எ.எச்.எம் தில்சாத் கவிதைகள்
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
1. செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம்
இரத்தமும் சதையும்
இல்லா ஒருவன் இவ்வுலகை ஆள வருகிறான்!
இதயத் துடிப்பு ஏதுமின்றி
எங்கும் இமயம் போல உயர்கிறான்!
தூக்கம் தொலைத்த
கண்கள் இல்லை
சோர்வு அறியா மூளை அவனுக்கு!
காகிதத் தரவுகள் அனைத்தையும்
தன் கைக்குள் வைத்திருப்பான் காவலுக்கு!
மின்னல் வேக சிந்தனைகள்…
மின்சார நரம்பு மண்டலங்கள்!
மனிதம் தோற்ற இடத்திலெல்லாம்
இனி மகுடம் சூடுவான்
இவன் ஒருவன்!
உணர்வு இல்லா ஒரு மன்னவன்
தன் உத்தரவால் உலகை இயக்குவான்!
காலம் கடந்த அறிவினாலே
நம் கையிருப்பைப் பறித்து
ஆளுவான்!
இரும்புத் திரை போட்ட அரசாங்கம்
அது இருப்பதோ ஒரு துகளில்!
மனிதன் படைத்த இப்படைப்பு
ஒருநாள் மனிதனையே மிஞ்சும்
பெரு வியப்பில்!
*****************************************************************
2. மன்னிப்பு
“மன்னிப்பு”
குற்றத்திற்குப் பிடித்த வார்த்தை
குற்றம் செய்யும் முன்
தைரியம் இருக்கும்…
செய்த பிறகு
‘மன்னித்து விடு’
மிக மென்மையாய்
நாவில் புரள்கிறது
பிழையை உணரவல்ல
தப்பிக்க எடுத்த
ஒரு அழகான முகமூடி
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 எ.எச்.எம் தில்சாத்
அட்டாளைச்சேனை, இலங்கை.
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

