கவிதை : உன்னதங்களின் ரகசியம் - Dr ஜலீலா முஸம்மில்

கவிதை : உன்னதங்களின் ரகசியம் – Dr ஜலீலா முஸம்மில்

 

 

 

 

சின்னப் பரிசுகளுக்குள்
அடர்நேசமும்
சிறு வார்த்தைகளுக்குள்
பெருவாழ்வும்
சிறு பனித்துளிக்குள்
சூரியனின் சுடராய்
நுழைந்துகொள்வதுதான்
உலகின் மிகப்பெரும் இரகசியம்

சிறு திருப்திக்குள் திருந்தி விடும் ஆழ்மனத்தாபங்களும்
சிறு புரிதலில் பிரிந்து செல்லும் பெருங்கோபமும்
சிறு தலைக்கோதலில்
மறந்து போகும் வருத்தங்களும்
நேசத்தை உயிர்ப்பிக்கும்
சான்றுகளன்றி வேறு என்ன?

வளைந்து நெளியும்
வாழ்வின் பாதையில்
மரணம் முளைக்கும் முன்
மன்னிக்கவும்
மெல்லிய நேசத்தால்
முற்றுகையிடவும் கற்றுக் கொள்வதில் பிழையென்ன இருக்கிறது?

நாவுகள் அடங்கிக் கிடக்கலாம்…
எங்கிலும் இறைந்து கிடக்கும்
நினைவுகள் அடங்கி இருக்குமா?
நம் மௌனத்தில் அமைதி இருக்கலாம்…
மனச்சில்லூறு எப்போதும் அமைதி கொள்ளுமா?

 

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *