கவிஞர் சூர்யமித்திரன் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | கவிஞர் சூர்யமித்திரனின் கவிதைகள் | புதுக்கவிதை | Tamil Kavithai | www.bookday.in |

கவிஞர் சூர்யமித்திரனின் கவிதைகள்

கவிஞர் சூர்யமித்திரனின் கவிதைகள்

***********************************************************

1.

திருநங்கைகளின்
திருமேனியின்
சூட்சும சாரத்தில்
ஆண்மையும்
பெண்மையும்
பாலினமாக
பதுங்கிப் பாய்கிறது.

உயிரியல் கோட்பாட்டின்
உளவுப்பிரிவில்
இதற்கான வரைபடம்
இருக்கிறதா?
என
என் கடவுள்
தேடச்சொன்னார்.

***********************************************************

2.

தேர்ந்தெடுத்த
சிறப்பங்காடி பொருட்களின்
கூடை
பில்லிங் பிரிவில்
இடம்மாறிப்போக
ஊடலில்பிரிந்த
மேனாள் காதலர்களின்
கடுகடுகோபம்
கூடைகளை நிறைத்தது.

***********************************************************

எழுதியவர் : 

✍🏻கவிஞர் சூர்யமித்திரன்
குடியாத்தம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *