நூல் அறிமுகம்: உள்ளே வாருங்கள் – தி.தாஜ்தீன்

நூல் அறிமுகம்: உள்ளே வாருங்கள் – தி.தாஜ்தீன்

 

 

 

“உள்ளே வாருங்கள்” எனும் இந்நூல் மனம் என்னும் மந்திர சாவியை கொண்டு உள்ளிருக்கும் நம் மனம் என்னும் மாயகுகையை காண முடியும். நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் நம் மனத்தால் தூண்டப்படுகிறது. நாம் எண்ணுகின்ற எண்ணங்களும் நம் மனமே காரணம் என்பதை அனைவரும் அறிந்ததே.

அத்தகைய மனம் வலுப்பெற உறுதி பெற சில விஷயங்களை கடைபிடிக்க இந்நூலின் ஆசிரியர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

*யாரும் வரலாம்* என்ற தலைப்பில் தினந்தோறும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம்.யாரும் யாரிடமும் பேசுவதற்கான நேரமும் சூழலும் அமைவதில்லை.தின்பதும், கழிப்பதும்,எழுவதும்,அலைவதும் எதையோ தொலைத்துவிட்டு அவசரமாய் தேடுவது போல் எந்நேரமும் பிசியாகவே காலை எழுந்தது முதல் எல்லாவற்றிலும் பரபரப்பு அவசரம்.

கழிப்பறையில் குளியலில், குளித்தலில், உண்ணலில், புறப்பாட்டில், பயணத்தில் ஏன் இந்த அவசரம் எதற்கு இந்த அவசரம் என்று நமக்கு நாமே சிந்திக்க வேண்டும் என ஆசிரியர் கவலை படுகிறார்.

*அழகு* என்ற தலைப்பில் அழகான சொற்களை கொண்டு நாம் பிறரை அழைக்க அழைக்க நாமும் அழகாகி விடுகிறோம் நம் எண்ணங்களும் அழகாகி விடுகிறது என்ற உண்மையை உணர்த்திஉள்ளார் .

*அறிவற்றது* எனும் தலைப்பில் கடல், நீர், காற்று, மண்டலம், கோள்கள், தூரம், எடை, சூரிய வெப்பம், கதிர்வேகம், அணு எல்லாவற்றையும் அளக்க முடியும் இதை அறிவியல் என்கிறோம். அளக்க முடிந்தால் தான் அவை அறிவியல், அளக்க முடியாதவை சில உள்ளன. அன்பு, காதல், இரக்கம், கடவுள், எண்ணம், மனம்,இன்பம், துன்பம், பயம் இவை யாவும் உள்ளம் சார்ந்தது.

இவற்றிற்கும் அகலம் நீளம் ஆழம் உயரம் பரிமாணங்கள் உண்டு. இதன் வடிவம் உணர்வுகள் என்று பிரித்துக் காட்டியுள்ளார்.

*தொடங்கு* எனும் தலைப்பில் நாம் எந்த செயலை செய்ய இருந்தாலும், எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? என்ற தயக்கம் எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படுகிறது. நாம் எதையும், எங்கு தொடங்கினாலும், எப்படி தொடங்கினாலும் அது சரியான பாதையில் சென்று சேர்ந்து விடும்.

எடுத்துக்காட்டாக ஒரு நதி தன் பாதையில் சரியாக செல்வதைப்போல தங்கு தடையின்றி செல்கிறது. அதேபோல் நாமும் எந்த ஒரு செயலை செய்ய இருந்தாலும் தயக்கமின்றி உடனே தொடங்க வேண்டும் என்று ஆசிரியர் ஊக்கப்படுத்துகிறார்.

*சிக்கல்* எனும் தலைப்பில், சிக்கல் என்பது ஒரு சவாலான, கடினமான சூழ்நிலையாகும். இது ஒரு தீர்வு தேவைப்படும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். சிக்கல்கள் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம், அவை தனிப்பட்ட, தொழில்முறை அல்லது சமூக அளவில் இருக்கலாம்.

சிக்கல்களைத் தீர்ப்பது என்பது ஒரு திறன் ஆகும். சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல நுட்பங்கள் உள்ளன என ஆசிரியர் கூறியுள்ளார். அவைகள் பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.

*தீர்வுக்கு வழி* எனும் தலைப்பில், ஒரு பிரச்சனையின் தீர்வை கண்டுபிடிக்க உதவும் ஒரு செயல்முறையாகும். இந்த செயல்முறையானது சில படிகளை உள்ளடக்கியது.
பிரச்சனையைப் புரிந்துகொள்வது,பிரச்சனை என்னவென்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

பிரச்சனையின் அளவு, அதன் தாக்கம், மற்றும் அதை தீர்க்க தேவையான தகவல்கள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
தீர்வுகளை உருவாக்குவது

பிரச்சனையைப் புரிந்துகொண்ட பிறகு, அதை தீர்க்கக்கூடிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். இந்த தீர்வுகள் புதுமையானதாகவும், செயல்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

தீர்வுகளைப் பகுப்பாய்வு செய்வது உருவாக்கப்பட்ட தீர்வுகளைப் பகுப்பாய்வு செய்து, அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகளைக் கண்டறிய வேண்டும்.தீர்வை செயல்படுத்துவதில் ஏற்படும் எந்தவொரு சவால்களையும் சமாளிக்க வேண்டும் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

*தயக்கம்* எனும் தலைப்பில்,தயக்கம் என்பது நாம் ஏதோ ஒன்றை செயல்படுவதைத் தடுக்கும் ஒரு மனநிலையாகும். இது பயம், குழப்பம் அல்லது நிச்சயமற்றதன்மை போன்ற காரணங்களால் ஏற்படலாம். தயக்கம் ஒரு நபர் தங்கள் இலக்குகளை அடைய அல்லது தங்கள் முழு திறனை அடைய தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த சக்தியாக இருக்கலாம் என ஆசிரியர் கருதப்படுகிறார்.

தயக்கத்தின் காரணங்கள் சிலவும் வகைபடித்திஉள்ளார்.
தயக்கத்தின் பல காரணங்கள் உள்ளன.

முதலில் பயம்: தயக்கம் பெரும்பாலும் பயத்தால் ஏற்படுகிறது. ஒரு நபர் தோல்வியடையும் அல்லது வெறுக்கப்படும் பயம் அவர்களை செயல்படாமல் தடுக்கலாம்.

இரண்டாவது குழப்பம்: தயக்கம் குழப்பத்தால் ஏற்படலாம். ஒரு நபர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தால், அவர்கள் செயல்படாமல் இருக்கலாம்.

மூன்றாவது நிச்சயமற்ற தன்மை: தயக்கம் நிச்சயமற்றதன்மையால் ஏற்படலாம். ஒரு நபர் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால், அவர் செயல்படாமல் இருக்கலாம்.
நான்காவது

தடைகள்: தயக்கம் ஒரு நபர் ஒரு புதிய செயலை முயற்சிக்க அல்லது ஒரு இலக்கை அடைய தடுக்கும் ஒரு தடையாக இருக்கலாம்.

ஐந்தாவது விரக்தி: தயக்கம் ஒரு நபருக்கு விரக்தியை ஏற்படுத்தலாம், ஏனெனில் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியாது என்று உணர்கிறார்கள்.

ஆறாவது,நம்பிக்கை இழப்பு: தயக்கம் ஒரு நபருக்கு அவர்களின் திறன்களில் நம்பிக்கையை இழக்கச் செய்யலாம் என கருதியுள்ளார்.

தி.தாஜ்தீன்
தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி
முதுகலை ஆசிரியர்
ஆவணியாபுரம்

புத்தகத்தின் பெயர்:உள்ளே வாருங்கள்
ஆசிரியர்:கவிஞர். இரா.சரவணமுத்து
வெளியீடு:நாம் தமிழர் பதிப்பகம்,2013
விலை:50

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *