Uma Mohan’s Poem. உமாமோகனின் கவிதை

உமாமோகனின் கவிதை




காசு கொடுத்து தனியாக
சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி புத்தகங்கள்
வாங்கி வருவார் அப்பா
வீட்டுச்சுற்று முடிந்து இரவலுக்கும் போகும்

பகுதி பகுதியாய் தினசரியில் வரும் பலன்களுக்காகக்
காத்திருப்பாள் அத்தை
சின்ன பாதம் வைத்து
ராசி தாண்டி குதித்துவிடும் நட்சத்திரங்களோடு
எப்போதும்
வாய்க்கா வரப்பு தகராறு

சமயத்தில் எந்த ராசிக்கு நற்பலனோ
அதுவாக மாற்றி
வாசித்துக் கொள்வதுண்டு எதிர்வீட்டு மாமா

அன்றாடம் சேனல்தோறும்
ராசிபலன் கேட்டு முடிந்தபின் வியக்கிறாள்
அம்மா
ஒரே அளவாய்ப்பிடிக்க வராத ரவாலட்டுக்காக
தன்னை ஏசும் மாமியார்
ஆளுக்கொன்றாய் நாளை உருட்டும் சோதிடர்களை
ஒன்றுமே சொல்வதில்லையே என

இப்போது வசதி
அலைபேசி முழுக்க கொட்டுகிறது பலன்கள்
இத்தனை வருடம் பார்த்தும்
யாரை யார் பார்த்தால்
தனக்கு நல்லது எனத்தெரியாத அப்பா
நினைவாக
குறித்துவைத்துக் கொள்கிறார் பெயர்ச்சி நாளை

எப்போதாவது நடக்கிறதா
என சரிபார்த்தீர்களா
அப்பாவிடம் கேட்க நினைத்து விழுங்கிக்கொண்டேன்
நானும்
சரிபார்க்காத பலன்கள் நினைவில்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *