அமெரிக்க இராணுவ கூட்டுகளும், மோடியின் அரசியல் செயல்திறமும் – வே .மீனாட்சிசுந்தரம்அமெரிக்காவோடு ராணுவ கூட்டை வலுப்படுத்தும் மோடி அரசின் (டிப்ளமசி) அதாவது அரசியல் செயல் திறமை அல்லது அர்த்த சாஸ்திர பொருளில் ராஜதந்திரம் (அரசியல் சூழ்ச்சி) விவேகமானதா? இதனால் யாருக்குப் பயன்? என்ற கேள்விகளை இந்திய வட்டார மொழிகளின்  ஊடகங்கள் விவாதிப்பதில்லை.

 இடது சாரிகளைத் தவிர மற்ற அரசியல் தலைவர்களும் ஆழமாகப் பரிசீலிப்பதில்லை. ஏன் எனில் அவர்களது அந்நிய முதலீடுகளுக்கு ஆபத்து ஏற்படுகிறவரை உலக அரசியலைக் கண்டு கொள்ளாத விநோத அரசியல் ஜீவராசிகளாவர். இல்லை என்றால் தாதுமணலை ஏற்றுமதி செய்வதை வேடிக்கை பார்ப்பார்களா!!

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால், கம்யூனிச ஆக்கிரமிப்பு பரவும் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றிட கம்யூனிஸ்ட்  சதி பரவுமெனப் பயந்து   இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் வட அட்லாண்டிக்.ராணுவ கூட்டு. தெற்காசிய ராணுவ கூட்டு, மைய நாடுகளின் ராணுவ கூட்டு அமைப்புக்களை உருவாக்கி அமெரிக்கா தனது படைத்தளங்களை உலகெங்கிலும் விதைத்தது..

(The North Atlantic Treaty Organization (NATO), the Southeast Asia Treaty Organization (SEATO), and the Central Treaty Organization (CENTO) were consid ered necessary in the postwar period to protect member-coun tries from Communist aggression and conspiracy.)

சோவியத்தும் சோசலிச நாடுகளும் தற்காப்பிற்காக வார்சா ராணுவ கூட்டை உருவாக்கியதால் பனிப் போர் காலகட்டம் உருவாகியது..

 இன்று சோவியத்துமில்லை, வட அட்லாண்டிக் நாடுகளை  ராணுவ ரீதியாக எதிர்க்கிற வலுவுள்ள ராணுவ கூட்டுமில்லை. அதைவிட அவர்களே உருவாக்கிய உலக மய சூழலால் பங்குச் சந்தை மற்றும் நாணய சந்தை வழியாக மூலதனம்  அமெரிக்கா   சீனா ரஷ்யா வியட்நாம். கியூபா உட்பட அனைத்து நாடுகளையும் பினைத்துவிட்டன.

Quad: Opposed to formation of any military alliance in Indo-Pacific: Vietnam - The Economic Times

இந்த சூழலில் இந்திய அமெரிக்க ராணுவ கூட்டு அவசியமா? இதனால் நடக்கப் போவதென்ன?

 ..இந்த ராணுவ கூட்டால் அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்கள் வாங்குவாரின்றி கிடக்கும் ஆயுதங்களை இந்தியாவிற்கு விற்றுவிட ஏதுவாகிறது. சில உதிரிப் பாகங்களைச் செய்ய இந்திய கார்ப்ரேட்டுகளுடன் ஒப்பந்தம் போடலாம். அதாவது அமெரிக்க ஆயுத தொழிலுக்கு மலிவான உதிரிப் பாக வரவு. அந்த ஆயுதங்களை வாங்குகிற இந்திய அரசிற்கு அந்நிய செலவாணி செலவு. இதெல்லாம் தெறியமலா  நமது பிரதமர் மோடி ராணுவ கூட்டிற்குச் சம்மதம் தெரிவிக்கிறார் என கேட்காதீர்!  அவருக்குத் தெறியும் அதைப்புரியப் பாரதிய ஜனதா கட்சியின் ஆத்மாவைத் தேடவேண்டும்

பாரதிய ஜனதா கட்சியின் ஆத்மா பழங்கால மன்னர்கள் போல் இந்து சாம்ராஜ்ய கனவில் மிதக்கிற ஒன்று .பழங்கால மன்னர்கள் போல் ராணுவ  வெற்றிக்கு மூடவெறிபிடித்து  அலையும் பைத்தியம். அது போல் இன்று அமெரிக்காவின் ஆளும் கும்பல் கடந்த 70 ஆண்டுகளாக !1950லிருந்து) நாட்டோ,விற்கு அடுத்து சென்ட்டோ சீட்டோ  கலைந்து போன ராணுவ கூட்டுக்களைப் புதுப்பிக்க வந்த  சோசியல் டார்வினுஸ்ட்டுக்கள்

  (சோசியல் டார்வினிசம் என்பது நிற வெறியைக் குறிக்கும்  அறிவியல் குறியீடு ஆகும்  )

எனவே ராணுவ வெற்றிக்கு மூட வெறி பிடித்தலையும் அமெரிக்க- இந்திய ஆட்சியாளர்களின் ராணுவ கூட்டு யாருக்குப் பயன்படப் போகிறது என்ற கேள்விக்கு விடைகள் தேடி அலைய வேண்டாம்.  ஆனால் இந்த ராணுவ கூட்டால் உலக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், இந்திய மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்  என்பதை அறிவியல் ரீதியாகப் பரிசீலிப்பது அவசியம்.

இந்த இந்திய- அமெரிக்க ராணுவ கூட்டுச் சீனாவிற்கு எதிரானது என்பதைவிட மீண்டும் பனிப்போர் பதட்ட சூழலை உருவாக்குகிறது என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். . இந்த பதட்டம் ஆயுத உற்பத்தியையும், ராணுவ நடமாட்டத்தையும் அதிகரிக்கவைக்கும். நாடுகளின் ராணுவ செலவு பெரும் சுமையாகும்  இதுவே பதட்டத்தை உருவாக்கி. நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதி  சரக்கு வர்த்தக கப்பல்களின் சுமை கூலி உயர்ந்து விலைகளை உயர்த்தும். மக்கள் நலன் பின்னுக்குப்போகும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.. இத்தகைய பின்னடைவிலிருந்து இந்தியா தப்பமுடியாது ஏற்கனவே  நோஞ்சானாக இருக்கும் பொருளாதார கட்டமைப்பு மேலும் தரித்திரத்தைப் பரப்பும். இது ஊகமல்ல. நிபுணர்கள் கணக்கிட்டு காட்டும் உண்மை.

லைவ்மின்ட் என்ற அமெரிக்க இதழின் இந்தியப்பதிப்பு 4-ஜுன் 2020 இதழில் சீன எதிர்ப்பு வெறியைத் தூண்டுவது இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் சீனாவிற்கு அது கொசுக்கடியாக இருக்கும் என்று புள்ளிவிவரத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

சீன எதிர்ப்பு இந்தியாவின் ஏற்றுமதியை வெகுவாக பாதிக்கும் எனவே ராணுவரீதியாகச் சந்திப்பதைவிட வர்த்தக உறவைப் பலப்படுத்துவது நல்லது என்கிறது. (There is no single policy to tackle the complex and multifaceted relationship. Even as India confronts China militarily, the need of the hour is better economic cooperation.)

இந்தியா பிற நாடுகளுக்கு   ஏற்றுமதி  செய்யும் சரக்குகளில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்களின் அளவை இந்த வரைபடம் காட்டுகிறது  சீன மூலப் பொருள் 34.1 சதம் இறக்குமதி ஆகிறது.

 Why falling for anti-China mood could hurt trade

 Even as India confronts China militarily, the need of the hour is better economic cooperation

4 min read . Updated: 04 Jun 2020, 06:41 AM IST

இந்தியாவில் அந்நிய முதலீடு பட்டியலில் சீனா கடைசி இடத்தில் உள்ளது.  சீன முதலீடு 1.5 சதமே.

 

இந்தியாவிலிருந்து சீனா இறக்குமதி  செய்வதும் சீனாவிலிருந்து இந்திய இறக்குமதி செய்வதையும் இந்த வரைபடம் காட்டுகிறது  சீனா இந்தியாவைச் சார்ந்து இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ராணுவ வெற்றிக்கு மூடவெறி பிடித்தலையும்  பா.ஜ.க மூடர்களுக்கும் சீனா இந்தியத் தொழில்களைக் கைப்பற்றிவிடும் என்று பயமுறுத்தும் பொய்யர்களுக்கும் மேலே கண்ட வரைபடங்கள் புத்தி புகட்டும் என்று நம்புவோமாக!!

இந்திய  ராணுவ  வெற்றியைவிட நமது நாட்டின் பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டால் சீனாவோடு மட்டுமல்ல  இந்தியாவைச் சுற்றியுள்ள 26 நாடுகளோடும் வர்த்தக உறவை முதலீட்டு உறவைப் பலப்படுத்துவது அவசியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை

மோடி அரசின் சாதனை 

அரசியலதிகாரத்தை குதிரை வியாபாரம் மூலம் கைப்பற்றிவரும் ராணுவ வெற்றிக்கு மூடவெறி பிடித்தலையும்  பா.ஜ.க மூடர்கள் இந்தியாவின் அந்தஸ்தைக் கீழே தள்ளியுள்ளதை  ஆஸ்திரேலிய நாட்டு லாவி இன்ஸ்டியுட் ஆய்வறிக்கை காட்டுகிறது. இயற்கை வளத்திலும், மானுட ஆற்றலிலும் சீனாவிற்குச் சம மாக இருந்தும்   மோடி அரசின் கொள்கையால்  தொழில்நுட்பத்தில் 11வது இடத்திலும் சர்வதேச உறவில் 6வது இடத்திலும் இந்தியா உள்ளது . பொருளாதார பலத்தில் சீனா முதலிடத்தில்  தொழில்நுட்பத்திலும் சர்வதேச உறவிலும் இரண்டாவது உள்ளது.

இன்றைய வல்லரசு எது

 ஒரு  நவீன வல்லரசின் ஆற்றல்  ராணுவ வெற்றியைத் தேடுவதில் இல்லை  எந்த அளவிற்கு தானும் வளர்ந்து பிற நாடுகளுக்கு வளர உதவுகிறதோ அதுவே வல்லரசு என்ற தகுதி பெறும் என்பது 21ம் நூற்றாண்டு அரசியலாகும்.. இதே சீனா பிற நாடுகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் போல் பலத்தைக் காட்டி மிரட்டினால் அடுத்த நிமிடமே அது தனிமைப்பட்டுக் காணாமல் போய்விடும் ஏகாதிபத்தியவாதிகள் அதனைக்  கூறு போட்டுப் பங்கிட்டுக் கொள்வர் என்பதைச் சீனா அறிந்தே இருக்கிறது.

 

சாம்ராஜ்யவாதி மோடியின் கனவு நிறைவேறுமா?

பாரதிய ஜனதா கட்சியின் இந்து சாம்ராஜ்ய ஆத்மாவின் அவதாரமாக இருக்கும் நமது பிரதமர் கனவு என்ன?    

இந்தியா ராணுவ பலத்தைப் பெருக்கி ஆசியாவின் சூப்பர் பவர் ஆகவேண்டும். தன் கொடையின் கீழ் 26 நாடுகளைக் கொண்டுவந்துவிட்டால்  அமெரிக்கா. பிரிட்டன் பிரான்சு. ஜப்பான் போண்று ஏகாதிபத்திய பட்டியலிலே சேர்ந்துவிடலாம் என்பது தான்… அதற்குச் சீனாவை  ராணுவ நடவடிக்கை மூலம் தோற்கடிப்பது அவசியம் என்று கருதுகிறார்  ஒரு வேளை நூறாண்டிற்கு முன்னால் மோடி அவதாரம் எடுத்திருந்தால் இந்தியாவும் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா கொரியா பிலிப்ன்ஸ் போன்ற நாடுகளை அடிமைப்படுத்தி சூப்பர்பவராக ஆகியிருக்கலாம். காலம் கடந்து அவதரித்ததால் ஆசை நிறைவேறாது போகுமென்பதை. கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால்தான் புரியும்.

19ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20 நூற்றாண்டின் துவக்கத்திலும் முதலாளித்துவ ஆட்சிமுறையின் இளமைக்காலம் பிரிட்டன் பிரான்சு ஜெர்மனி ஜப்பான்  ஏகாதிபத்தியமாகப்  படையெடுப்புகள் மூலம் நாடுகளை அடிமைப்படுத்தின. ஏகாதிபத்தியங்கள் உருவாகின. இரண்டு உலக யுத்தம் இந்த ஏகாதிபத்தியவாதிகளை மேய்க்க வல்ல சூப்பர் ஏகாதிபத்தியமாக அமெரிக்க வந்துவிட்டது. ஜெர்மன் அந்த அந்தஸ்தை இழந்தது. ஜப்பான் தப்பியது அதோடு இன்று ராணுவ பலத்தைக் கொண்டுவளர வல்ல காலணி ஆதிக்க முதலாளித்துவம் இன்று இல்லை.

இன்று முதலாளித்துவம் கிழடு தட்டி சொந்த நாட்டு மக்களையே தவிக்கவிடுகிறது.  ஆனால் அந்த நாடுகளின் அரசியல் பண்பாடு பழைய ஆதிக்க உணர்வுகளை இழக்கவில்லை. இன்று இந்த ஏகாதிபத்தியங்களோடு நட்பு பாராட்டி மோடி  இந்தியாவை சூப்பர்பவர் ஆக்க முயலுகிறார். அதே வேளையில் இந்தியாவை பகடைக்காயாக்கி  தங்களது செல்வாக்கை நிலை நாட்ட ஏகாதிபத்தியவாதிகளும் சூழ்ச்சி செய்கிறார்கள்

இருவர் நலனும் முரண்படுவதைக் காணலாம். அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் அணு சக்தி ஒப்பந்தம் மன்மோகன்சிங் காலத்திலேயே போடப்பட்டன. மோடி கூட்டுச் சேரா நாடுகளின் மாநாடுகளைப் புறக்கணித்து அமெரிக்க விசுவாசத்தைக் காட்டினார்.

அதேமோடி 2020 ல்  அஜர்பெய்ஜான் தலைநகரில் நடந்த கூட்டுச் சேரா நாடுகளின் மாநாட்டில் வலைத்தள மூலம் பங்கு பெற்று இந்தியா அமெரிக்காவின் வால் அல்ல என்பதைக் காட்டினார் அதோடு இந்தியா ஷாங்காய் கூட்டு  உறுப்பினராகவும் அந்நிய செலவாணிக்கு டாலரை தவிர்க பிரேசில் ரஷ்யா. சீனா இந்தியா தென் ஆப்பிரிக்கா அமைப்போடு இணைந்துள்ளது. 

அமெரிக்கா இந்தியச் சீன எல்லையில் மோதல் நடந்தால் நல்லது எனக் காய்  நகர்த்துகிறது. அந்த மோதல் அமெரிக்காவைப் பாதிக்காது. மோடி அதைவிட தென்சீனக்கடலில் ராணுவ மோதல் நடந்தால் சீனா ஜப்பான் ஆஸ்திரேலியா மோதல் நடக்கும் இந்தியாவைப் பாதிக்காது எனக் கணக்கிட்டு  மோடி காய் நகர்த்துகிறார்.

PM Modi extends greetings to soldiers on Infantry Day - The Economic Times

 அதற்காக  அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலிய இந்திய ராணுவ கூட்டை பலப்படுத்த மோடி கரிசனம் காட்டுகிறார். அதே வேளையில் 1996ம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் எல்லையில் இருதரப்பும் துப்பாக்கி  போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோமென செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரு தரப்பும் மதிப்பதைப் பார்க்கிறோம். அதனால்தான் இரண்டு ராணுவமும் தடிகளையும் முள் கம்பி கதாஆயுதங்களையும் வைத்து அடித்துக் கொண்டனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மோடியின் ராஜ தந்திர வலையில் விழுகிற அளவிற்கு முட்டாள் அல்ல.  அமெரிக்க இந்திய ராணுவ உறவு  என்னவெல்லாம் செய்யும் என்பதை மோடி உணரவில்லை. மோடி மட்டுமல்ல இடது சாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை உணர இயலாத மூடர்களாக இருப்பதுவே  நமக்குக் கவலை அளிக்கிறது. அமெரிக்காவோடு ராணுவ கூட்டிற்கு இசைந்த எல்லாநாடுகளும் ஒரு கட்டத்தில்  அமெரிக்க கைக்கூலிகளாக மாறிய ராணுவ சர்வாதிகாரிகளின் ஆட்சியை அனுபவிக்கத் தள்ளப்பட்டன என்பதை மறந்துவிடலாகாது. உதாரணமாக. பிலிப்பைன்ஸ், இந்தோநேஷியா பட்ட அவஸ்தைகளை வரலாறு தெரிந்தோர் அறிவர் எனவே மோடியின் ராஜ தந்திரம் இந்தியமக்களை ஆபத்தில் தள்ளிவிட்டுள்ளது.    

இன்றைய தேதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ தளம் 800 இடங்களில் உள்ளன அது இந்தியாவை   சூப்பர் பவராக்கும் என்று கருதுபவர்கள் அடிமுட்டாள் அரசியல் வாதிகளாகவே இருப்பர். இன்று அந்த பட்டியலில் மோடியின் பெயர் முதலில் உள்ளது. அடுத்து 123 ஒப்பந்தம் போட்ட மன்மோகன் சிங் உள்ளது . 

அண்டை நாடுகளோடு வர்த்தக கலாச்சார உறவைப் பலப்படுத்துவது நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி பொருளாதார கட்டமைப்பை மேன்மை படுத்துவது சீனா உள்ளிட்டு ஆசிய நாடுகளோடு இனைந்து செயல்படுவது ஒன்றே இந்தியாவை நவீன சூப்பர் பவராக்கும்.