சரவிபி ரோசிசந்திராவின் "உண்மையான காதல்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

சரவிபி ரோசிசந்திராவின் “உண்மையான காதல்” கவிதை

“உண்மையான காதல்” கவிதை

உண்மையான காதல் என்று
ஒன்று உள்ளது
உன் கண்ணைக் கண்ட பின்பே தானே உண்மையானது

காற்றை போல காதல் கூட உருவமற்றது
நேற்று இன்று நாளை போல
நாளும் வளர்வது

காதலுக்குள் தேய்ப்பிறை வளர்வதில்லையே
புரிதலுக்குள் வளர்பிறை
தேய்வதில்லையே

உன்னைப் பார்க்கத்
துடித்தக் கண்கள் புண்களானது
பேசாத நாட்கள்
தினமு‌ம் ரணங்களானது

பார்க்கவில்லை பேசவில்லை
என்றபோதிலும்
பாசம் கொஞ்சம் குறையவில்லை
இருவர் மனதிலும்

அழுது தொழுது பார்க்கத்
துடித்தேன் உனது விழியே!
பார்த்த பின்பு
ஊமையானது எனது மொழியே!

பக்கமிருந்தால்
பாசம் பேசுமென்ற கூற்று
உண்மை இல்லையே
தொலைவில் இருந்தும்
தொட்டுக்கொள்ளும்
நினைவு உண்மையே

தலைகோதும் தாயை போல
உன்னைப் பார்க்கையில்
பாலை கூட சோலையாகும்
உந்தன் பார்வையில்

சதியெனும் கைப்பிடிக்குள்
சிக்கிக்கொண்டது
காதல் புரிதலெனும் மதிக்குள்
முழுமையானது

கணவன் மனைவி உறவுக்குள்
ஒளிவுமறைவு இல்லையே!
காலம் நூறானாலும் காதல்
குறைவதில்லையே!

*********************************

எழுதியவர்:

சரவிபி ரோசிசந்திரா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *