உதயசங்கருக்கு சாகித்ய அகாடமி [பால புரஸ்கார்] விருது udhayasankarukku sahithya acadamy[bala puraskar] virudhuஉதயசங்கருக்கு சாகித்ய அகாடமி [பால புரஸ்கார்] விருது udhayasankarukku sahithya acadamy[bala puraskar] virudhu

 

எழுத்தாளர் உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது “ஆதனின் பொம்மை” என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளதுAadhanin Bommaiவானம் பதிப்பகத்திற்கு கிடைக்கும் இரண்டாவது பால புரஸ்கார் விருது. முதல் விருது 2020ம் ஆண்டு நண்பர் யெஸ்.பாலபாரதி எழுதிய “மரப்பாச்சி” சொன்ன ரகசியம் புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.

தோழர் உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார்.இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள்,7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7,ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள்,கவிதைத் தொகுப்புகள் 5,ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளிவந்துள்ளன.

சிறார் இலக்கியத்தில் 1991 முதல் எழுதிவருகிறார்.இதுவரை கதை மற்றும் நாவல் உட்பட 51 புத்தகங்கள்,ஒரு சிறார் பாடல் புத்தகம்,67 சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

-லட்சுமிகாந்தன்

இந்த புத்தகம் வாங்க :  https://thamizhbooks.com/product/aadhanin-bommai/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *