நான் தினந்தோறும் வாசல் அமறும் பொழுதெல்லாம்
ஒரு தாய்  எல்லை மீறிய குரல் எழுப்புகிறாள்
கடுமையான கோவத்தில் கத்தி வீட்டை அலறச் செய்கிறாள்…………
வீட்டைச் சுற்றம் செய்யும் மகளை வார்த்தைகளில் கொட்டித் தீர்க்கிறாள்…
அவ்வப்போது சீடுமூஞ்சீக் கோவத்தில் மகனை வஞ்சித் தள்ளுகிறாள்……..

பள்ளி செல்லும் அவள் அண்ணனுக்கு தோசை,
அம்மைக்கு சாப்பாடு என அடுப்பை மூழ்க அள்ளிக் கொட்டுகிறாள்
கோவத்தை மகள்….

மகனோ பணிச்சுமையென
இரவைக்கடந்து வீடுவந்து காலை ஏழுமணிக்கே வாட்சப்பில்
தனது கவலைகளை வண்டிகளாய் ஓட்டி களைத்து போகிறான் தின விடியலில்….

பணமில்லை – பல
சொந்தமில்லை
இறுகிய மனதில் எத்தனை எண்ணங்கள்
எத்தனை ஆசைகள்
வைராக்கியம் நிறைந்த உள்ளத்தில்
வெயிலும் மழையும் மாறி மாறி கொட்டித்தீர்த்தாலும்
ஒட்டுமொத்த வாரத்தைகளை உமிழ்கிறாள் இறுகிய வாழ்வில்
யார் உள்ளார் என எண்ணிய
அவள் ஒருத்தி…
திடமான பெண்ணொருத்தி…….

அவள்  ஒருத்தி
காலை எழுந்து தலை வாரவில்லை
முகத்தை முழுவதுமாக கழுவவில்லை
நெற்றி நிறைய பொட்டுமில்லை
நரைத்த மயிர்களில்
அவள் வயதையும் அனுபவத்தையும் கண்ணாடி கண்டு
திகைக்க காலை ஏழுமணியை கடந்து
கைகளில் கூடை ஒன்றை ஏந்தி……

இத்தனை நிலையிலும்
மகனை சத்தமிட்டு
மகளை கத்தி வீட்டை அலரவைத்து
ஒன்றும் இல்லாத வாழ்வை மனதில் ஏந்தி மகளின் வாழ்வையும்
மகனின் வாழ்வையும்
கத்தி கத்தி
கூப்பாடு போட்டு தினம்
வணங்கி செல்கிறாள்
இந்த நிலை கொடுத்த கணவனின் முகத்தை புகைப்படமாய்…..
ஊர் பார்த்து ஒதுங்கும் கோலமாய் திகழும் பெண்ணொருத்தி்………

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *