அதிசயத்திலும் அதிசயம் (Athisayathilum Athisayam) – நூல் அறிமுகம்
சிறார்களின் உயரத்தில் நின்று சிந்திக்க வைக்கும் கதைகள்…
சிறார் இலக்கியத்தில் நூற்றுக்கும் மேலான நூல்களை எழுதியவர். மத்திய அரசின் சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்றவர். தனது 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, என தமிழ் இலக்கியத் தளத்தில் அறியப்பட்ட எழுத்தாளர் உதயசங்கர். தற்போது தமுஎகச வின் மூத்த தலைவர்களில் ஒருவர். சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து செயல்பட்டு வருகிறார். ரயில்வே துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று பணி ஓய்வு பெற்றவர். இலக்கியப் பணியின் உந்துதலுக்காக )..
பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன்… எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ள “அதிசயத்திலும் அதிசயம்,”-சிறார் கதைகளை வெளியிட்டு சிறுவர்களின் சிந்தனைக்கு மேலும் மேலும்..வெளிச்சம் பாய்ச்சி புக்ஸ் ஃபார் சில்ரன் சிறார்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது…
இந்தப் புத்தகத்தில் உள்ள ஒன்பது கதைகளும் நாடுகள், அரசன், அரசனை திருத்தும் அறிவாளி எனும் கதாபாத்திரங்களோடு மக்களின் அவஸ்தைகளை, சமூக எதார்த்த அறிவியல் பார்வையோடு மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் அருமருந்தாக சிறுவர்களுக்குத் தந்துள்ளார் எழுத்தாளர் உதயசங்கர்.
முன்னுரையில் எழுத்தாளர் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்கள் குறிப்பிடும்போது,” மறந்து போவதை மீண்டும் நினைவு படுத்திக் காட்டும் வேலைகளைத் தான் கலைகளும், புத்தகங்களும்..செய்கின்றன. அதுவும் நகைச்சுவையையும்…நையாண்டியையும்…இணைத்துத் தரும்போது அது சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று விடுகிறது ” எனக் குறிப்பிட்டுள்ளது இக்கதைகளைப் படித்து உணரும்போது அனைவருக்கும் உண்மை என்று உணர வைக்கும் உண்மையாகும்.
எதையும் கேள்வி கேட்டுப் பழக வேண்டும் என்று சிறுவர்களுக்குப் பட்டியூர் பராக்கிரமணி அரசனின் கதை கூறுகிறது.
மக்களாகிய நீங்கள் முற்பிறவியில் செய்த பாவம் என்று சொல்லி அரசன் மூடநம்பிக்கைகளுக்கான அத்தனை விதைகளையும் விதைக்கிறான்.. கோயில், மசூதி,தேவாலயம், எனவும், ஜோதிடம்,குறி சொல்லும் கூட்டம்..என மக்களின் அறியாமைக்கு, வெளிச்சத்தின் வேராக உதயமான வயதான கிழவர்,தன் கைத்தடி ஊன்றி,..அறிவை நம்பச் சொல்லி. எதையும் ஏன், எதற்கு,எப்படி.. என்று கேளுங்கள்..என சிந்திக்கத் தூண்டுகிறார்…
மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று சொல்லி பாமரத்தனமாக இருந்த பட்டியூர் தற்போது அறிவூராகவும், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், என அறிவுத் திருக்கோயில்கள் நிறைந்து மக்களுக்கான செம்மாந்த வாழ்க்கை வாழ்வதற்கான பாதையைக் காட்டி நிற்கிறது கதை. உற்சவ ஊர்வலத்தை முற்போக்காக சிறார்களுக்கு உணர்த்துகிறது “எதையும் கேள்வி கேள்” கதை….!
அன்றாட அதிசயங்களைக் காட்டச் சொல்லி மக்களைத் துன்பப்படுத்தும் அதிசய ராஜாவுக்கு.. அறிவுக்கரசன் காட்டிய பாதை “அதிசயத்திலும் அதிசயம்”” கதை … திறந்த வாயோடு இருக்கும் ராஜாவை தரிசிக்க முடிகிறது…
சமோவா,ரொங்கோவா எனும் இரு தீவையும், தீவுகளின் 24 மணி நேர வித்தியாசத்தையும் அறிவியல் வரைபடத்தோடு நமக்கு காட்சிப்படுத்துகிறது.
“கோழியைக் காணோம் ” கதை…கோழியூர் நாட்டு கோழிகள் எத்தனை வகையானவை என்பதை குறிப்பிட்டுச் சொல்வது அதிசயம் தான். சிறார்கள் இதை வாசிக்க வாசிக்க பிரியாணி சாப்பிட்ட வாசனையோடு புத்தகத்தை நேசித்து மீண்டும் வாசிக்க தூண்டும் எனக் கூறலாம்.. ஆமைக் கோழி, கடக்கோழி, கம்பான்கோழி, கருங்கோழி,சம்பான்கோழி, சைனாக் கோழி,சிலுப்பாக்கோழி, கழுகுக்கோழி, போந்தாக் கோழி …
இதேபோல் “ஓடினான் ஓடினான்” காட்டூர் நாட்டு ராஜாவின் மாளிகைகளைச் சொன்ன விதம் படிக்கும் சிறார்களுக்கு உற்சாகத்தைத் தரும்… பளிங்கு மாளிகை, செங்கல் மாளிகை,,கருங்கல் மாளிகை, தேக்கு மாளிகை,தேவதாரு மாளிகை,,மூங்கில் மாளிகை, கோபுர மாளிகை,,பூமிக்கு அடியில் ரகசிய மாளிகை… என ராஜாவின் அரண்மனைகள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்பதைக் கற்பனைச் சிறகு கொண்டு ஆசிரியர் பறக்கும் விதம் உணர முடிகிறது. இக்கதையில் ஊரின் குலதெய்வமாக இருந்து காக்கும் ஊர்க்காகத்தை கதாபாத்திரம் ஆக்கிய கதாசிரியரின் கற்பனையைப் பாராட்டலாம்…
எல்லாக் கதைகளும் சிறார்களின் சிந்தனையில் படிக்கப் படிக்க மத்தாப்புக்களாக ஒளி வீசி அறிவு மணம் கமழும் ஆளுமைகளை உருவாக்க இக்கதைகள் உதவும் என்பது கிண்ணம்.
உனக்கு இடமில்லை கதையில் காட்டு ராஜா வரிப்புலி ‘ டிமிக்கோ ‘வைக் குட்டிமான் அடக்கிக் காட்டிய தந்திரத்தையும் படிக்கப் படிக்க இனிமை தரும்..
இச் சிறார் கதைகளில் நாடுகளாக…
கோழியூர், காட்டூர்,ஆவூர்,சோலையூர்,ஆத்தூர்,ஆதனூர்,ஜெர்மனி,காந்தளூர்,பட்டியூர், என ஒன்பது நாடுகளாகவும்,
இதை ஆளும் ராஜாக்களாக…
சேவலான்,ராஜா,செல்வராஜா,,
டிமுக்கோ( வரிப்புலி ), அடி ராஜா, விசித்திர மானவர்,தேவன்,காந்தராஜா,பராக்கிரம ணி ,
இந்த ராஜாக்களுக்கு கதையில் மக்களுக்கான அரசர்களாக(ஹீரோக்களாக)…
பாட்டி, ஊர்க்காகம், அறிவுக்கரசன், குட்டி மான், ஆதவன், கலம்செய்கோ ( குயவர் ),சங்கர்,மதியழகன், வயதான முதியவர்…
இப்படி…நாடு,ராஜாக்கள், அவர்களை திருத்தும் மக்களின் ராஜாக்கள்…என கதாபாத்திரங்கள் சிறுவர்களின் மூளையை சிந்திக்க வைக்கும்..நிஜம்.
பழங்கதைகள் பேசுவது தவிர்த்து சிறார்களுக்கான வாழ்வியல் எதார்த்த நிஜக் கதைகளைப் பேசுகிறது எழுத்தாளர் உதயசங்கரின் அதிசயத்தில் அதிசயம்…
வாழ்த்துகளும்… பாராட்டுகளும்…
நூலின் தகவல்கள் :
நூல் : அதிசயத்திலும் அதிசயம் (சிறார் கதைகள்)
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை 18
பக்கங்கள் : 48
விலை : ₹50/-
நூல் அறிமுகம் எழுதியவர் :
– ஆரிசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

