*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்

Unkown Hindi Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. *நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைநான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?

ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.

யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.

உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.

ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.