உலக வங்கி   ஆண்டுதோறும் வெளியிடும் 189 நாடுகளில் “தொழில்கள் செய்ய வசதிகளின் தரவரிசை” அறிக்கை” (ஈஸ் ஆஃப் டூயிங் பிசினஸ்)  வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது  என்று 20, ஆகஸ்ட்டு 2020 அன்று எல்லா ஆங்கில ஊடகங்களிலும்முக்கிய  செய்தியாக வெளியிட்டன.  அதனையொட்டிய விவாதங்களும் சூடு பறக்கின்றன.  மின் அம்பல வலை தளத்தில் பேராசிரியர் ஜெயரஞ்சன் இந்த பிரச்சினையை  தெளிவுபடுத்திப் பேசிவருகிறார் அதென்ன உலக மக்களை உலுக்குகிற செய்தியா என வினவலாம். ஆம் உலுக்கும் செய்திதான்.

 2018ம் ஆண்டில் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்த பால் ரோமர்   அறிக்கை  உள்ளதைச் சரியாக குறிப்பிடவில்லை எனக் கூறி தனதுபதவியை ராஜினாமா செய்தார். இப்படி  கடந்த இரண்டுவருடமாக புனையப்பட்ட புள்ளிவிரங்களை  கொண்ட அறிக்கைகள் என விமர்சித்தவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்று  உலக வங்கி நிர்வாகம் குற்றம் சாட்டி மறுத்து வந்தது. 

 இந்தியாவிலும் புள்ளிவிவர  புனைவுகள்  உண்மயைக் காட்டுவதில்லை என்று  தாராள மனப்போக்குள்ள பொருளாதார நிபுணர்களும் ரிசர்வ் வங்கி கவர்னர்களும் கருத்துக் கூறியதை அறிவோம். உலக வங்கியும், மோடி அரசும் இந்த கருத்துக்களை புறம்தள்ளியதை அறிவோம். 

. உலக வங்கியில் பணியாற்றிய பொருளாதார நிபுணர்கள் கடந்த காலங்களில் செயல்பாடுகளை    விமர்சித்ததுண்டு. இது புதிதல்ல ஏற்கனவே ஸ்டிக்கிளிட்ஸ் என்ற பொருளாதார நிபுணர் உலக வங்கியின் நடைமுறைகளை விமர்சித்தார். அதைவிட  உலக வங்கியின் பொருளாதார நிபுணராக பணிபுரிந்த ஜான் பெர்க்கின்ஸ், சிலி. பனாமா. மற்றும் இந்தோனேஷியாவில்   உலக வங்கியின் தலையீடுகளை  இரண்டு புத்தகங்களாக  வெளியிட்டு உலகறியச் செய்தார்.“ சாகடிக்கும் உதவி”( டெட் ஏய்டு) என்ற நூலில் உலக வங்கியில் பணிபுரிந்த சாம்பியா நாட்டு  பொருளாதார நிபுணர் டொம்பிசா மோயோ உலக வங்கி கடனால் விளைந்த பலன்களையும், சரிவுகளையும் பட்டியலிடுகிறார்.

உலக வங்கியின் அங்கமான ஐ. எம். எஃப் வங்கி தலைவராய் இருந்த பிரான்சு நாட்டு சோசலிஸ்ட்கட்,சியை சார்ந்த பொருளாதார நிபுணர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் என்பவர் கடன் வழங்கும் முறையில் சமத்துவ கோட்பாட்டை புகுத்த முயற்சித்ததை விரும்பாத நிர்வாகமும், அவரை அரசியல் எதிரியாக பார்த்த பிரெஞ்சு ஜனாதிபதியும் இவர் மீது வன்புணர்ச்சி, மற்றும் விபசார விடுதி நடத்தியவர் என்ற குற்றசாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்டு துரத்தி அடிக்கப்பட்டார். (பின்னர் அது பொய்யான குற்றச்சாட்டு என்பது பின்னர் தெறிந்தது) 

இவ்வாறு உலக வங்கி கடந்த காலங்களில் அதனுடைய சூழ்ச்சிகள் நிபந்தனைகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான போதெல்லாம் ஜகநாதர் தேர்கால் தன்னை இழுத்துவந்த பக்தர்களையே நசுக்கிக்கொண்டு ஓடுவது போல் நாடுகளை நசுக்கி ஓடத் தயங்கியதில்லை.

கடைசியாக இந்த மதிப்பீடுகள்  தவறானவை ஓரவஞ்சகமானவை என்று உலக வங்கியின் தலைவராக இருந்த பால் ரோமரே கூறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 

எதற்கும் அசராத ஈஸ்வர சக்தி கொண்ட அந்த உலக வங்கி இன்று இறங்கிவந்து.2018-2019-2020. ஆண்டு அந்த அறிக்கைகளின் குளறுபடிகளை தேடப் போவதாக கூறியது  ஊடகங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. எனவே அது முக்கிய செய்தியானது வியப்பொன்றுமில்லை.

  பாமரர் பார்வைக்கு அப்பால் உலக வங்கியின் நிர்வாக அறையிலே  அதிக வாக்குகளைக் கொண்ட நாடுகளிடையே கோபமும்  அதிருப்தியும் இருப்பதை காட்டுகிறது. ஊசலாடும் மேலை நாட்டு தாராள மய அறிவுலகம் உலக வங்கியின் நடைமுறைகளை கடந்த காலம் போல் சகித்துக் கொள்ள விரும்பவில்லை.என்பதும் வெளிப்படுகிறது. 

உலக வங்கியின் அந்தரமும் உலக பொருளாதார வளர்ச்சிப் போக்கின் கடந்த 70 ஆண்டு வரலாறும் அறியாமல் இதனைப் புரிவது இயலாது.மக்கள் நலனை பேணுகிறமுறையில் பொருளாதாரம் அமைய வேண்டுமானால் இந்த வரலாறு அறியப்பட வேண்டும். .

இரண்டாம் உலகயுத்தம் முடிந்த தருவாயில் (1950களில்) உலக வர்த்தகத்தை தடையில்லாமல் நகர்த்த   மேலை நாட்டு அரசுகளால் உலக வங்கி பங்கு நிறுவனமாக நிறுவப் பட்டது. டாலரை சர்வதேச அந்தஸ்துள்ள நாணயமாக ஏற்றுக் கொள்கிற நாடுகளுக்கு கடன் உதவி,மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்கும் அமைப்பு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது.அன்று சோவியத்யூனியன்  உலக வங்கியை பங்கு நிறுவனமாக கட்டமைக்காமல், கூட்டுறவு அமைப்பாக கட்டி அமைக்க எடுத்த முயற்சிகள் தோற்றன. உலக வங்கி ஒரு வகையில் உலக வர்த்தகத்தோடு சோவியத் உறவு கொள்வதை தடுக்கும் கருவியானது.

பங்கு நிறுவனத்திற்கும், கூட்டுறவு அமைப்பிற்கும் என்ன வேறுபாடு.?

 உலக வங்கியின் கட்டமைப்பு விதிப்படி ஒவ்வொரு நாடும் அதன் தேச மொத்த வருவாய் அடிப்படையில் பங்குகள் கொடுக்கப்படும். ஒருகிராம் தங்கம் ஒரு டாலர் என்று மதிப்பை அடிப்படையாக வைத்து ஒரு நாடு தேச மொத்தவருவாயை டாலரில் கணக்கிட்டு பங்குகளை வாங்க வேண்டும்.  உலக மொத்த வருவாயில் அதன் சதவீதத்தை கணக்கிட்டு அதன் விகிதப்படி வாக்குகள் வழங்கப்படும். . டாலர் இல்லையானால் தங்கமாக கொடுக்க வேண்டும். அந்த தங்கம் அமெரிக்காவில் பாதுகாப்பாக வைக்கப்படும். 

அதே நேரம் கூடுதல் முதலீடு செய்தால் கூடுதல் வாக்குகள் பெறமுடியாது. இன்று அமெரிக்காவிற்கு 15 சாத வாக்குகள் உண்டு இந்தியாவிற்கு 3சதவாக்குகளே உண்டு  சீனாவிற்கு 4சத வாக்குகளே உண்டு. உலக வங்கியின் வாக்கு சதவீதம் நிலையானது மாறாது. எனவே வங்கி நிரவாக குழு தேர்வில் அமெரிக்காவே தீர்மாணிக்கும் சக்தியாக இருக்கும். கூட்டுறவு என்றால் வாக்குரிமை சமம்மாக இருக்கும் நிர்வாக தலைமை ஜனநாயக முறையில் அமையும் பணக்கார நாடுகள் வாக்குகளை பெற பிற நாடுகளின் வளர்ச்சிக்கு போட்டி போட்டு உதவும் நிலை உருவாகும்.

உலக வர்த்தகம் தரமான சரக்குகளின் மலிவாக கிடைக்கும் சந்தையாக மாறும்.   உலக வங்கி நாடுகளுக்குத்தான் கடன் கொடுக்கும்  தனியாருக்கு கடன் கொடுக்காது என்ற ஒரு வேறுபாடு தவிர மற்றபடி மேலை நாட்டு தனியார் வங்கிகளுக்கும் அதற்கும் வேறுபாடு இல்லை.  . அதற்கென ஐ.எம்.எஃப் என்ற வங்கி பின் நாளில் உலக வங்கியால் அமைக்கப்பட்டது. இது அரசிற்கும், தனியார் நிறுவனங்களுக்கும்  சலுகைவட்டிக்கு கடன் கொடுக்கும் அமைப்பாகும். இந்த கடனை அடைக்கத் தவறினால் தனியார் வங்கியிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி அடைக்க வேண்டும். 

உலக வங்கியின் கடன் உதவிமட்டுமல்ல முதலீட்டு ஆலோசனைகளையும் அரசியல் பொருளாதார நிலவரங்களையும்  தொழில்நுட்ப மாற்றங்களின் தாக்கத்தையும் நாடுகளின்  இயற்கை வளங்களையும் தகவல் களஞ்சியங்களை தயாரித்து வெளியிடும் பணியையும் செய்கிறது. சுருக்கமாக சொன்னால் ஐக்கிய நாட்டு சபைக்கு இணையாக செயல்படும் அமைப்பாகும்.  ஒரு வேறுபாடு ஐ.நா சபை உலக அமைதியை நாடுகிற அமைப்பு, உலக வங்கி நிர்வாக தலைமைக் கூடாரம்   மேலைநாட்டு முதலாளித்துவத்தை உலக நாடுகள் மீது திணிக்கிற வேலையைச் செய்கிறது.   கடந்த 70 ஆண்டு வரலாறு அதைத்தான் காட்டுகிறது. உலக வங்கியின் தலைமைக் கூடாரத்தில் நடக்கும் சொற்போர் வரவேற்க வேண்டிய ஒன்றாகும் என்பதையும் அந்த வரலாறு காட்டுகிறது.   

 உலகவங்கியின் உதவி இரண்டு யுத்தங்களால் சிதலமடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுத்தது ஆனால் பிற நாடுகளின் பொருளாதாரத்தை நோஞ்சானாக்கியது.  இந்த முரண்பட்ட வளர்ச்சிப் போக்கைப் பற்றி.உலக வங்கி நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது  உலக வங்கியின் கொள்கை சரியே என்று கூறுகிற நிபுணர்கள், ஒரு நாட்டு பொருளாதாரம் நோஞ்சானாக இருப்பதற்கு   உலக வங்கியல்ல அந்த நாட்டில் ஊழலும் நிர்வாக சீர்கேடும் காரணமாகும் அங்கே ஜனநாயகமில்லை. உலக வங்கியால் முன்னேறிய ஆசியப் புலிகளைப்பாருங்கள் ஹாங்காங்,தென் கொரியா.தைவான் சிங்கப்பூர்  என்று காட்டுகிறார்கள் 

 உலக வங்கியின்  கொள்கை சரியல்ல என்று கருதுபவர்கள் உலக வங்கி  உதவி பெறும் நாடுகளின் ஊழல் மலிந்த ஜனநாயக உரிமைகளை மறுக்கும்  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக புள்ளிவிவர மோசடி செய்வதால் பொருளாதார நெருக்கடி வருகிறது என்கின்றனர்.  குறிப்பாக மத வெறி ஆட்டம் போடும் மோடி அரசு முதலீட்டு வசதிகளை  எளிமைபடுத்தியுள்ளது என்ற மதிப்பீடு ஒரு மோசடி என்று காட்டுகிறார்கள் .அதாவது உலக வங்கிதான் சர்வாதிகாரிகளுக்கும் ஊழலுக்கும் துணைபோகிறது. 

இதில் கவனிக்க வேண்டியது இருவருமே அதாவது எதிர்ப்பவர்களும்- ஆதரிப்பவர்களும் நவீன பொருளுற்பத்திக்கும் சேவைக்கும் உயிர் நாடியாக இருக்கும் பணம் அது டாலரானாலும், ரூபாயானாலும் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. என்பதை பார்க்க தவறுகிறார்கள். அதாவது பணம் ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த உழைப்புசக்தியின் உண்மை மதிப்பை பிரதிபலிக்கிறதா! அல்லது சந்தை மதிப்பின்  விலையை அடிப்படையாக கொண்டதா! என்பதைக் கவனிப்பதில்லை. மேலை நாடு உருவாக்கி உலக வங்கி பின்பற்றுகிற “மணி மார்க்கெட் கோட்பாடே” இன்றை நெருக்கடிகளின் ஊற்றுக்கண்  என்பதை சீன- அமெரிக்க  பொருளாதார கட்டமைப்பை ஒப்பு நோக்கினால் தெளிவாகும் இன்று உலக வங்கி நிபுணர்களின் கருத்து மோதல் உலகவங்கியை ஒழுங்கமைக்க உதவினால் நாம் மகிழ்ச்சி கொள்வோம். 

 

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *