உமா மோகன் கவிதைகள்!

உமா மோகன் கவிதைகள்!

கொரோனா

~~~~~~~~~~

கோடு இல்லாத வேலி இல்லாத

மாவட்ட மாநில எல்லைகளுக்குக்

கொரோனா மையால் வரைந்த கோடுகள்

அதிகாரத்தின் கணிணிகளில் மட்டும் தெரியும்

 

வேலியைத் திறந்துவிட

மனம்வை மனம்வை என்று

இரவுபகல் பாராத விண்ணப்பங்கள்

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாலும்

வேண்டத்தான் வேண்டும் ஈபாஸ்

 

வீட்டைச்சுடும் ஓட்டப்பங்களை

சந்துகளில் சுட்டபடி வேண்டுமா வேண்டுமா

எனக் கேட்கிறார்கள்

 

அண்ணன் என்னடா தம்பி என்னடா

ஈபாஸ் உலகத்திலே

அவனவன் தோளில் அவனே அமர்ந்து காடுகரை சேர்க

இருக்குமிடத்திலிருந்தே இட்டேன் வாய்க்கரிசி

இணையவழியாக எனக்

குமுறியபடி கூந்தல் உலர்த்துகிறாள் ஒருத்தி

இழுத்துக்கொண்டிருக்கிறது என்பதற்குச்

சான்றிதழ் அனுப்ப முடியுமானால்

பாலூற்ற வருவேன் என்கிறான் பையன்

 

 — உமா மோகன்    

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *