Pendirum Undukol 1Pendirum Undukol 1

அன்று ஒரு விடுமுறை தினம்… எல்லோருமே வீட்டில் அமர்ந்து ஒரு புதியபடத்தின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மகன் அடிக்கடி போய் டெக்கில் பட்டனைத் தட்டி ஓடவிடுவான் ஒருகட்டத்தில் கோபம் வந்து “ஏன்டா”இப்படி பண்றேன்னு கேட்டேன். அட போங்கப்பா இதெல்லாம் யாரு பார்ப்பதுஅந்த சீன் போகட்டும் என்றான். புதிய தலைமுறைகள் பொறுமை இழந்து கிடக்கிறது.முன்பெல்லாம் வெளியூர்ப் பயணமென்றால் ஒரு வார இதழோ அல்லது நாவலோ வாங்கியப்பிறகுதான் பயணிப்போம். இன்றோ, செல்போனை பார்த்தபடி பயணிக்கிறோம். பக்கத்தில் அழகிய காட்சிகள் இருந்தாலும்கூட..

இதையெல்லாம் மனதில் வைத்து இளையதலைமுறையும் ரசிக்கும்படி கவிதை எழுதுவதில்ஆற்றல் உள்ளவர்தான் கவிதாயினி உமாமகேஸ்வரி.நல்ல படைப்பாளி மட்டுமல்ல; பட்டிமன்ற பேச்சாளரும் கூட… அவருடைய கவிதைகள் அடங்கிய நூலை கோவை இலக்கிய சந்திப்பில் பெற்று வாசித்தேன்; சுவைத்தேன்.ஆண்டாளின் வெண்ணெய் முத்தங்கள் எனத் தலைப்பிட்ட கவிதையில் அவர் கொஞ்சம் நகைச்சுவையோடு ஓரிடத்தில் சொல்கிறார்;இலவசமாய் பெற்றுக்கொள்ள எவரும் விரும்புவதில்லை

வாங்கிய நொடியில்வட்டியோடு திருப்பிச்செலுத்த விழையும்விடுதல் அறியா விருப்பக்கடன் முத்தம்- என முத்தத்தைப்பற்றி சொல்லிவிட்டு அந்தப்பத்தியின் கீழே “ஆனாலும் அநியாய வட்டி” என அடைப்புக்குறி இடுகிறார்.மீச்சிறு சுதந்திரம் என்ற கவிதையில் எனக்குஉலகத்தைப் பார்க்கக் கிடைக்கும் கொஞ்ச இடைவெளியே பயணத்தின் போது கிடைக்கும் சன்னல் ஓர இருக்கையில்தான். அதைக்கூட ஏளனம் செய்கின்றாயே அதை எப்படி உணர்த்துவேன் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

சன்னலோர இருக்கையில் / என்னதான் இருக்கிறதென /ஏளனம் செய்கிறாய்… / எனது கண்களால் / உலகைக் காண்பதற்கான / மீச்சிறுசுதந்திர இடைவெளியே / சன்னல் என்பதனை /எப்படி உணர்த்துவேன் உனக்கு…?வாய்மையே வெல்லுமா…? என்ற கவிதையின் இறுதியில் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார். ஆம் கவிதையின் இறுதிப் பத்தியும் அதுதான். இதோ…உங்கள் இறுதி அறிக்கைகள் / எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் / இறுதியில் மட்டும் எழுதிவிடாதீர்கள்/ வாய்மையே வெல்லுமென்று…எல்லா கவிதைகளிலும் முற்போக்கு எழுத்தாளர்களு க்கே உரித்தான சமூகசாடல்களை குறிப்பிட்டுள்ளார்.

கூடவே ஆணாகவும்…. என்ற கவிதையில் கவிஞர்களெனத் தன்னை அடையாளப்படு த்தும்பலர் உள்ளுக்குள் சாதாரண மனிதனாக ஆண்களுக்கே உரிய ஆணவத்தோடுதான் இருக்கிறார்கள் என சொல்ல வருகிறார் என நினைக்கிறேன். அதில் உண்மையும் இருக்கிறது. இதோ….இட்டு நிரப்ப இயலா / இடைவெளியில்/ உன் அகமும் புறமும்/ என்னவனே யான் அறியேன் /புறத்தில் கவிஞனாக வாழ்கிறாய் /அகத்தில் கூடவே ஆணாகவும்,,, / பெண்டிரும் உண்டுகொல்…?இந்தத் தலைப்புதான் இந்த நூலுக்கான தலைப்பு. அந்த தலைப்பிலும் ஓர் கவிதை அந்த கவிதையில் இங்கே மரத்துக்கு சேலை கட்டினால்கூட அது என்னவென்று பார்க்கும் கூட்டம் இருக்கிறது.

எங்கும் பாலியல் வன்முறைகள் என அவற்றை சாடுகிறார். இதோ ஒரு சிறந்த வரியை நீங்களும் பாருங்கள்.காமுகர்களின் கண்களில் / பட்டுவிடக்கூடாது என்று / பதைபதைக்கிற தாயும் / உலர்ந்துகொண்டிருக்கும் / அப்பாவின் வேட்டிக்குள் / தன் உள்ளாடைகளை /ஒளித்துவைத்துக்கொண்டிருக்கும் / வெளிறிய பத்துவயது அரும்பும் / விரல் நடுங்க / இக்கவிதையினை / எழுதிக்கொண்டிருக்கும் நானும் / இன்னும் உயிர் வாழ்வோர் /பட்டியலில்தான் இருக்கிறோமா,,,!/ நல்ல கேள்விதான் கவிதாயினி!மேலும் பல கவிதை நூல்களை வெளியிட வாழ்த்துக்கள் பல…ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம் என்பது போல சில கவிதைகளை குறிப்பிட்டுள்ளேன். மேலும் அறிய விரும்புகின்றவர்கள் வாங்கிப் படியுங்கள்.

பெண்டிரும் உண்டுகொல்…?

ஆசிரியர்: கோவை மீ.உமாமகேஸ்வரி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,

7. இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை-600018,

தொ.பேசி: 044-24332924

பக்: 80 விலை: ரூ. 70/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *