நூல்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
ஆசிரியர்: வி.பத்மநாபன் (தமிழில் யூமா வாசுகி)
விலை: ரூ.30
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ulagai-ulukiya-10-natkal/ 

“உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்னும் நூலை மலையாள எழுத்தாளர் வி.பத்பநாபன் இயற்றியுள்ளார். அதை யூமா. வாசுகி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.முதலாளி வர்க்கதிடமிருந்து ஒரு நாட்டை எவ்வாறு தொழிலாளர்கள் தங்கள் பிடியில் கொண்டு வருகிறார்கள் என்பதே இக்கதையின் மையக்கருவாகும். இதுவே இந்நூலின் முக்கிய சாராம்சமும் ஆகும். இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களான வசந்தியக்கா,குமரன், செல்வி, ஆகியோர் மூலம் உரையாடலாக இந்நூலின் உட்க்கருத்து வெளிக்கொணர பட்டுள்ளது.

நூல் அறிமுகம்: ஜான் ரீடு எழுதிய 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்' (ச.வீரமணி) - Bookday

இந்நூலை படிப்பதன் மூலம் ரஷ்ய சோசலிசப் புரட்சி எவ்வாறு ஆரம்பித்தது?, அந்நாட்டையும் மக்களையும் அடக்கி ஆண்டவர்கள் யார்?, மக்களுக்கு ஏற்ப்பட்ட துன்பங்கள் துயரங்கள் என்ன?, ரஷ்ய மக்கள் எப்படி அந்த ஆட்சிக்கு முடிவுகட்டினார்கள்? மற்றும் புதிய ஆட்சியின் சிறப்பு அம்சங்கள் என்ன? என்பதை மிகவும் எளிமையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் புரியும் படியாக இயற்றப்பட்டுள்ளது.

மிகவும் அருமையான படைப்பு…

நூல்: உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
ஆசிரியர்: வி.பத்மநாபன் (தமிழில் யூமா வாசுகி)
விலை: ரூ.30
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ulagai-ulukiya-10-natkal/ Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *