அப்போதும்
இப்போதும்
கேட்டார் ….
நீ
யாரென ?
சில வேளைகளில் அவருக்கு தெரிந்து இருக்கலாம்,
எனக்கென்னவோ தெரியாது
போயிருக்கலாம்.
நான்
திரும்பவும்
அவரிடம் நான் யாரெனக்
கேட்டேன்.
அவரும்
சிரித்தார். நானும் சிரித்தேன்.
மறந்து விட்டு விளையாடுகிறாயா
என்றார்.
உடனே சொன்னார்.
உன்னையறியாமலே, இவ்வளவு நாளும்
எனக்கு அது வேண்டும் , இது வேண்டும் என
வேட்கை உணர்வுடன் அலைந்தாயே?
முதலில்
அவனுக்கு வேண்டும்
இவனுக்கு வேண்டும்
எனத் தேட ஆரம்பி…..
பின்
உன்னை அறிவாய்.
உனக்கும் கிடைக்கும் எனக் கடந்துப் போனார்.
அந்தத் திசையை நோக்கி நின்றேன்.
‘அவரும் …..
எதையோ
யாருக்காகவோ தேடிக் கொண்டிருந்தார் ‘
எழுதியவர்
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

