காலையில் துயிலெழுந்தேன்
படுக்கையை உற்றுப் பார்க்கையில்
விரிப்பின் ஓவியம்
உவகை தந்தது
கோலக் குடிலும்
குதித்தாடும்பிள்ளைகளும்
பாலைப்பருகிடும் பூனைக்குட்டிகளும்
காதல் பேசும் இளசுகளும்
துள்ளித்திரியும் மான்களும்
முற்றத்துக்குருவிகளும்
மா பலா வாழைகளும்
அம்பாரியில்லா ஆனைகளும்
ஆர்ப்பரிக்கும் நதிகளுமாய்
ஒரு குதூகல உலகத்தைப் படைத்த
அந்தக்கடைநிலை ஊழியன்
இப்போ
குடிக்கவும்
உடுக்கவும்
ஏதுமின்றி
எங்கோ ஒரு
வறுமைப் பாலைவனத்தில்……..
– உமா பாலு