Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள் Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள்

கவிதை : உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் – ம.தேவி

1.
உன் நினைவுகள்
என்றும் என்னிடத்தில்
விடுதலைக்காக
விவாதம் செய்ததில்லை..
மகிழ்ந்தோ
என் பிடிவாதத்தாலோ
மனச்சிறைக்குள் அடைபட்டுவிட்டன…
நானோ?!
என்றும்
அதனுள்ளேயே அடங்கிவிடுகிறேன்..
ஆயிரம் ஆயிரம் அம்புகள்
எதிரே நின்று துளைத்தாலும்…
இல்லை என்பதற்கு
எதிர்மறையாய்
அடக்கம் செய்யப்படும்
இடத்திலும் அடங்காமல்
நிச்சயமாய் ஒலிக்கும்
உனைப்பற்றிய
என்
மௌனமொழிகள்.

 

2.
காடு கடந்து
மலை கடந்து
மேகம் உரசும் முகடுகளோடு
நின்றாலும்
அங்கும் என்னை
உரசியபடியே தான்
நிற்கின்றன
உன்
நினைவுகள்.

 

எழுதியவர்

–ம.தேவி

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *