பித்துப் பிடித்ததடியே முத்து ரத்தினம்
மனம் வைக்கணும்!
தாலி கட்டணும்!
பாதிக் கண்ணால் ஏன் பார்க்கணும்?
முழுசாய் பார்ப்பதில் எதற்கடி சிக்கனம்?
வாய்மேல வாய் வைத்து பொத்தணும்!
பாய்மேல பந்திவைத்து உண்ணணும்!
கச்சித மாஉன்ன கணக்கு பண்ணணும்!
எண்ணிக்கை குறையாம முத்தத்தை எண்ணணும்!
(பித்துப்)
காத்துல சுத்துற காத்தாடிஎன்
மண்டையில் சுத்துதே!
தொண்டை தண்ணி வத்துதே!
பத்தி எரியறேன்உன் முன்னாடி
பாத்துகிட்டு நிக்கற!
போச்சுதுஎன் நித்திர!
கண்ணாடி மனசுக்குள் கல்வீசுற!
கண்ணுக்குள் குத்தூசி சொருகுற!
பல்லுக்குள் இருப்பது பாம்புநாக்கா?
உதட்டைஏன் இப்படி தடவுற?
நிக்கறேன்! நெளியுறேன்!
சொக்கறேன்! திக்குறேன்!
நான்இல்லை….. ஒரு நிலையில்….
வாடீஎன் மடியில்.
(பித்துப்)
சுளை சுளையாகநி லாப்பழத்தை
பிய்த்தெறியும் வித்தைய
வானம்கற்ற தெப்படி?
எம்மனச பிய்த்தெறியும் உன்னிடம் தான்
ஆகாசம் கற்றதோ
கச்சிதமா அப்படி?
உடைந்த நிலாத் துணுக்கை ஒட்ட வைக்கும்
மறுபடி யும்வானம் பாரடி!
உடைந்தஎன் மனசையும் ஒட்டவைக்க
வானத்தி டம்பாடம் போய்ப்படி!
உடைக்கிற வேலை ஏன்?
ஒட்டுற வேலை செய்!
பிறைநிலாநான்… நிறைநிலவாய்….
பெண்ணே மாற்றிவை!
(படித்துப்)
ஜூலை 2020
நவகவி
