம்பிடித் திட்ட வாரணம் போல
மனிதரை ஆக்கிடு கின்றார்
விழிப்புட னேநாம் இருந்திட வேண்டும்
வெறியுடன் வருபவர் முன்னே!
அழித்திடத் தானே காத்திருக் கின்றார்
அமைதியை சனங்களுக் குள்ளே!
பழித்திட வேண்டும் படர்ந்திடும் நச்சுப்
பாசிசச் செடிகளை இன்றே
ஒழித்திட வேண்டும் சனாதனம் தன்னை
உலகினைக் காத்திட வென்றே
*****************************************************************
2. மத நல்லிணக்கம்
(நொண்டிச் சிந்து)
பாரத நாட்டினிலே- மக்களைப்
பாசிசம் கொன்றுதான் வீசிடுதே!
கோரமு கத்தினையே- மறைத்தது
கோமியம் பருகுது பூமியிலே!
இந்திய தேசத்திலே- இன்றது
இந்துத்து வம்தனை முன்னிறுத்தி
சிந்திட வைக்கிறதே!- மக்களின்
செந்நிறக் குருதியை உண்மையிலே!
அடிப்படை உணர்வுகளைத்- தூண்டி
அடிமைகள் ஆக்குது குடிமக்களை
வடிக்குது நீலிக்கண்ணீர்- நாட்டிலுள்ள
வறியவர் வாழ்வினைப் பறித்துக்கொண்டே
பாபர்ம சூதிதன்னை- முன்னர்ப்
பாழ்பட வைத்திட்ட பாசிசம்தான்
கோபமும் கொப்பளிக்க- முசல்மானைக்
கொன்றுகு வித்தது கூர்ச்சரத்தில்
இசுலாம் மதத்தினிலே- இருக்கும்
இளைஞ ரனைவரும் களைகளென
பசுவினைக் கடவுளென- வணங்கும்
பாசிசப் பைத்தியம் ஏசிடுதே!
ஏசுவை வணங்கிடுவோர்- மதமாற்றம்
என்றுமே செய்பவர் என்றுரைத்து
ஆசிகள் வழங்குதுபார்!- ஒற்றுமை
அழித்திடும் சக்திகள் செழித்திடவே!
திருப்பரங் குன்றமலை- மேலுள்ள
சிக்கந்தர் தர்காவைச் சிதைத்திடவே
விருப்புடன் ஓடிவந்து- வழக்கத்தை
மீறியே பாசிசம் சீறுதுபார்!
துரோகியாம் சாவர்க்கரைத்- தலைமேல்
தூக்கிக்கொண் டாடுதே ஊக்கத்துடன்
அரோகரா என்றுசொல்லித்- தமிழ்த்தெய்வம்
அறுமுகன் தன்னையே திருடுதுபார்!
சமயச்ச கிப்பினையே- வளர்த்துச்
சனங்களைக் காத்திடத் தினமுழைப்போம்!
நமதுயிர் இருக்கும்வரை- மத
நல்லிணக் கம்தனை வெல்லவைப்போம்!
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 மனோந்திரா
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
