ஆதிவள்ளியப்பன்(Adhi Valliappan) எழுதிய உயரப் பறந்த இந்தியக் குருவி : நூல் அறிமுகம், புக்ஸ் ஃபார் சில்ரன் (Books For Children) - https://bookday.in/

உயரப் பறந்த இந்தியக் குருவி : நூல் அறிமுகம்


நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : உயரப் பறந்த இந்தியக் குருவி – சாலிம் அலி 

ஆசிரியர் : ஆதிவள்ளியப்பன்

விலை : 30

தலைப்பு : சூழலியல் 

“ The man of birds “  என்று அழைக்கப்படும் இந்திய நபர் ஒருவரை பற்றி தான் இந்த புத்தகம். நடிகர் ரஜினிகாந்த் அக்ஷய் குமார் நடித்த 2.0 பார்க்காத வரை நம்மில் பலருக்கு சாலிம் அலி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை . வேண்டுமானால் பள்ளிக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  காரணம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் (தற்பொழுது திருத்தப்பட்டு விட்டது) மேன் ஆஃப் பேர்ட்ஸ் என்று  ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. 

இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் இம்மனிதர் பரவலாக பேசப்பட்டார் . ஆனால் படத்தில் பக்ஷிராஜனை வேறு விதமாக காட்சியில் திரியப்பட்டிருக்கும். பாடப்புத்தகத்திலும் இவரது பெயர் சலீம் அலி என்று தான் இருக்குமெ ஒழிய சாலிம் அலி என்று இருக்காது . இந்த புத்தகத்தில் தன்னை “சாலிம் அலி” என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

சிறுவயதிலேயே தன் பெற்றோரை இழந்த சாலிம் அலி தன் மாமாவின் வளர்ப்பில் வளர,  பறவைகள் மீது கொண்ட ஆர்வத்தால் மாமாவின் வீட்டிலேயே விலங்கு காட்சியகம் போன்று பறவைகளை சேகரித்து இருக்கிறார். 

பம்பாயில் ஒரு பகுதியில் தூக்கணாங்குருவி பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது அவர் வெளியிட்டிருக்கும் செய்திகள் நமக்கு வாசிக்கையில் வியப்பைத் தருகிறது . ஒரு ஆண் தூக்கணாங்குருவி கூடு  கட்டும் திறனை பார்த்து தான் , பெண் தூக்கணாங்குருவி இணை சேர்ந்து அந்த கூட்டில் தங்கி முட்டைகளை அடைகாக்குமாம். மேலும் எத்தனை  கூடுகளை கட்டுகிறதோ அத்தனை பெண் குருவிகளையும் ஈர்க்கும் வல்லமை அந்த ஆண் தூக்கணாங்குருவிகளுக்கு இருக்கும் என்ற ஆராய்ச்சிகள் எத்தனை நுட்பமாக இதனை கவனித்திருக்கிறார் என்பதை நாம் உணர வைக்கிறது. 

இந்த இடத்தில் நான் தூக்கணாங்குருவி கூடு பற்றிய கூடுதல் செய்தியையும் கூறவிழைகிறேன். பறவைகளின் கூடுகள் எந்த திசை நோக்கி இருக்கின்றதோ அதற்கு எதிர்ப்புறமான திசையில் புயல் காற்று வீசும் என்பது தான். காரணம் என்னவென்றால் பறவைகளுக்கு இயற்கையை கூர்ந்து நோக்கும் திறன் உண்டு.  அதாவது வடமேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கும் என்று நினைத்தால் , தெற்கு நோக்கி தன் கூட்டை அமைத்துக் கொள்ளுமாம். எத்தனை பெரிய பிரபலமான கல்லூரிகளில் படித்தாலும் அந்த பொறியியல் வல்லுனர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத உண்மை அல்லவா இது..

அதற்குச் சான்று தற்போது வெளிவரும் வானிலை அறிக்கைகள். மரங்களை அழித்துவிட்டு மனிதனின் மூளை சொல்லும் அறிவிப்புகளுக்காக காத்துக் கொண்டு கிடைக்கின்றோம்.

ஒரு பறவை எந்த பழத்தை மட்டும் உண்ணும் ? எந்த இடங்களில் வாழும் ? எந்த இடத்தில் கூடு கட்டும் ? எதற்காக ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள மரங்களில் வாழ்கிறது ? இது போன்ற சிந்தனைகளுக்கு விடை கிடைக்கும் வகையில் , தன் துணைவியை அழைத்துக்கொண்டு காடுகளில் ஒரு மனிதன் உலா வந்திருக்கிறார்.  தமிழ் டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் வருவதற்கு முன்னரே தன் துணையோடு எந்த ஒரு வீடியோ பதிவும் இல்லாமல் காட்டு மனிதனாய் பறவைகளுக்காக வாழ்ந்திருக்கின்றார் இந்த பறவை மனிதர் “சாலிம் அலி”. 

அதுவும் ஓரிரு ஆண்டுகள் அல்ல கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காடுகளில் பறவைகளை உற்று நோக்குவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார். 1934-1939 ஆண்டுகள் இந்திய பறவைகள் குறித்து அவர் கண்ட ஆராய்ச்சிகளை புத்தகமாக எழுதி “The book of Indian birds “ அப்பொழுது டேராடூனில் விடுதலைப் போராட்டத்திற்காக சிறைச்சாலையில் இருந்த திரு.ஜவஹர்கலால் நேரு அவர்களிடம் கொடுத்திருக்கிறார். 

தீவிர வாசிப்பாளரான நேரு அவர்கள் அப்புத்தகத்தை வாசித்து விட்டு தன்மகள் இந்திராவுக்கு பரிசளித்து பலருக்கு இந்நூல் தெரிவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 

20 ஆண்டுகால காட்டு வாழ்க்கை எத்தனை இடையூறுகளை அவருக்கு தந்திருக்கும்,  எத்தனை இரவாடிகளுக்கு மத்தியில் அவர் உறங்கி இருக்கக்கூடும் , கொள்ளையர்கள்,  இயற்கை சீற்றங்கள் என்று அத்தனை சவால்களையும் தாண்டி இன்று பல உயிர்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பலருக்கு வழிகாட்டியாக சாலிம் அலி இருந்திருக்கிறார். அந்த சவால்களை எல்லாம் “A fall of a Sparrow”  தமிழில் சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சி என்று புத்தகமாக பதிவு செய்து இருக்கிறார்.

அவர் மேற்கொண்ட கால கட்டத்தில் அவருக்கு போதிய நிதி உதவியோ அல்லது உதவியாளர்களோ இல்லை உதவி செய்யக்கூடிய அரசு இருந்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான் . ஆனால் அந்த தடைகளை எல்லாம் தாண்டி வந்ததால்தான் இன்று பரவலாக “இந்தியாவின் பறவை மனிதர்”  என்று அழைக்கப்படும் நிலைக்கு அவர் உயர்ந்திருக்கிறார்.

சிறுவயதில் மஞ்சள் தொண்டைச் சீட்டு பற்றி தெரிந்து கொள்வதற்காக சென்ற பி.என்.எச்.எஸ். நிறுவனத்தில் , பின்னாளில் அந்நிறுவனத்தின் உயர் பதவியை வகிக்கும் தலைவராக தன்னை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு கடும் உழைப்பை தந்திருக்கிறார் சாலிம் அலி. 

A strong passion can change a man profession too.. என்றுதான் இந்த புத்தகம் எனக்கு இறுதியாக சொல்ல வரும் கருத்து. செய்யத் துணியும் எந்த காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்ற தாரக மந்திரத்தை இந்த சிறு புத்தகம் நமக்கு கடத்திச் செல்கிறது.

மிக முக்கியமாக பறவையினங்கள் அழிவதற்கு செல்போன் கோபுரங்கள் தான் காரணம் என்று சித்தரிக்கப்படுகிறது . அது முற்றிலும் தவறானது.  நம்மை திசை திருப்புவதற்காகவே அவை திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டன . பறவை இனங்கள் அழிந்ததற்கு மிக முக்கிய காரணம் வனங்களையும் மரங்களையும் அழித்ததும்,  எங்கே கூடு கட்டுவது என்று தெரியாமல் திரியும் பறவை இனங்கள் இருக்கும் கொஞ்சநஞ்ச வயல்வெளிகளிலும் கிடைக்கும் உணவில் உரம் என்னும் நஞ்சு ஏற்றப்பட்டதை அறியாமல்,  தன் தலைமுறையை பெருக்கும் முட்டை ஓடுகள் வலுவிழந்து போனதும் தான்.

ஒவ்வொரு வீடுகளிலும் ஏதேனும் ஒரு பறவைக்காவது  வீட்டு மாடியில் சிறிதளவு தானியங்களை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு பறவை விரும்பி…

 

நூலின் தகவல்கள் : 

பா விமலா தேவி 

பட்டுக்கோட்டை 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *