ஒரு பயண நூல் போல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத இந்திய மக்களின் துயரம் குறித்த ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல். ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக எவ்வளவு பெரிய முன்னெடுப்பை கும்பெனியும், வெள்ளையரசும் எடுத்திருக்கிறது என்பதிலிருந்தே, அது எவ்வளவு பெரிய லாபத்தை கொடுத்திருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
உப்பு கடத்தலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட உயிர் வேலி என்பது சீனப் பெருஞ்சுவருக்கு இணையானதாக குறிப்பிடப்படுகிறது என்றால் பாருங்கள், அது எவ்வளவு பெரிய வேலை என்று.

நான் முதலில் வேலி என்று நினைத்ததும் சிறைச் சாலைகளில் காணப்படும் சுருள் கம்பி போல அடர்த்தியா போட்டுருப்பாங்க என்று தான் நினைத்தேன். வாசித்துப் பார்த்தால் அது உயிர் வேலி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது என்ன வேலி என்பதுதான் இந்த நூல்.
சிந்து நதியிலிருந்து மஹாநதி வரைக்கும் 2300 மைல்கள் வரைக்கும் ஊடுருவ முடியாத வகையில் முள் புதர்களால் ஆன பெரும் முற்புதர்களால் ஆன வேலி. நம்பமுடிகிறதா. இதனை காக்க 12000பேர்.
இந்த வேலி கருங்காலி, இந்திய இலந்தை, கிலாக்காய், சப்பாத்தி கள்ளி ஆகியவற்றை நட்டு வளர்க்கப்பட்டதுதான் அந்த வேலி. இதன் உயரம் 10 முதல் 14 அடி. அதன் அகலம் 12 அடி. அது மட்டுமல்ல முட்களால் ஆன சுழற்சி கொடிகளையும் சுற்றபட்டிருக்கும்.
இங்கிலாந்து நாட்டவர் இந்தியாவிற்குள் உள்ளே வரும் வரை செழித்திருந்த இந்தியா அதன் பிறகு ஏழை நாடாக மறியதை இந்த புத்தக வாசிப்பின் முடிவில் உங்களால் உணரமுடியும். இது மூன்றாண்டு தேடல்.
லஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதையும், பஞ்சத்தில் கூட மக்களை வதக்கிய கும்பெனியின் கொடூரத்தையும் இந்த வாசிப்பை முடிக்கும் போது உணர முடியும்.
நூலின் தகவல்
நூலின் பெயர் : உப்பு வேலி
ஆசிரியர் : ராய் மாக்ஸம்
தமிழில் : சிறில் அலெக்ஸ்
மொத்த பக்கங்கள் : 231
விலை : 400
பதிப்பகம் : தன்னறம்
தொடர்புக்கு : 44 2433 2924
எழுதியவர்

மொ. பாண்டியராஜன்


சீன பெருஞ்சுவர் போல ?
மிகவும் அருமையான நூல்! அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டும்.
மிகவும் சிறப்பாக பதிவு மொ. பா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!