உணராமல் உளறாதே - கவிஞர் பாங்கைத் தமிழன் (Unaramal ularathea-paangai thamizhan)

காதலர் தினமென்று நாளொன்றை வகுத்தே
ஆணையும் பெண்ணையும் அதனிலே இணைத்தார்!
ஆணிலும் பெண்ணிலும் அடங்குமோ காதல்?
அலைகடல் சங்குக்குள் அடங்குமோ? சொல்லீர்!

அவனியில் ஆயிர மாயிரம் உயிர்கள்;
அவை களினுள்ளேதான் அலைகடல் காதல்!
காதலே உலகினை இயக்கிடும் சக்தி;
கடலதில் தன்னிலே கலந்த வான்போலே!

காதல்தா னென்பது பிரித லறியாது
கடலினை அலைகளோ பிரிவது யேது?
காகிதம் பதிந்திட்டக் கருமையே காதல்;
காகிதம் கிழிந்திடின் கருமை யழியாதே!

பூவினைக் கொடுத்திட்டும் பொருட்களைக் கொடுத்திட்டும்
புணர்தலின் தொல்லையா புனிதமாம் காதல்?
வண்ணங்கள் பார்த்திட்டும் வருணங்கள் பார்த்திட்டும்
வருவது அல்லவே; வற்றாத காதல்!

பாசாங்கு அற்றதும் பதுங்காமல் இருப்பதும்
பல தடைகள் தாண்டிடும்
பார் போற்றும் காதல்!

அதைப் பரிகாகாசம் செய்வோரும்

பசிக்காக உண்போரும்
பாவிகள் பாவிகள்
மா….பாவிகள்.

எழுதியவர் 

கவிஞர் பாங்கைத் தமிழன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *