உணவு மழைத் தீவு - ஆல்பர்ட்

நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர் அகிலா ,நிகிலா ரவி ஆகியோர்.

அவர்களின் தாத்தா ஒரு அற்புதமான கதை சொல்லி. உணவு மழைதீவு என்ற கதையை குழந்தைகளுக்கு சொல்கிறார்.

அதாவது வானத்தில் மழை பொழிவதற்கு பதிலாக, அந்தத் தீவில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உணவுகள் மழை போல் பொழிகிறது. ( இட்லி மழை, பணியார மழை ,காபி டீ மழை, இடியாப்ப மழை ….) மூன்று வேலையும் தேவைக்கு உணவு கிடைத்து விட்டால் ஆகா அற்புதமான வாழ்க்கை என்று தானே நினைக்கிறீர்கள்… ஆனால் அங்கு ஒரு கடும் சிக்கல் எழுகிறது.

மேற்கொண்டு அங்கு வசிக்க முடியாது உழைத்து சாப்பிட்டால்தான் நல்லது, என்று அந்தத் தீவில் இருக்கும் மக்கள் வெளியேறுவார்கள். அப்படி என்ன சிக்கல் நிகழ்ந்தது என்பதை தெரிந்துகொள்ள இந்த நூலை வாசித்து பாருங்கள் . குழந்தைகள் மட்டுமல்லாமல் நாமும் வாசித்து மகிழ இப்புத்தகம் மிக அருமையான தேர்வு.

 

நூலின் தகவல்கள் 

நூல் : உணவு மழைத் தீவு

ஆசிரியர் : ஆல்பர்ட்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள்: 64

விலை : ₹50.00

நூலைப் பெற :  44 2433 2924

 

நூலறிமுகம் எழுதியவர் 

பூங்கொடி பாலமுருகன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *