அடிச்சுவடு என்ற பெயரைக் கேட்டவுடன் முடிவெடுத்துவிட்டேன் இப்புத்தகம் ஒருவரின் வரலாற்றைக் கூறும் என… 1964ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெறும் புரட்சியாளனின் கதை.. நகுயென் வான் ட்ராய் இவர் தான் இந்த கதையின் நாயகன் தனது தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.. திருமணம் முடிந்து 19 நாட்களில் எதிர்பாராத சம்பவம் நடந்தேறுகிறது. வெளியே சென்றுவிட்ட தனது கணவர் நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்று காத்திருந்த மனைவிக்கு அதிர்ச்சியை கொடுத்தது கணவன் காவல்கும்பலுடன் அடையாளம் தெரியாமல் இழுத்து வரப்பட்ட வருகை. “உனது கணவர் வெடிகுண்டுகளை எங்கே வைத்திருக்கிறார் “என்ற வார்த்தை கேட்டு எதுவும் புரியாமல் “எனக்கு எதுவும் தெரியாது” என்று பதிலளித்தவாறு அழுது கொண்டிருக்கிறார் குயென்.. கணவரை சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்கின்றனர்…
அந்நொடியில் “டிராய் நான் உன்னை அளவுகடந்த நேசிக்கிறேன் “என்று கத்துகிறாள்.. அடுத்தநாள் இவளையும் கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர் காவல்துறையினர் ..அங்கு புரட்சியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய பல்வேறு தோழர்களை சந்திக்கிறார்.. அவர்களிடமிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்கிறாள்.. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் சகோதரி எக்ஸ் மற்றும் ஒய் அமெரிக்கர்களின் நகக்கண்களில் ஏற்றுவதற்கு விதவிதமான ஊசிகள் தண்ணீரில் முகத்தை அழுத்தி கொல்வதற்கு தண்ணீர் தொட்டிகள் போன்ற பொருட்கள் அடங்கிய வதை கூடத்திலிருந்து கைகளில் ரத்தம் சொட்ட செல்லுக்கு திரும்பிய சகோதரி எக்ஸ் ஐ பார்த்து குயெனுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது சிறைச்சாலையில் தோழர்கள் அவளுக்கு உறுதுணையாக ஆதரவாக இருக்கிறார்கள் நிறைய பாடல்களை கற்றுத்தருகிறார்கள்..
தையல் வேலை களையும் கற்றுத் தருகிறார்கள் ..இடையே ட்ராயைப் பற்றி அதிகம் சொல்லுமாறு மனைவியிடம் கேட்கிறார்கள்.. கேட்பதற்கான காரணத்தையும் சொல்கிறார்கள் “இதுபோன்ற புரட்சியாளனின் வாழ்க்கை வரலாறு நம் புரட்சிப் பாதையில் எதிரிகளை அதிகம் வெறுக்க வைக்கும் …முக்கியமாக இன்னும் வேகமாக செயல்பட நமக்கு உத்வேகத்தை அளிக்கும்.. எனவேதான் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறோம்” இப்புத்தகத்தை படிக்கவேண்டிய ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டிய வாசகம்… மீண்டும் கதைக்கு வந்தால் , எதிர்பாராதவிதமாக மனைவியை விடுதலை செய்துவிடுகின்றனர் .உடனே தன் கணவர் எந்த சிறையில் இருக்கிறார் என தேடி ஓடுகிறாள். இறுதியில் தன் தேடலில் வெற்றியும் அடைகிறாள். இக்கதையில் காவல்துறையினர் எடுக்கும் முக்கியமான ஆயுதம் சுகபோக வாழ்க்கைக்காக ஆசைகளைக் காட்டி புரட்சியாளர்களை பொம்மை அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் அடிபணிய வைப்பது தான் ..இது ட்ராயிடம் எடுபடவில்லை.
“எண்ணற்ற எம் மக்கள் அமெரிக்காவினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்து என்னால் ஒரு பொழுதும் சுகபோக வாழ்க்கைக்கு அடிபணிய முடியாது” என்கின்ற வார்த்தை புரட்சியாளனுக்கே உரிய கர்வத்தை கொண்டது ..ஏன் டிராய் கைது செய்யப்பட்டார்? ஏன் இவ்வளவு துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றார்? காரணம் பொம்மை அரசால் தெற்கு வியட்நாமை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஆலோசகர் மக்நராவை கொலை செய்ய வெடி குண்டு வைத்தது தான்… அம்முயற்சியில் பெரும் காயங்களுடன் உயிர் பிழைக்கிறார் மக்நரா. அது ஒரு துரதிருஷ்டவசமான செய்திதான் புரட்சியாளனுக்கு. ஆகஸ்ட் மாதம் கணவனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது தெரிந்தும் மனைவி அத்தண்டனையை ஒத்திப்போட பல விதங்களில் முயற்சி செய்கிறார் திடீரென ஒரு செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவுகிறது..
புரட்சியாளரின் உயிருக்குப் பதில் அமெரிக்கக் கர்னலின் உயிர் ..அதாவது இங்கு ட்ராய்க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் வெனிசுலாவில் அமெரிக்க கர்னலின் உயிர் போகும் என்பதுதான்.. பகுதி முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருக்க மனைவி கணவனை பார்க்க ஆசையாய் சிறைச்சாலைக்கு ஓடுகிறாள் ..ஆனால் கணவனை பார்க்க இயலவில்லை.. அழுதுகொண்டே திரும்புகிறாள்.. அடுத்தது என்ன? என்ற கேள்விகளுக்கு அப்புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பதில் பெற முயலுங்கள்…. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்..
உன் அடிச்சுவட்டில் நானும்
சொல்லியது : பான் தி குயென்
எழுதியது: ட்ரான் தின் வான்
தமிழில் : பொன்னிவளவன் பக்கங்கள் : 112
அச்சு :கிரியேட்டிவ் ஆப்செட்,
சென்னை 600034
விலை :80
வெளியீடு :
அலைகள் வெளியீட்டகம்
97/55, என் எஸ் கிருஷ்ணன் சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024
தொலைபேசி :044- 24815474
முதல் பதிப்பு : 2000
– மதிப்புரை வினிஷா
மாவட்ட தலைவர்
இந்திய மாணவர் சங்கம் (sfi)
ஈரோடு மாவட்டம்