அமெரிக்கா நீயென்னக் கொம்பா?
அடுத்த நாட்டோடு வம்பா?
தாமென்ற ஆணவத் திமிரடா
தாழ்ந்தால் உன்நிலை உமியடா!
உலகம் அனைத்தையும் ஒன்றாய்
விழுங்கிடப் பார்க்கிறாய் நன்றாய்!
கலகம் செய்வதே வேலை
கண்டிப்பாய் உதைபடுவாய் நாளை!
அன்றுமுதல் இன்றுவரை நீயோ
அடுத்தவரை அழிக்கின்ற பேயோ?
பன்றியாய் உன்புத்தி ஆனதே
பலநாடுப் பாழாய்ப்போனதே!
கன்றினைத் தாயிடம் பிரிக்கிறாய்
குருவியின் கூட்டினைக் களைக்கிறாய்!
நன்றுசெய் வான்போல் நடிக்கிறாய்
நாயினைப் போலவே பிழக்கிறாய்!
வாலைப் பலதிசை நீட்டுறாய்
வாயைப் பலபடி காட்டுறாய்
கோலைப் பிடித்திடில் குரங்காவாய்
கோணல் புத்தியில் மரம்தாவாய்!
பேடியே நீபோ ஓடியே
பேரிடர் வந்திடும் கோடியே!
நாடியே நல்லது சொல்கிறேன்
நடக்காவிடில் உன்னை வெல்கிறேன்!