ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –” உயிர்க்கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து” – து.பா.பரமேஸ்வரி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் –” உயிர்க்கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து” – து.பா.பரமேஸ்வரி

 

 

 

ஆதி முதல் அண்டம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதருக்கு மருத்துவத்தேவை அவசியமாகிறது. ஆதிக்கால மனிதர் இயற்கை வாழ்வியலுடன் அணுக்கமாக இருந்து வந்ததால். மருத்துவத்தேவை அவசியப்படவில்லை. ஆனால் இன்று உயிர்கொல்லி நோய்கள் நாள்பட்ட நோய்கள் தீராத நோய்கள் கொள்ளை நோய்கள் மஹாமாரி பரம்பரை வியாதிகள் தொற்று நோய்கள் என பட்டியல் நீள்கிறது.. இதெல்லாம் உண்மைதானா.. மனிதர்கள் ஏன் இத்தனை குரூரமாக சித்தரவதிக்கப்படுகிறார்கள்? மனித உடல் அத்தனை கடுமையானதா?மனித வாழ்வு அத்தனை சிக்கலானதா? ஏன் இத்தனை வகையான நோய்களில் உழன்று வாழ்நாள் நோயாளிகளாகுகிறார்கள்? ஏன் நோய்களின் கடுமையான தாக்கத்தால் மரணிக்கிறார்கள்? உண்மையில் நோய்கள் என்பவை உயிரைக் குடிக்குமா? எந்த நோயும் நம்மை விட்டு நீங்காதா.. ? வாழ்நாள் முழுதும் நோய்களுடன் கிடந்து போராடத் தான் வேண்டுமா…? நோய்கள் தலைமுறைகளைத் தொற்றிக் கொள்ளுமா.? சக மனிதரிடமிருந்து நோய்கள் நம்மிடம் கடத்தப்படுமா?.. நோய்களுக்கு மூலகாரணம் கிருமிகள் தானா.. ? பல பயங்கரமான நோய்கள் பரவி கொத்து கொத்தாக மனிதரை கொன்று தீர்த்துவிடுமா.? ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு நோய் கடத்தப் படுமா.?. இதற்கு தீர்வே கிடையாதா..? மனிதகுலம் பிணியால் வதங்கி சுருங்கிவிடுமா.. ? மருத்துவர்கள் கூறுவது போல் எந்த நோய்க்கும் தீர்வு கிடையாது கட்டுபாட்டில் தான் வைத்திருக்க முடியும் என்பது தான் விதியா? தீராத நோய்களால் எனது உணவின் மீதான ஸ்நேகம் துண்டிக்கப்படுமா? உண்ணவும் உழைக்கவும் உறங்கவும் தானே மனித வாழ்வு..இதில் உணவின் மீது இத்தனை வன்மமா? இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? சாகும் வரை மருந்துகளும் மாத்திரைகளும் தான் உண்டு கிடக்க வேண்டுமா? மனிதகுலம் நோய்களிலிருந்து எப்போது விடுதலை பெறும்? போன்ற ஆயிரமாயிர கேள்விகள் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் நிதம் அச்சுறுத்துகின்றன. வருடங்களின் ஒவ்வொரு காலபிறப்பும் புதிய நோய்களின் பீதியை தோற்றுவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில். மனிதர்கள் ஆரோக்கியம் குறித்த நிம்மதியைத் தொலைத்து இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டன என்பதே இன்றைய மருத்துவ பின்னடைவு. எந்த அளவிற்கு மருத்துவமும் அறிவியலும் வளர்ச்சியடைந்ததாகப் பேசப்படுகிறதோ அந்த அளவிற்கு நோய்களும் நோய்களின் தீவிர நிலையில் உயிரிழப்புகளும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது தான் அறிவியல் வளர்ந்த இலட்சணமா என்கிற உமர் பாரூக் அவர்களின் கேள்வி நம்மை நிச்சயம் சந்திக்க வைக்காமல் இல்லை.

விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்து வானளாவிய உச்சம் பெற்று வருகிறது என்று மார்தட்டிக் கொள்ளும் நவீன விஞ்ஞானிகளும் மருத்துவர்களும், இன்று வரை சர்க்கரை, தைராய்டு, இதயநோய்கள், ஆஸ்த்மா மூச்சிரைப்பு கர்பப்பை கட்டி, சிறுநீரக கல், மூலம் என எந்த நோய்க்கும் நிரந்தர தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வனைத்து வகை நோய்களின் தாக்கங்கள் தீவிரமாக வெளிப்படும் போது நிவாரணம் போன்ற பொய்யான மழுப்பல்கள் கொண்டு மக்களை ஏமாற்றும் தோற்றத்தை உருவாக்குகிறது. தற்காலிகமாக நோய்த் தாக்கத்தை குறைக்க இரசாயனங்களை வழங்கி மக்களின் சிறு நீரகங்களையும் கல்லீரலையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றனர். இதுவரை ஆங்கில மருத்துவத்தில் பெயர் சூட்டப்பட்ட எந்த நோய்க்கும் நிரந்தரமான நிவாரணம் உலகெங்கிலும் கிடைத்ததில்லை என்பதே இன்றுவரையிலான மருத்துவ நிலை.. வாழ்நாள் முழுதும் இரசாயன மருந்துகள் எடுத்துக் கொண்டு நோய்ப் பெயரை அடையாளச்சின்னமாக தாங்கிக் கொண்டு நோய்களுடனும் உடல் தொந்தரவுகளுடனும் பிடித்தமான உணவுகளை மறுத்தும் உடலுக்கு ஒவ்வாதது என்று புறந்தள்ளியும் வாழ்ந்து வருகின்றனர் மக்கள். வாழ பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர் என்பதே சத்தியம்.
சரி, நிரந்தர நிவாரணம் இல்லையானாலும் பரவாயில்லை ஒரு நோய்த்தொந்தரவிற்காக சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வரும் போது அடுத்ததாக புதிய புதிய வேறொரு நோய் முளைக்கிறதே. முன்பு வந்த நோயுடன் தொடர்ந்து வந்த நோய் என அடுக்கடுக்குகளாக நோய்கள் உருவாகிக் கொண்டு உடல் நோய்களின் கூடாரமாக மாறி விடும் அபாயமும் இன்றைய மருத்துவ வரப்பிரசாதம் என்று வருந்தி கடக்க வேண்டியது தான். அத்துடன் முடிந்து விடுவதில்லை…

சாதாரண தொந்தரவுகளுக்கென்று ஆங்கில மருத்துவரை நாடிச் சென்று சிகிச்சை எடுத்து வரசாதரண நிலையில் தாங்கக் கூடிய தொந்தரவாக இருந்தது அடுத்த கட்டமாக நாள்பட்ட தேக்கமுற்ற நோயாக உருமாறியது. மெல்ல மிகப் பெரிய நோயாக பூதாகாரம் எடுக்கிறது.. தொடர் பரிசோதனைகள் சிகிச்சைகள் கடுமையான பக்கவிளைவுகள் கொண்ட மருந்துகள் என தொடரும் மனித உடலின் மீதான மருத்துவ வன்முறை ஆக்கிரமிப்பு அறுவை சிகிச்சை வரை கொண்டு.

உடலின் உள்ளுறுப்புகளை தயவு தாட்சண்யமின்றி வெட்டிப் போடும் அவலம் தான் இன்றைய உயர்ரக மருத்துவ அறிவியலின் உச்சம்… மருத்துவத்துறையில் புரட்சி வளர்ச்சி… வாழ்நாள் முழுதும் மக்கள் படைப்பின் பேராற்றல் மூலம் உருவான உறுப்புகளை மருத்துவத்தின் உன்னத சிகிச்சை முறை என்கிற போலி பிரசங்கத்தில் மதிமயங்கி தாரை வார்த்து விட்டு வாழ்நாள் முழுவதும் முடவர்களாக விரும்பியும் விரும்பாமலும் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் நாற்பது வயதைக்
கடந்த பெண்களின் சரிவிகிதத்தினர் கர்பப்பை என்கிற பெண்களுக்கே பிரத்யேகமாக வழங்கப்பட்ட இயற்கைப் பொக்கிஷத்தை இழந்து விட்டனர். திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்ற பின் கர்பப்பை எதற்கு என்று கேட்கிறது அறிவியல் அறியாமையின் விளிம்பில் நிற்கும் ஆங்கில மருந்துவம். பெண்களின் கர்பப்பை வெறும் பிள்ளைப் பெற்றெடுக்க மட்டுமே பயன்படும் உறுப்பா..
பெண்களின் கர்பப்பைக்கான விசேஷ குணங்களும் பணிகளும் உடல் இயங்கியலில் அதன் முக்கிய பங்கும் குறித்த போதம் துளியும் இல்லாத மருத்துவமாகவே ஆங்கில மருத்துவம் உலகம் முழுவதிலும் தனது முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறது. மருத்துவத்துறையில் நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டும் இன்று வரை எந்த நோய்க்கும் பரிபூர்ண குணமடையும் நிவர்த்தியை இதுவரை செயல்படுத்தியதாக எந்த மருத்துவ ஆவணங்களும் பதிவிட்டதில்லை.மாறாக, குணப்படுத்தவே முடியாது என்று 52 நோய்களின் பட்டியல்களை 1945 லேயே வழங்கிவிட்டது ஆங்கில மருத்துவம் என்கிற உண்மை எத்தனை பேருககுத் தெரியும். இதில் நகைப்பு என்னவென்றால் as per Drugs and Cosmetics act1945 பட்டியலிடப்பட்ட இந்த 52 நோய்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடுவோம் என்று கூறிக்கொண்டு எந்த மருத்துவரும் நோயாளிக்கு பொய்யாகக் கூறி சிகிச்சையளிக்கக் கூடாது என்றும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 52 நோய்களை குணப்படுத்தும் நிபுணர்(specialist ) என்று அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ சட்டம். அவ்வாறாக மருத்துவர்கள் தங்களின் பெயர்ப்பலகையில் அச்சிட்டு அடையாளப்படுத்திக் கொண்டால் அவர்களின் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சட்டம் கூறுகிறது. இது குறித்து மக்களுக்கு எந்தவித விழிப்புணர்வுமில்லை.

பெயர்ப்பலகையில் போலியான நிபுணர் என்கிற அடையாளத்தில் ஏமாந்து தங்கள் ஆரோக்கியத்தைத் தொலைத்து வாழ்நாள் நிரந்தர நோயாளி ஆகி வரும் பரிதாப நிலையே இன்றைய மருத்துவநிலை. தங்களால் குணப்படுத்த இயலாது நோய்களை மரபுவழி மருத்துவங்களில் தீர்வு உண்டு என்று தெரிந்தும் பரிந்துரைக்க மறுக்கிறது ஆங்கில மருத்துவம். பரிந்துரைக்காவிட்டாலும் பரவாயில்லை மரபு வழிமருத்துவங்களை அறிவியலுக்குப் புறம்பான மருத்துவம் என்றும் மரபு வழி மருத்துவர்களை போலி மருத்துவர்கள்(quacks) என்றும் அவதூறு பரப்புகிறது. மக்கள் மத்தியில் மரபு வழி மருத்துவங்களைக் குறித்த அச்சத்தை உருவாக்கி தவறான வதந்திகளைப் பிரச்சாரம் செய்து வருகிறது . மக்கள் ஆங்கிலமொழியின் மீதான மோகமும் ஆங்கில அறிவியல் மீது கொண்ட தவறான நம்பிக்கையும் இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களில் ஏமாந்துப் மரபுவழி மருத்துவங்களைக் கண்டாலே ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது. முற்று முழுமையாக வெறுத்து ஒதுக்குகின்றனர்.

“நோய் வந்த சூழலில் எந்த மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை. ஆனால் வருமுன் காப்பதே எல்லா மனிதர்களின் அவசியக் கடமை.” என்கிற நூலாசிரியரின் மனிதர்மருத்துவ உரிமைச் சட்டத்தின் வரிகள் இன்றைய மருத்துவ ஆதிக்கம் செலுத்தி வரும் ஆங்கில மருத்துவத்தின் மரபு வழி மருத்துவர்களின் மீதான வெறுப்பு அகராதியில் அழித்து திருத்த வேண்டிய ஒன்று. மனிதசமுதாயத்தின் மீதான இவர்களின் தீராத ஆதிக்க வேட்கையைத் தளர்த்தி விடும் நோக்கில் பல மரபு வழி மருத்துவர்களும் மனிதகுல நலனைக் காக்கும் கடமையில் தங்களின் பங்கை செயலாற்றி வருகின்றனர். உலகின் பல மரபு வழி மருத்துவக்கள் ஆங்காங்கே அந்தந்த காலத்திற்கும் சூழலுக்கும் தன்மைக்கும் ஏற்ப முளைத்துள்ளன. அவ்வாறாக சீனாவில் தோன்றிய மரபு மருத்துவமாக அக்குபங்சர் மருத்துவம் பஞ்சபூதங்களின் சமன்படுத்தும் பிரத்யேக ஒற்றைப்புள்ளி தூண்டல் கொண்ட சிகிச்சை முறையில் தோன்றியது. சீனாவின் இந்த மருத்துவம் இந்தியாவில் பரவலாகி இன்று தமிழகத்தில் நோய்க்கூறுகளை பூண்டு ஒழிக்கும் ஸ்திரதன்மைக் கொண்டு தீர்க்கவே முடியாது என்று கங்கனம் கட்டிய மருத்துவங்கள் முன் நோய்களை முழுமையாகக் களைந்து சரி செய்து குணப்படுத்தி வருகிறது.

இப்படியான மருத்துவம் சார்ந்தும் நோய்கள் குறித்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளை நோய்க்காரணிகளாகச் சித்தரிக்கும் நவீனமருத்துவத்தின் அறியாமை, தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள், நமது அன்றாட உணவுகளில் பெருகி நிற்கும் இரசாயன நச்சுக்கள், வீட்டுப்பிரசவங்கள் மீது கவிழ்த்தப்படும் பொய்க்குற்றச்சாட்டுக்கள், அக்குபங்சர் மருத்துவம் குறித்த சட்டபூர்வமான உரிமைகள், அங்கீகரிப்பு மற்றும் அதன் பயன்கள், அக்குபங்சர் மருத்துவம் பற்றிய அறிமுகமும் ஆழமான புரிதலும் கிருமிகள் குறித்த விழிப்புணர்வு என ஒற்றை மருத்துவம் இன்று நமது மரபு வழியான பாரம்பரியஆரோக்கிய மனநிலையை தளர்த்தியும் தகர்த்தும் வரும் துர்பாக்கியத்தை புரிய வைக்கிறது நூலின் கட்டுரைகள். நூல் வாசிப்பிற்குப் பின் மருத்துவம் சார்ந்தும் இயற்கை வாழ்வியல் குறித்தும் பல இறுக்கங்களை நீக்கி அகண்ட புரிதலை ஏற்படுத்துகிறது.

இன்று கொழுப்பு குறித்த பல சர்ச்சைகள் மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளன. கொழுப்பு உடலில் கூடினால் பல இருதயம் சம்பந்தப்பட்ட பல நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் எண்ணெய் பொருட்கள் மற்றும் மாமிச உணவுகள் குறைத்துக் கொள்ளவும் கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கிறது ஆங்கில மருத்துவம். இது எந்த அளவிற்கு உடலியற்கைக்கு பொருந்துகிறது என்கிற உண்மையை மரபு வழி அறிவியலின் அடிப்படையில் எடுத்துரைக்கிறது முதல் கட்டுரை எண்ணையும் கொலஸ்ட்ராலும் : வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல். ”

மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும் கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015 ஆம் ஆண்டின் யூ எஸ் டயட்ரி அட்வைஸரி கமிட்டியின் அறிவிப்புதான்.” என்று ஆவணத்துடன் கோடிட்டுக் காட்டுகிறது கட்டுரை. மேலும், “எங்கு மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கு நோய்களும் அதிகமாக இருக்கின்றன..” என்று மணிப்பால் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் ஹெக்டே அவர்களின் பகிரங்கமான ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளது பக்கங்கள். ”மருந்து மயக்கத்தில் அமெரிக்கா (Over Dozed America) ” என்ற நூலில் மருத்துவ நிறுவனங்களில் தவறான நம்பிக்கைகள் எப்படி பரப்பப்படுகின்றன என்பதையும் அது எப்படி வியாபாரமாக மாறுகிறது என்பதையும் விவரிக்கிறார் அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜான் அப்ரோம்சன். மேலும் நிறுவனங்களின் லாப வேட்டைக்காக மக்களின் நல்வாழ்வு பலியிடப்படுகிறது என்று உரத்து கூறுகிறது மருத்துவ அரசியலை பேசும் இந்நூல்.

ஆங்கில மருத்துவத்தின் தாய்வீடான அமெரிக்காவில் அலோபதியின் மறைக்கப்பட்ட அரசியல் சூதுகளை அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கில மருத்துவர் அம்பலப்படுத்தி எழுதிய நூலின் முக்கிய வரிகளை மேற்கோலிடுகிறது கட்டுரை. மற்றொரு முக்கியமான தகவலையும் பதிவிடுகிறது கட்டுரை. அலோபதி மருத்துவத்தின் தவறான ஆய்வு முடிவுகளைப் பற்றிய எதிர் கருத்துள்ள ஆய்வு கட்டுரைகள் மட்டும் இதுவரை ஏழாயிரத்துக்கும் அதிகமாக ஐரோப்பிய மருத்துவ ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.” இப்படியான அலோபதி மருத்துவத்தின் மறைக்கப்பட்ட மருத்துவ அரசியல் குறித்த ஏராளமான அதிர்ச்சி மிக்க தகவல்கள் நூல் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கொழுப்பு குறித்த தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் அலோபதி மருத்துவத்தின் அறியாமைக்கு சவாலாக இதய நிபுணர் டாக்டர் ஹெக்டே அவர்கள் கொழுப்பு சத்து குறித்து பல அதிர்ச்சிமிக்க தகவல்கள் பலவற்றில் இருந்து முக்கியமான சில விஷயங்களை நூல் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதய நோய்க்கும் கொழுப்பும் சம்பந்தமுமில்லை என்றும் நாம் மாரடைப்புக்கு பயந்து கொழுப்பு உணவை குறைத்தால் செல்களின் சுவர்களில் சிக்கல் வரும், புற்றுநோய் ஆபத்து அதிகம் என்றும் எச்சரிக்கிறார் உமர் பாரூக். மேலும் கொழுப்பை கட்டுப்படுத்தும் மருத்துவம் என்பதே பெரும் நிறுவனங்களின் லாபங்களுக்காக உருவாக்கப்பட்ட செயல் திட்டமே என்று ஒரு ஆங்கில மருத்துவராக இருந்துகொண்டு உள்ளுக்குள் நிகழ்ந்து வரும் அடாவடித்தனத்தை மக்கள் நலனை குறி வைத்து தாக்கும் மருத்துவ அரசியலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தி மருத்துவ அறத்தை காத்து வருகிறார் டாக்டர் ஹெக்டே.

மேலும் தேங்காய் எண்ணெய்க்கு எதிராக பரப்பி வரும் தவறான தகவல்களையும் தொகுப்பு சுட்டிக்காட்டி தேங்காய் எண்ணெயில் இடம்பெற்றுள்ள அற்புதமான நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொண்ட மோனோ லாரின் என்கிற லாரிக் அமிலம் என்பதையும் அறியப்படுத்துகிறார். மேலும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்து தேங்காய்ப்பாலில் உள்ளதாகவும் அறிவுறுத்துகிறார். ஆக தேங்காய் எண்ணை பயன்படுத்தி தங்கள் முழு சமையலையும் செய்து முடிக்கும் கேரள மக்கள் இதய நோய் பாதிப்பிற்கு ஆளாவதில்லை என்று தேங்காய் எண்ணெய் மீதான அச்சத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றும் மிக முக்கியமான தகவலை நூலாசிரியர் பதிவிட்டுள்ளது பயனுள்ள ஒன்று. கொழுப்பு உடல்செல்களுக்குத் தேவையான குளுகோஸைத் தயாரித்து வழங்குவதையும் கட்டுரை வழியாக அறிய முடிகிறது. “உணவே மருந்து என்று சொன்ன நம் முன்னோர்களுக்கு பதிலாக இன்று நஞ்சே உணவு என்று நாம் சொல்லும் அளவிற்கு இரசாயன கலப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது..”

இரசாயன கலப்படம் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் நோய்கள் உருவாக முக்கியக் காரணியாக நமது உண்ணும் பயன்பாட்டில் இருக்கும் உணவுகளில் கலந்திருக்கும் இரசாயன நச்சுக்கள் குறித்து “நோய்கள் முளைக்கும் சமையலறை” என்கிற கட்டுரை விரிவாக பேசுகிறது. ரசாயன நூடுல்ஸ் முதல் பிளாஸ்டிக் அரிசி வரை உணவு கலப்படங்கள் இப்போது நுட்பமானவைகளாக உண்வுகளில் கலக்கப்படுகின்றன என்று சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். தற்போது மக்கள் பயன்படுத்தும் அரிசிகள் fortified rice என்னும் இரசாயனங்கள் கலந்து விளைவிக்கப்படவில்லை தயாரிக்கப்படுகின்றன என்கிற அதிர்ச்சிமிக்க தகவலை கேட்கும் போது நடுக்கம் கூடுகின்றன. அரிசி நிலத்தில் விளைந்து வந்தப்பின்பு அதை மீண்டும் மாவாக்கி அந்த மாவு அரிசியில் மீண்டு இரசாயன கூட்டிகளாக வைட்டமின் மாத்திரைகள் கலக்கப்பட்டு வருகைறன. இந்த அரிசி தற்போது ஏழைக் குழந்தைகள் உண்ணும் சத்துண்வு அரிசியில் கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் பாக்கெட் பால் அதை விட குரூரமானது. தாயில்லாத குழந்தைகள் பயன்படுத்தும் பாக்கெட் பாலில் ஆண்டிபயோட்டிக் மற்றும் சத்து மாத்திரைகள் என்கிற பெயரில் இரசாயன மருந்துகள் பால் தயாரிப்பில் கலக்கப்பட்டு வருவதும் மற்றொரு அச்சத்தை ஏற்படுத்தும் இன்றைய துன்பியல் நிலை.

ப்ரசர்வேட்டிவ் எனும் பராமரிப்பு ரசாயனங்கள் நியூட்ரலைசர் என்னும் சமன்படுத்திகள் செயற்கை மணம் கூட்டும் ரசாயனங்கள் சேர்க்கை சுவை கூட்டும் ரசாயனங்கள் நிறைமாற்றிகள் இப்படி எண்ணற்ற இரசாயனங்கள் நம் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.. என்கிற அதிர்ச்சி மிக்க தகவல்கள் பலவற்றை பதிவிட்டுள்ளது நூல்.

அத்யாயத்தின் தொடரும் பக்கங்கள் ஒரு மருந்து சந்தைக்கு வருவதற்கு முன்னால் அது எவ்வாறெல்லாம் பரிசோதிக்கப்படுகிறது என்பதை பற்றி ஒவ்வொரு கட்டமாக முழு தகவலுடன் பதிவிட்டுள்ளது இன்று கொரோனா மருந்துகள் நோய்த்தொற்று என்று அறிவித்த சில மாதங்களில் இரசாயன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவை அதிவேகமாக சந்தைப்படுத்தப்பட்டும் விளம்பரபடுத்தபட்டதற்கும் பின்பான மறைமுக அரசியல் இந்தப் பதிவின் வழியாக நம்மை சிந்திக்கச் செய்கிறது. உடனடி பரிசோதனை, குறுகிய கால பரிசோதனை விலங்கு பரிசோதனை என ஒவ்வொரு இரசாயன மருந்தும் எட்டு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான தீவிரமான ஆய்வுகளுக்குப் பின்பு மக்கள் புழக்கத்திற்கு வெளிப்படும். இதற்கான ஒட்டுமொத்த ஆய்வுச் செலவுகள் பல கோடிகள் கொண்டு உருவாக்கப்படும். தொடரும் இரசாயன மருந்துகளின் ஆய்வகப் பரிசோதனைகள் இறுதியாக மனிதர் வழி ஆய்வுகளுக்கு வருகிறது. அதிலும் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒரு மருந்து மருத்துவ சந்தைக்கு வரவேற்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தின் ஆய்வகப் பூர்வீகத்தைப் பற்றி விவரமாக எடுத்துரைக்கிறது கட்டுரையின் ஒரு பகுதி. நோய்த் தீர்க்கும் என்று கூறப்படும் மருந்துகளுக்கு இத்தனை ஆண்டுகால ஆய்வுகளுக்கும் ஆய்வறிக்கையும் கவனப்படுகிறதென்றால் மனிதனின் உயிர் உடல் இரண்டையும் பராமரிக்கும் சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வுகள் ஏன் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற மிக முக்கியமான கேள்வியை முன் வைக்கிறது கட்டுரை. இந்த கேள்வி இதுவரை நாம் சிந்தித்தது இல்லை. பலத்த அரசியல் தடித்தனம் நிறைந்துள்ளது என்பது மட்டுமே உண்மை.

” புற்றுநோய் இல்லாத ஒரு நோயாளியை, அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் சில தினங்களில் இறந்து போவார் என்றும் நம்ப வைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கி தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்.”
என்று அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர் டாக்டர் புரூஸ் லிப்டன் அவர்களின் உடலறிவியல் பற்றிய உளவியல் சிக்கலை பதிவிடுகிறது கட்டுரை . மனித மனத்தில் உண்டாகும் பய உணர்ச்சியால் பயங்கரமான கொடிய நோயை உருவாக்க முடியும் என்கிற ஆய்வுப்பூர்வ உண்மை இந்த வரிகளின் வழியாக விளங்குகிறது
உடலில் தோன்றும் நோய்களுக்கு நமது உடலுக்கு நாம் செய்யும் ஊறு மட்டுமே பொறுப்பல்ல மனதின் செயல்பாடும் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
” மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குணமாதல் என்பது வெறும் உடலோடு தொடர்புடைய மாற்றம் மட்டுமல்ல மாறாக அது மனதோடு இணைந்த மாபெரும் விளைவாகும்.” என்பதை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டும் கட்டுரை உடலில் தோன்றும் மாற்றங்களில் மனதின் விளைவுகளைப் பற்றிய உண்மைச் சம்பவங்களை அறிஞர்களின் பதிவுகளோடு விவரிக்கிறது. மேலும் உடல் இயக்கத்தின் முப்பெரும் அடுக்குகளை வரிசைப்படுத்தி விளக்குகிறது தொடரும் பக்கங்கள்…

உடல் என்பது பார்வைக்கு வெளிப்படும் மனதின் உருநிலை என்றும் மனம் என்பது கண்களுக்குப் புலப்படாத உடலின் கரு நிலை என்பதை பல நூல்களில் சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர் உடல் ஆரோக்கியத்தில் மனதின் பங்கை அறிவியல்பூர்வமாகவும் பதிவு செய்கிறார். கணித மேதை ரேனே தெகர்த்தே அவர்களின் குறுக்கல்வாதத்தை (Reductionism) முன்வைக்கும் உடல் மனம் பற்றிய முரணான கருத்து உடலியல் விளைவுகளை வேதியியல் மாற்றங்களில் தேடும் தவறான புரிதல் ஆங்கில மருத்துவ விஞ்ஞானத்தில் பரவ ஆரம்பித்து உடலிலிருந்து மனதைப் பிரித்து பார்க்கும் மருத்தூவமாக இன்று ஆங்கில மருத்துவம் பயணிக்கிறது. உடலின் தொந்தரவுகளைத் தனியாக பாவித்தும் மனதின் குழப்பங்களை உளவியல் தொந்தரவாகப் பிரித்து தனித்தனியான மருத்துவர்கள் கொண்டு சிகிச்சையளித்து வருகிறது.இதன் பொருட்டே ஆங்கில மருத்துவத்தின் குணமாதல் பூர்த்தியடைவதில்லை. மருத்துவ பேராசிரியர் ஹெக்டே ஆங்கில மருத்துவத்தின் இந்த அறியாமை குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளதையும் கட்டுரை நமக்கு மேற்கோலிடுகிறது. “இப்படியான போக்கு கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவத்துறையை நோயாளிகளின் படுக்கையிலிருந்து பிரித்தெடுத்து உயர் தொழில்நுட்ப தளத்திற்கு கடத்திச் சென்றுள்ளது.”

தொடரும் இந்த அத்யாயம் லத்தீன் மொழியிலிருந்து பிறந்த Pssycology உளவியல் குறித்த விரிவான விளக்கம் கொண்டுள்ளது. மனதில் தோன்றும் விளைவுகளான பிளாசிபோ மற்றும் நோசிபோ குறித்து பக்கங்கள் நமக்கு பல பிரகாசமான புரிதல்களை ஏற்படுத்துகிறது. மிகச் சமீபத்தில் வெளிவந்த புள்ளி விபரம் ஒன்றை கட்டுரைப் பகுதியில் அதிர்ச்சி மிக்க தகவல் ஒன்றை அறிய நேர்ந்தது. “அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு மருத்துவ கம்பெனியின் வருட வருமானம் அமெரிக்க அரசின் வருட வருமானத்தை விடவும் அதிகம்.” கிருமிகள் குறித்த ஒரு கட்டுரையான “சீசன் கிருமிகள்: நிரந்தர தீர்வு என்ன?” வாசிக்கும் போது நமது நடைமுறை அறிவை திறந்து விடுகிறது. கொசுக்களைக் கொல்ல போராடி வரும் அரசாங்கமும் கொசுக்களை ஒழிக்க இரசாயன மருந்துகளை தொடர்ந்து கண்டுபிடித்து சந்தைப் படுத்தி வரும் விஞ்ஞானிகளின் ஆகப்பெரும் திறமைகள் அத்தனையும் பல நூற்றாண்டுகளாக பல கோடி முதலீடுகளாக சாதாரண கொசுக்களிடம் மண்டியிட்டு தலை கவிழ்ந்து நிற்கும் அவலத்தை விரிவாக எடுத்துரைக்கிறது இந்தப் பகுதி. மிகுந்த ஆச்சரியத்தையும் தகவல்பூர்வமான விளக்கங்களும் கொண்ட இந்தக்கட்டுரை கிருமிகளைக் கொண்டு ஆய்வுபரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து தோற்று வரும் ஆங்கில அறிவியலாளர்களை நினைத்து நகைக்க வைக்கிறது. இதுவரை கிருமிகளும் பூச்சிகளும் மனிதனின் அத்தனை பிரயத்தனங்களையும் உடைத்துக் கொண்டு பெருகி வருவதும் எந்தக் கிருமியையும் இதுவரை மருத்துவ விஞ்ஞானத்தால் பல கோடிகளை செலவிட்டும் அழிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் அவலநிலையே இன்றைய ஆங்கில விஞ்ஞானம்.

படைப்பின் நியமனம் தாத்பரியம் உயிரிகளுக்கு துணை நிற்பது. எந்த உயிரையும் அழிக்க முற்படும் போது அவை தம்மைப் பெருக்கிக் கொள்ளவும் மனித ஆற்றலின் கட்டு வலைக்குள்ளிருந்து தன்னை விடுவித்து துருத்திக் கொண்டு வேறு விதமாக பரிமணிக்கும் திறனும் தங்களை எதிர்த்து அழிக்க மனிதனின் பல காலங்களாக மேற்கொள்ளும் அறிவீலித்தனமான செயல்களை முறியடித்து தம்மைத் தகவமைக்கும் குயுக்தியும் அவைகளுக்கு இயற்கையின் படைப்பாற்றல் வழங்கியுள்ளது.. என்பதை விட படைப்பிலக்கணத்தின் கோட்பாட்டின் அடிப்படையும் கட்டமைப்பும் அதுவே..என்பதை அத்யாயம் நமக்கு விளக்குகிறது.

மேலும் அவ்வாறாக கிருமிகள் மனித உடலுக்குள் ஊடுருவிச் சென்றாலும் உடல் என்னும் பேராற்றல் அவற்றை வெளியேற்றும் அத்தனை பிரயத்தனங்களையும் செய்து முடிக்கும் காரணம் தனது உடலின் தேவைக்கான உயிரிகளை உடலின் எதிர்ப்புசக்தி உருவாக வழிவகுக்கும். அவையல்லாமல் தனக்கல்லாத பிறிதொரு உயிர் வெளியிலிருந்து நுழைய முயலும் போது உடலின் எதிர்ப்புசக்தி எதிர்க்கும்.. ஆக நமது எதிர்ப்புச் சக்தியை பலமாக வைக்கும் இயற்கை வாழ்வியலை கடைப்பிடித்தால் அன்னியப்பொருட்களான வெளியிலிருக்கும் உட்புகும் உயிரிகளை உடல் அனுமதிக்காது. அப்படியே நுழைந்தாலும் உடலின் எதிர்ப்புசக்தி அழித்து விடும். “பசியையும் தூக்கத்தையும் ஒழுங்கு செய்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு வலுவானதாக மாறும். எந்த வகை கிருமி உடலுக்குள் புக நேர்ந்தாலும் அதனால் எதிர்ப்பு சக்தி மிகுந்த உடலில் வாழ முடியாது என்பது அறிவியல்.”
உடலறிவியலின் மதிநுட்பத்தை கொஞ்சமும் பிசகாமல் எடுத்துரைக்கிறது கட்டுரை.
“தடுப்பூசி: உண்மையில் பிரச்சினை என்ன?” கட்டுரை பல அதிர்ச்சிமிக்க தகவல்களை பதிவிடுகிறது.

இதுவரை தடுப்பூசிகளும் தடுப்புமருந்துகளும் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் படுபாதகமான நோய்களிலிருந்து நம்மையும் நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்கிற தவறான புரிதலின் அறியாமையில் இருந்து விலக்கி தடுப்பூசிகளும் தடுப்புமருந்துகளும் ஒருபோதும் நம்மை எந்த நோயிலிருந்தும் பாதுகாக்காது மாறாக அவை கூடுதலான பல கடுமையான தொந்தரவுகளுக்கு நம்மையும் நமது பிள்ளைகளையும் ஆளாக்கும் அபாயம் உண்டு என்பதை இந்த அத்யாயத்தின் கட்டுரை நறுக்குத் தெளித்தால் போல பல தடுப்பூசிகள் சார்ந்த பல உண்மை செய்திகளைப் பதிவுசெய்துள்ளது.
“உலக புகழ்பெற்ற திமரசால் என்னும் பாதரசம் தான் தடுப்பு மருந்துகளின் முதல் பிசர்வேட்டிவ். ஆனால் இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நியூரோ டாக்சின் என்பது எல்லா விஞ்ஞானிகளுக்குமே தெரியும். சில தடுப்பு மருந்துகளில் திம்மர் சாலுக்கு பதிலாக அலுமினியம், ஃபார்மல் டிஹைட்ரேட், (HCG) என்னும் ஹார்மோன் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.” HCG harmone குறித்த மற்றொரு தகவல் நம்மை நடுங்க வைக்கின்றன. “HCG ஹார்மோன் கிருமிகளுடன் தடுப்பு மருந்தாக செலுத்தப்படும் போது கிருமிகளை எதிர்க்கும் ஃபார்முலாவை நம் எதிர்ப்பு சக்தி கண்டுபிடிப்பதைப் போலவே இந்த HCG யையும் எதிர்த்து அழித்துவிடும். ஏனெனில் உடலுக்கு வெளியில் இருந்து செலுத்தப்படும் அந்நிய பொருட்களை நம் உடல் ஃபாரின் பாடியாகவே பார்க்கிறது. இப்படி ஒரு முறை HCGயை அழித்து நம் உடல் பழகி விட்டால் பெண்ணின் உடலில் இயற்கையாக சிசு வளப்பிற்காக HCG உருவாகும் போதும் இந்த அழிப்பு நடவடிக்கை நடைபெற வாய்ப்புண்டு .”

தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதால் பெரியம்மை போலியோ போன்ற நோய்கள் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கான சரியான விளக்கத்தை ஆதார பூர்வமாக விளக்கியுள்ளார் அமெரிக்க டாக்டர் வில்லியம் ட்ரெம்பிங். ” 1953 க்கு பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்துவிட்டது ஆனால் 1857 இல் தான் போலியோ தடுப்பு மருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது தடுப்பூசிகள் வந்த பிறகு மூளை தண்டுவட பாதிப்புகள் மிக அதிக அளவில் பெருகியுள்ளன போலியோ மருந்தை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் தன் மருந்தால் மூன்றில் இரண்டு பங்கு போலியோ அதிகரிப்பு ஏற்பட்டு விட்டதாக அறிவித்தார்.”

என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். வில்லியம் ட்ரெம்பிங் ஆங்கில மருத்துவராக இருந்தும் தனது துறையில் நடக்கும் மருத்துவ குளருபிடிகளை மக்கள் நலன் கருதி மனம் திறந்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளதையும், “இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்து பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் ஜேக்கப் புலியேல் உ. பி. போலியோ சொட்டு மருந்து பாதிப்பு பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் கூறுகிறது அக்கட்டுரை. ”

தடுப்பூசி குறித்து உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆங்கில மருத்துவ நல்லுள்ளங்கள் தெரிவித்த பல தகவல்களை இந்த அத்யாயத்தின் ஊடாக நூலாசிரியர் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

அதே போல் இரசாயன மருந்துகள் எதுவாக இருந்தாலும் அதை தயார் செய்யும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அரசு மருத்துவத்துறைக்கும் பேராதரவு தருகின்றன. ஒவ்வொரு இரசாயன மருந்துகளுக்கும் இரண்டு தரப்பினருக்கும் பாரபட்சமின்றி ஒப்புதல் அளிக்கின்றது இரசாயன மருந்துகள் தயாரிக்கும் ஆய்வகக் கூடங்கள். இதில் செயல்படும் விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் தனியார் ஆய்வாளர்கள் மட்டுமல்லர் அரசு தரப்பு விஞ்ஞானிகளும் உள்ளனர் அரசு எடுக்கும் மருத்துவதயாரிப்பிற்கு ஆதரவு “தடுப்பூசிக்குள் என்ன இருக்கிறது உடல் எப்படி அதனை எதிர்கொள்கிறது தடுப்பூசியின் விளைவுகள் என்ன நடைமுறையில் தடுப்பூசிகள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்தால் மட்டுமே புரியும்..”

கட்டுரையில் பதிந்த வரிகள் அனைவரும் சிந்திக்க வேண்டியவை. ஒரு நூறு ஆண்டுகளாக மக்கள் மதியையும் சேர்த்து மந்தைப் புத்தியாகி விட்டது.ஆக்ககப்பட்டது.. எதையும் கேள்விமுறையின்றி வெள்ளை கோட் போட்டு அறிவியல் என்று கூறிவிட்டால் அப்படியே கண்மூடித்தனமாக நம்பும் மனோநிலையில் இன்றைய தலைமுறை. இந்த மனநிலையை உருவாக்க அவர்களுக்கு ஒரு நூறு ஆண்டுகள் பிடித்தது. கடுமையான சூதுகளும் சூழ்ச்சிகளும் பல மனித இழப்புகளும் கூட நிகழ்த்தப்பட்டது உடல் சார்ந்த எந்த எதிர்விளைவிற்கும் தங்களை குற்றப்படுத்திக்கொண்டு விதியை நொந்து கடந்துப் போக…

உலகம் முழுவதிலும் இவ்வாறான மனநிலையை கார்பரேட் மருத்துவ நிறுவனங்களும் பன்னாட்டு கம்பெனிகளும் தந்திரத்தை உழைப்பாக மூலதனமாகக் கொண்டு செயல்பட்டு வந்ததன் விளைவு தான் இன்றைய அலோபதி மருத்துவம் ஒற்றை மருத்துவமாக உலகெங்கும் தனது ஆளுமையை செலுத்தி வருகிறது.
கேரள மாநிலத்தின் பன்னிரண்டு வயது சிறுவன் அமீருதீன் நுரையீரல் சார்ந்த சாதாரண சளித் தொந்தரவுகளுக்காக சிகிச்சை எடுத்து மரணமடைந்ததை டிப்தீரியா நோய் என்று பட்டம் சூட்டி குறிப்பிட்ட அந்த நோய்க்கு தடுப்பூசி போடாததால் தான் இறந்ததாக அரசியலாக்கப்பட்டு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது அரசும் ஊடகங்களும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்களை பயமுறுத்தும் விதமாக இந்தச் சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டது. தொற்று பரவுவதாகவும் தொற்றுநோய்கள் அனைத்தும் உயிர்கொல்லி நோய்கள் என்று அச்சுறுத்தும் பிரச்சாரங்களை இன்றுவரை நிகழ்த்தி வருவதே தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவ தற்கான சாமர்த்தியம். மேலும் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் 3,42,657 குழந்தைகளில் 23,912 குழந்தைகள் எந்தவிதமான தடுப்புமருந்துகளும் எடுத்துக் கொள்வதில்லை என்கிற தகவல் குறிப்பிடத்தக்கது. தொடரும் பக்கங்கள் டிப்தீரியா நோய் குறித்த அறிகுறிகளையும் இதனை 18ஆம் நூற்றாண்டில் Croupஎன்று அழைக்கப்பட்ட தகவலையும் இரண்டு நூற்றாண்டுகள் முன்பே இந்த நோய் அறிகுறிகள் இருந்து வந்த தகவல் தரவுகளையும் ஆதாரத்துடன் பதிவிடுகிறது கட்டுரை.

கிருமிகள் குறித்த பல சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் 1941 இல் டாக்டர் ஹண்டர் கிருமிகள் என்கிற கருத்தியலுக்கு எதிரான தனது கருத்துகளை ஆய்வுகள் கொண்டு நிரூபித்தார். கிருமிகளை நேரடியாகப் பிரித்தெடுத்து பல நுண்ணுயிர் ஆய்வாளர்களின் உடலில் செலுத்தி கிருமிகளால் எந்த எதிர்விளைவும் ஏற்படாது என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்ததைப் பதிவிட்ட தகவல் சமகால நோய்தொற்று குறித்தும் கிருமி பரவல் குறித்தும் பீதியில் உள்ள மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மிக முக்கியமான பதிவு. கிருமிகளுக்கு எதிரான தவறான புரிதல்களை முன்வைத்திருந்த நுண்ணுயிர் அறிவியலாளர்களின் கருத்துகளைத் தொடர்ந்து கிருமிகள் குறித்த தனது ஆய்வுகளை நிகழ்த்திய ஹண்டர் தனது பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டதை மேற்கோலிட்டுக் காட்டுகிறது கட்டுரை.
” கிருமிகள் நோயின் இரண்டாம் நிலையிலேயே தோன்றுகின்றன *தேங்கிய கழிவுகளிலிருந்து தான் கிருமிகள் உருவாகின்றன..

என்கிற மரபுவழி மருத்துவம் அறிவுறுத்திய கிருமி குறித்த புரிதல்களை ஹண்டர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிரூபித்து வெற்றி பெற்றார். கூடுதலாக கேரள ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் முகமது ஜலீல் மற்றும் கேரளாவின் இயற்கை மருத்துவர்களில் ஒருவரான கோழிக்கோடு மருத்துவர் டாக்டர் பி ஏ. கரீம் முன் வைத்த தடுப்பூசிக்கு எதிரான விமர்சனங்கள் மிக முக்கியமானவை. இந்தியன் அக்குபங்சர் பிராக்டிஷனர்ஸ் அசோசியேசன் அமைப்பின் செயலாளர் மருத்துவர் சுஹைப் ரியாலு டிப்தீரியா நோயால் தாக்கப்பட்டு இறந்த குழந்தைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இறந்தவர்கள் அதிக சதவிகிதத்தில் உள்ளதை ஆய்வு அறிக்கையாக ஆதாரத்ததரவுகளுடன் பகிரங்கமாகப் பகிர்ந்ததை வாசிக்கும் போது தடுப்பூசி அரசியல் குறித்து மேலும் அறிந்து கொள்ளும் பேராவல் உண்டாகிறது.

தொடரும் அத்யாயம் நோய்களைப் பரப்புவதாக சிறிய உயிரிகள் கொசுக்கள் போன்றவற்றின் மீது பழிசுமத்தும் உலகஅரசுகளின் நவீன விஞ்ஞானத்தின் தவறான ஆய்வுகளைத் தீர்க்கமாக விவரிக்கிறார் நூலாசிரியர் உலக அளவிலான மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வுத் தரவுகளுடன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது இதுவரை பூச்சுகளையும் புழுக்களையும் நுண்ணுயிர்களையும் நமக்கு ஏற்படும் நோய்த்தொந்தரவுகளுக்கு குறைக்கூறிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து வெளிவந்து அகவிழியைத் திறக்க வைக்கிறது கட்டுரை. கொசு ஒழிப்பு பல காலங்களாக கஜினியின் தொடர் படைப்பு போல உலக அரசுகளும் ஆய்வக அறிஞர்களும் தொடர்ந்து பல தடுப்புகளையும் அழிக்கும் மருந்துகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக.ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இதுவரை கொசுக்களை ஒழித்தப்பாடில்லை. கட்டுப்படுத்தக் கூட இயலவில்லை என்பதே உண்மை நிலை. ஒவ்வொரு மருந்துகளையும் உண்டு செமித்து மீண்டும் புத்தாக்கம் பெற்று தடுப்புமருந்துகளை செரிக்கும் புதிய தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டு வருகின்றன கொசுக்கள். உடல் நோயுடன் போராடும் அறியாமையே ஆங்கில விஞ்ஞானத்தின் கொசு ஒழிப்பு புரட்சி. இதுவரை எந்த அண்டத்திலும் தேசத்திலும் கொசுவை ஒழித்துக்கட்டிய புள்ளிவிவரம் பதிவுசெய்யப்பட்ட இல்லை.

ஆனால் கொசுக்களால் பரப்பப்பட்ட நோய்களில் மிக முக்கியமான நோயாக டெங்கு காய்ச்சல் தோன்றிய வரலாறு மிக முக்கியமான பதிவு. கட்டுரை இந்த வரலாற்று பதிவை மிக நுட்பமாக காலவரையறையுடனான ஆவணத்தரவுகளுடன் பதிவு செய்துள்ளது.டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய நாடு முதல் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதேபோன்ற அறிகுறிகள் தோன்றிய காலங்கள் என தொடரும் காலப்பதிவின் தரவுகள் கொசுவை ஒழிக்க இந்தியதேசத்தில் செலவிடப்படும் பட்ஜட் வரை விவரமாக விளக்கியது. ஏதோ போகிற போக்கில் மரபுவழி மருத்துவர்கள் வார்த்தை ஜாலம் பேசுவதாக நினைத்து விடாதபடிக்கு கட்டுரையில் விவாதப்படுத்திய ஒவ்வொரு விஷயங்களும் ஆவணப்பூர்வமாக பதிவுசெய்தது , அறிவியல் விஞ்ஞானம் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது பரிசோதித்துப் பின் வெளிவந்தவை என்கிற போலிப்பிரசகங்களை இனியேனும் மக்கள் நம்பாமல் எந்தவொரு விளம்பரத்தையும் பிரசாரத்தையும் தன்னறிவு கொண்டு சிந்தித்து உணர வேண்டும் என்கிற நூலாசிரியரின் நோக்கம் தொகுப்பில் வெளிப்படுகிறது.

ஆங்கில அறிவியலின் ஆய்வுப் பரிசோதனையின் அறியாமையை புரிந்துக் கொள்ள நூலாசிரியர் மற்றொரு மருந்துப்பொருளின் உதாரணத்தைக் கொண்டு புரிய வைக்கிறார். பிறந்த குழந்தைகளுக்கு செரிமானத்தில் ஏற்படும் தொந்தரவுகளுக்காக பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் கொண்ட வசம்பு என்னும் பொருளை ஆங்கில அறிவியலாளர்கள் அதன் மூலக்கூறுகளை மட்டுமே ஆய்வு செய்து வசம்பு விஷத்தன்மை வாய்ந்ததாக பிரசங்கம் செய்கின்றனர். அசலில் அதை நமது மூதாதய அனுபவசாலிகள் அதன் பயன்பாட்டு முறையை தெளிவாக நமக்கு அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.அதன் அடிப்படைப் பயன்பாட்டை விளக்கிக் கூறி நமக்கு ஆய்வக அறிவியலை பரிசீலிக்க உதவியுள்ளார் நூலாசிரியர். இந்த அடிப்படை மருத்துவபயன்பாட்டு முறையைப் பற்றிய போதிய ஞானமின்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களை தவறாக மக்கள் மத்தியில் பரப்பிவிடுகிறது ஆங்கில மருத்துவ அறியாமை. இந்த ஒரு சான்று போதும் ஆய்வகப் பரிசோதனைகள் என்பவை வெறும் மூலக்கூறுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் ஒரு தவறான புரிதல். இயற்கையின் இயல்பான எந்தவொரு படைப்பும் அதன் தன்மைகளும் பரிணமிக்கக் கூடியவை. இதை புரிந்து கொள்ள ஹோமியோபதி மருந்துகளை உதாரணமாகக் கொள்ளலாம். இது வரை ஹோமியோபதி மருந்துகள் உட்கொண்ட பின் உடலில் அவற்றின் பரிணாமத் தன்மையையும் மருந்தின் இருத்தலையும் இதுவரை எந்த ஆய்வகக்கருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலுக்குள் சென்ற மருந்தால் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே நிதர்சன வெளிப்பாடு ஒழிய உடலில் அதன் மருத்துவ மாறுபாடுகள் கண்களுக்கும் அறிவியலுக்கும் புலப்படாத ஒன்று.
டெங்கு மலேரியா என்று அழைக்கப்படும் நோய்களின் தொந்தரவுகளுக்கு நிரந்தரமான தீர்வை கட்டுரை வாசகர் வழியாக சமூகதளத்திற்கு விளக்குகிறது. உடல் என்னும் மருத்துவரால். உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தி என்னும் மருந்தே நோய்த் தீர்க்கும் சர்வ நிவாரணி.

“எந்தவிதமான பாதிப்பாக இருந்தாலும் அவர் அதிவேகத்தில் மருந்துகளைத் தயாரித்து நமக்கு கொடுத்து விடுவார். அவர் தயாரித்த மருந்துகளை பார்த்துத் தான் நம் நவீன விஞ்ஞானிகள் செயற்கையான பல மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள்… அவர்தான் நம் உடல் என்னும் மருத்துவர் எதிர்ப்பு சக்தி எனும் மருத்துவர்.”
மேலும் டெங்கு நோய்ப்பரப்பும் வைரஸ் என்று ஆங்கில மருத்துவத்தால் பழிசுமந்த ஆர்போ வைரஸ் குறித்த புரிதலை ஏற்படுத்திய கட்டுரை,அவ்வாறாக ஆர்ப்போ வைரஸ் போன்ற அன்னிய பொருட்கள் உடலுக்குள் ஊடுருவும் போது அவற்றை எதிர்க்க உடலால் தற்காப்புக் கவசம் ஒன்று உருவாக்கப்படுகிறது அதுதான் ‘இன்டர்பெரான்’ என்னும் புரதம். இந்தப் புரதத்தை உடலின் எதிர்ப்பு சக்தி சுரக்கச் செய்கிறது என உடல் எதிர்ப்பு சக்தி குறித்த அறிவியல் தகவல்கள் பயனுள்ளவை. இது ஆர்ப்போ வைரஸ் கிருமிகளுக்கு மட்டுமானதல்ல.உடலிற்குள் புறச்சூழலிலிருந்து உள்நுழைந்து தொந்தரவு ஏற்படுத்த முனையும் எதுவொன்றையும் உடலின் எதிர்ப்பு சக்தி அடையாளங்கண்டு அவற்றை அழிக்க பிரத்யேகமான புரதம் போன்ற கேடயங்களை உருவாக்கி அவற்றை எதிர்த்துப் போராடி அழிக்கும் என்பதே உடலின் இயங்கியல் என்கிற படிப்பினையே கட்டுரை நமக்கு அறிவுறுத்துகிறது.
சரி எதிர்ப்புசக்தியின் பேராற்றல் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது என்பது புரிந்து விட்டது. இனி எதிர்ப்பு சக்தியை பெருக்கவென விலையுயர்ந்த உணவு பொருட்கள் பழங்கள் சத்துமாத்திரைகள் உடற்பயிற்சி யோகா போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விளம்பரப்படுத்தப்பட்டும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறதே இதில் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை உள்ளது. எதிர்ப்புசக்தியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டுரை வாசிப்பிற்குப் பின்பான வாசகமனதின் தவிப்பை முன்பே புரிந்திருந்த நூலாசிரியர், ஒரு மரபு வழி அக்குபங்சர் மருத்துவராதலால் எதிர்ப்புச்சக்தியை தக்கவைக்கும் பெலனாக்கவும் நான்கு முக்கிய இயற்கை வாழ்வியல் விதிகளான பசி தாகம் தூக்கம் ஓய்வு இவற்றின் அவசியத்தையும் மகத்துவத்தையும் எடுத்துரைத்து ஆரோக்கியத்தின் வாடிவாசவைத் திறந்து வைத்துள்ளார்.

நமது உடலின் மிகப் பெரிய உறுப்பாக தோல் இயங்கி வருகிறது. உடலின் நாள்பட்ட தேங்கிய கழிவுகளை உடல் வெளியேற்ற உடலின் தோல் என்னும் உறுப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது எதிர்ப்புசக்தி. கழிவு நீக்கம் மட்டுமின்றி உடல் மனம் உள்ளுறுப்பு இவற்றின் பரிபூர்ண ஆரோக்கியத்தன்மையை வெளிப்படுத்தும் கண்ணாடியாகவும் தோல் இருந்து வருகிறது. தோலின் தன்மையைக் கொண்டு உடல் உள்ளுறுப்பின் நிலைப்பாட்டை ஆய்ந்து அறிந்து சிகிச்சை அளித்தனர் நமது மரபு வழி மருத்துவர்கள். அக்குபங்சர் நோயறிதல் முறையின் ஒரு பகுதியான பார்த்தறிதல் முறையில் மேற்தோலின் நிறமாற்றம் உருவமாற்றம் தன்மைமாற்றம் கண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. கூடுதலாக பிரபஞ்ச ஆற்றலை உறிஞ்சி உள்ளுக்குக் கடத்தும் மிகமுக்கியப் பணியை உடலின் தோல் உறுப்பு செயல்படுத்திவருகிறது என்கின்றது அக்குபங்சர் முன்வைக்கும் ஒருங்கிணைந்த உடலறிவியல். ஆக மனிதரின் நிறை குறை ஆரோக்கியம் நோய்மை அழகு தளர்வு அனைத்தையும் தோல் காட்டித் தந்து விடும் என்கிறது “அழகென்னும் ஆபத்து” கட்டுரை. இத்தனை சிறப்பம்சம் கொண்ட உடலின் மூல ஆதார உறுப்பான தோல்பகுதியை நாம் முறையாகப் பராமரிக்கிறோமா என்றால் இன்றைய நவீன உலகில் தோல் என்னும் பேருறுப்பை பராமரித்தல் அழகுப்படுத்துதல் என்கிற அதிர்ன பிரங்கித்தனத்தில் கெடுத்து வருகிறோம் புரிதலற்ற அறியாமையால். கட்டுரை அறியப்படுத்தும் இந்தத்தகவல் பெண்கள் தங்கள் மேனியை அழகுபடுத்திக்கொள்ள சிகப்பழகாக்க மெருகேற்ற அழகுசாதனங்கள் என்று விளம்பரப்படுத்தப்படும் பல இரசாயனப்பூச்சுக்கள் பயன்படுத்துகிறோம். அதற்குப் பின்பான உடல் ஆரோக்கியம் சார்ந்த பேராபத்தின் விளைவை அறிவியல்பூர்வமான ஆய்வுத்தரவுகளுடன் பதிவு செய்கிறது கட்டுரை.

தில்லியில் உள்ள சயின்ஸ் அண்ட் என்விரான்மென்டல் ரிசர்ச் சென்டர் இந்தியாவில் சிகப்பழகை வரவழைக்கும் என்று சொல்லி சந்தையில் விற்கப்படுகின்ற கிரீம்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது இயற்கையான 18 மூலிகைகளில் தயாராகிறது என்றும் நமது முன்னோர்களின் பரிசு என்றும் விளம்பரப்படுத்தப்படும் கிரீம்களில் வழக்கமான பொருட்களோடு ஒரு முக்கியமான விஷம் கண்டறியப்பட்டுள்ளது இந்திய மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டப்படி அழகு சாதன பொருட்களில் கலக்கவே கூடாது என்று தடை செய்யப்பட்ட மெர்குரி 32 கிரீம்களிலும் கலக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மெர்க்குரி என்றால் பாதரசம் என்பது நமக்குத் தெரிந்தது தான். மெர்குரி நம் உடலில் நரம்பு மண்டலத்தை மிகக் கொடூரமாக பாதிக்கும் நியூரோ டாக்ஸின். மெர்குரி போன்ற இருப்பு இரசாயனங்கள் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடில்லாமல் உளவியல் அடிப்படையிலான பாதிப்புகளுக்கும் காரணமாக இருக்கிறது. அதேபோல் பெண்கள் பயன்படுத்தும் உதட்டுச் சாயமான லிப்ஸ்டிக்குகளில் 50 சதவிகிதம் குரோமியமும் 43 சதவீதம் நிக்கலும் கலந்திருப்பது தெரிய வந்தது குரோமியம் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று.

கட்டுரை பதிவிடும் “ஷெட்யூல் ஜே” குறித்த சட்டம் மிக முக்கியமானது. ஆங்கில மருத்துவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பிரத்யேகமான நோய்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளதாகப் பிரச்சாரப்படுத்துவது மருத்துவ சட்டத்திற்குப் புறம்பானது. இந்தச் சட்டம் குறிப்பிடும் 51 நோய்களுக்கு முழு நிவாரணமளிப்பதாக குணப்படுத்துவதாக ஆங்கில மருத்துவர்கள் அறிவுறுத்தினால் பொதுமக்கள் அந்த மருத்துவர் மீது புகாரளிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அந்த வட்ட Drug Inspector க்கு அதிகாரம் உண்டு. ஆக, மக்கள் ஷெட்யூல் ஜே சட்டம் குறித்து அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

“நம்முடைய மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 19 40 1945 மற்றும் 1995 செட்யூல் ஜே என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 51 விதமான நோய்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தால் இந்த 51 நோய்களையும் குணப்படுத்த முடியாது. பட்டியலில் குறிப்பிட்டுள்ள 51 நோய்களை குணப்படுத்துவேன் என்று கூறுவதோ தடுத்து விடுவதாக கூறுவதோ சட்டப்படி குற்றம்.”
என்று அச்சட்டம் அறிவித்துள்ளது.

கூடுதலாக அழகு சாதன பொருட்கள் பற்றிய முக்கியமான செய்தியும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றொரு பயனுள்ள தகவல். ஷெட்யூல் ஜே குணமாக்க முடியாத பட்டியலில் உடலின் நிறத்தை சிகப்பாக்குவேன் என்று கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் குறித்து இதுவரை எந்த மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அறிவுறுத்தவில்லை. மக்களும் நிபுணர் என்று மருத்துவரின் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டதை வைத்து ஏமாறுகிறார்கள். மருத்துவம் தொடர்பான சட்டத்தகவல்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று என்பதும் கட்டுரை வழியாக அறிய முடிகிறது.

“மருந்தே உணவு என்று சொன்ன நம் முன்னோர்களுக்கு பதிலாக, இன்று நஞ்சே உணவு என்று நான் சொல்லும் அளவிற்கு ரசாயன கலப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது.”

என்ற சொல்லாடலுடன் ‘நஞ்சின்றி அமையாது உணவு’ கட்டுரை சமகால உணவுக்கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இன்றைய உணவு மாசு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில் கட்டுரை உண்ணும் உணவு சார்ந்த பல முக்கிய தகவல்களை நமக்கு வழங்கி உதவுகிறது. உடலில் ஒவ்வொரு நொடியும் உருவாகுதலும் சிதைதலும் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கின்றன என்பது படைப்பின் விதி. அவ்வாறாக உருவாகும் ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியமானதாக பிறக்க வேண்டும் என்பது மனிதர்களாகிய நம்மனைவரின் விருப்பம். அதற்கு நாம் உண்ணும் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. உணவைப் பற்றி பேசும் போது நாம் ஒன்றை இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உண்ணப்படும் உணவு இரசாயனக் கலப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் ஒழிய உணவு விலையுயர்ந்த அதிக சத்துக்கள் என்று பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் உணவுகளைப் பற்றி கவனம் செலுத்தவேண்டியதில்லை. எளிமையான நமது தேவைக்கு அந்தந்த தட்பவெட்ப தன்மைக்கும் நிலச்சூழலுக்கும் ஏற்ப கிடைக்கும் உணவை பசித்தப் பின் ருசிக்க உண்டால் போதுமானது. இன்றைய உணவுகளில் கட்டுகடங்கா இரசாயன கலப்படம் அதிகரித்துள்ள சமகாலத்தில் இந்தக் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. கட்டுரையும் உணவு கலப்படம் சார்ந்த பல நூதனமான விஷயங்களைக் கொண்டுள்ளது.

”நாம் தினமும் பல் துலக்கப் பயன்படுத்தும் வித விதமான பேஸ்டுகளில் சிகரெட்டில் இருக்கும் ரசாயனம் நிக்கோட்டின் இருப்பதை டெல்லி இன்ஸ்டிடியூட் ஆப் ஃபார் சட்டிகள் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் 2012ல் வெளியிட்டுள்ளது.
*பேக்கரி உணவுகளில் பயன்படுத்தப்படும் மைதா மாவில் இன்சுலின் உற்பத்தியை தடுக்கும் கணைய செல்களை அழிக்கும் அலாக்சான் பயன்படுத்தப்படுவது வெளிப்பட்டிருக்கிறது. மைதா மாவு அமெரிக்காவில் பேஸ்ட்ரி பவுடர் என்று அழைக்கப்படுகிறது.

* மேலும் ப்ரிசர்வேட்டிவ் எனும் இருப்பு ரசாயனங்கள் நியூட்ரிலைசர் என்னும் சமன்படுத்திகள் செயற்கை மணம் ஊட்டும் ரசாயனங்கள், செயற்கைச் சுவை கூட்டும் ரசாயனங்கள், நிறம்மாற்றிகள் இப்படி எண்ணற்ற ரசாயனங்கள் நம் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

* ரசாயன நூடுல்ஸ் முதல் பிளாஸ்டிக் அரிசி வரை உணவு கலப்படங்கள் இப்போது நுட்பமானவைகளாக மாறியுள்ளன.
இவ்வாறாக உண்ணும் உணவு சார்ந்த எண்ணற்ற தகவல்கள் கட்டுரையின் முதல் சில பக்கங்களைக் கவர்ந்துள்ளன. முற்றிலும் பயனுள்ள தகவல்கள்.
கட்டுரையின் அடுத்த சில பகுதிகளில் உடல் ஆரோகியத்தை பாதுகாக்கவும் நோய்த்தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் நலமோடு வாழும் அதி முக்கியமான இயற்கை வாழ்வியலான இரவு தூக்கத்தின் இன்றியமையாமையை படைப்பிலக்கணத்தின் வழிமொழி கொண்டு விளக்கியுள்ளார் உமர் பாரூக்.

*தூக்கத்தின் அவசியம் என்ன என்பதை புரிந்து கொள்ள இரண்டு மூன்று நாட்கள் நாம் தூங்காமல் இருந்தால் போதும். தொடர்ந்து தூங்காமல் இருக்கும்போது உடல் மொத்தமாக சோர்வடைகிறது. யோசிக்கிற பேசுகிற அனைத்து விஷயங்களிலும் மனம் நிலை கொள்ளாமல் தத்தளிக்கிறது. உடலை மனத்தை புத்துணர்வளித்து புதுப்பிக்கும் வேலை தான் தூக்கத்தின் போது நடைபெறுகிறது. தூக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் சில குறிப்பிடும்படியான படைப்பின் தாத்பரிரத்தை கோடிட்டு விளக்கியுள்ளார் ஆசிரியர்.

* மரபு வழி அறிவியலில் மொத்த உயிரினங்களையும் இரண்டாகப் பிரிக்கிறார்கள். ஒன்று இரவில் தூங்குபவை. இரண்டு இரவில் தூங்காதவை. இதில் இரவில் தூங்க வேண்டிய உயிரினங்கள் தூங்காமல் இருந்தாலும் சரி தூங்கக் கூடாத உயிரினங்கள் தூங்கினாலும் சரி அது இயற்கை விதி மீறலாகும். அதனால் உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் கழிவுகள் தேங்கி விடுகின்றன.

* இரவில் தூங்காத உயிரினங்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். இரவில் தூங்காத உயிரினங்கள் கண்களில் டேப்டம் லூசிடம் ( Taptum Lucidum) என்ற சிறப்புப் பொருள் உண்டு.
அடுத்ததாக இரவின் தூக்கத்தில் நிகழும் உடல் இயக்கங்களைப் பற்றி மரபுவழி அறிவியலின் அடிப்படையில் விளக்குகிறார் உமர் பாரூக்.

* இரவு தூக்கத்தில் உடல் தன்னை சுத்திகரித்து கொள்ளும். குறிப்பாக கல்லீரல் முழு மூச்சாக இயங்கும். *இரவு தூக்கத்தில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றும் பணி தான் ஆங்கிலத்தில் DETOXIFICATION என்று அழைப்பார்கள்.

*நம்முடைய கல்லீரல் மட்டும் முழுமையாக பழுதடைந்தால் ரத்தத்தில் உள்ள இரசாயன நச்சுக்கள் ஓரிரு நாட்களில் நம்மை கொன்றுவிடும். நம் எதிர்ப்பு சக்தியின் அடிப்படை வேலைகளை செய்யக்கூடிய உறுப்பாக இருப்பது கல்லீரல் தான்.

*நச்சுக்களை அகற்றும் இந்த வேலையை பகலில் அன்றாட வேலைகளுக்கிடையில் செய்யாமல் இரவில் செய்கிறது. கல்லீரல் இரவு 11 மணிக்கு துவங்கி அதிகாலை 3 மணி வரையில் நச்சுத்தன்மையை அகற்றும் பணி நீடிக்கிறது.

*ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையில் வளர்வதற்கு இருளும் அதன் சக்தியும் சீர் தோஷணமும் தேவைப்படுகிறது. செயற்கையாக இன்று டெஸ்ட் டியூப் பேபிகளை ஆய்வுக்கூடங்களில் கருக் கொள்ளச் செய்தாலும் கூட அதை வளர்ப்பதற்கான உபகரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கரு வளர்வதற்குரிய விசேஷ சூழல் ஒரு தாயின் கர்ப்பப்பையில் தான் நிலவுகிறது. கர்ப்பப்பை இருட்டில் என்ன விதமான சூழல் நிலவுகிறதோ அதே மாதிரியான சிறப்பு தன்மை வாய்ந்தது தான் இரவின் சூழலும்.

*இன்று தீர்க்க முடியாத நோய்கள் என்று ஆங்கில மருத்துவம் அறிவிக்கிற நோய்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பல நோய்கள் ஹார்மோன் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் வருபவை. இந்த ஹார்மோன் சுழற்சியின் பராமரிப்பை நம் தூக்கம் தான் துவங்கி வைக்கிறது.

* இரவில் நாம் தூங்கும்போது கண்களில் பெறப்படுகிற குளிர்ச்சியின் அடிப்படையிலும் இரவின் குளிர்ச்சியின் பயனாலும் நம் மூளையின் அருகில் இருக்கும் பீனியல் சுரப்பி தூண்டப்படுகிறது. இதிலிருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரந்து உடலின் பல வேலைகளுக்குக் காரணமாக அமைகிறது.

*பிட்யூட்டரியின் டி.எஸ்.ஹெச் ஹார்மோன் சுரந்தால் தான் தைராக்ஸின் ஹார்மோன் சுரக்கும்.

*இப்படி ஒன்றை ஒன்று சார்ந்த சுழற்சி தான் ஹார்மோன்களின் இயக்கம். இந்த சுழற்சியில் இரவு தூக்கத்தின் போது சுரக்க வேண்டிய மெலட்டோனின் சுரக்கவில்லை என்றால் படிப்படியாக மற்ற ஹார்மோன்களின் சுரப்பிலும் மாறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. 1950 களில் நவீன அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிகோரியன் உடல் கடிகாரத்தின் படியும்; மரபு வழி அறிவியலின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான உடலியல் விதிகளின் படியும் இரவு 11 மணிக்கு அதிலும் நாம் தூங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே சுரக்கும்.

இவ்வாறாக உடலின் இயக்கசக்திக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உடல் கழிவுகளின் சுத்திகரிப்பு பணிக்கும் இரவு உறக்கம் மிக மிக அத்தியாவசியமானது என்பதை மேலும் பல மரபு வழி அறிவியல் ஆதாரங்களுடன் கட்டுரை விளக்க வைக்க பெரும் மெனக்கிடலை மேற்கொள்கிறது.

மனித வாழ்க்கையின் அதி முக்கியமான தேவைகளாக உணவும் உறக்கமும் பெரும் பங்கு வகிக்கின்றன. இரண்டையும் அனைத்து மனிதர்களும் தங்களை மீறியும் அறியாமையிலும் சில சமயங்களில் புரிதலுடனும் புரியாமலும் செய்து வருகிறோம். இவ்விரண்டையும் இயற்கையின் விதிக்குட்பட்டும் இன்றைய தலைகீழ் மனிதர்களின் தவறான நம்பிக்கைகளிலிருந்தும் முறையே கடைப்பிடிக்கும் வழிமுறைகளை மிகத் தெளிவாக சாதாரண மக்களும் பயன் பெறும் வகையில் எடுத்துக் கூறியுள்ளார் உமர் பாரூக் அவர்கள்.

தொடரும் அத்யாயம் சட்டத்தின் பார்வையிலும் ஆங்கில மருத்துவ கவுன்சிலின் கோட்பாட்டின் அடிப்படையிலும் மிகப் பெரிய மனித குற்றச்சாட்டாகக் கருதப்படும் வீட்டுப் பிரசவம் என்கிற சுகப்பிரசவம் குறித்த உடலியலை இயற்கையின் வழிமொழியோடு உலகளாவிய வீட்டுப் பிரசவங்களின் ஆவணத்தரவுகளுடன் ஒப்படைத்துள்ளார். காரணம் இன்று மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சைக்கும் அச்சத்திற்கும் அசாத்தியத்திற்கும் உரியதாக இருப்பது வீட்டுப் பிரசவம். இரசாயன மருத்துவத்தைக் கடுமையாக விமர்சிக்கும் இயற்கை வாழ்வியலாளர்கள் கூட சட்டென பயந்து விழுந்து விடும் இடமாக மகப்பேறு மருத்துவமனைகள்.காரணம் வீட்டுப்பிரசவம் என்றால் சிசுவிற்கும் தாய்க்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிற பொய்யான பிம்பத்தை ஆழமாகப் பதிந்து விட்டனர். இயற்கையின் விதிகளையும் நியமங்களையும் விளங்கிக் கொள்ளும் மனிதர் கூட முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத விஷயமாக வீட்டுப் பிரசவத்தின் மீது கடுமையான பீதியை மக்கள் மனதில் நயம்பட தைத்து விட்டது ஆங்கில மருத்துவமும் அரசாங்கமும்.

இரண்டு தலைமுறைக்கு முன்பு பெரும்பாலும் வீடுகளில் தான் சுகப்பிரசவங்கள் நிகழ்ந்து வந்தன. இன்று வரை நலமோடும் பூரண உடல் ஆரோக்கியத்தோடும் வீட்டில் பிறந்து முந்தைய இரண்டு தலைமுறைகள் இருப்பதை மக்களும் மறந்து விட்டனர். அதைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாத அளவிற்கு மக்களின் சிந்தையை மழுங்கடித்து வைத்துள்ளது ஆங்கில மருத்துவம். ”அதிகரிக்கும் வீட்டு பிரசவங்கள்- சிக்கல்களும் தீர்வுகளும்” என்கிற இந்தக் கட்டுரை வீட்டுப் பிரசவங்கள் குறித்து உருவாக்கி வைத்துள்ள போலியான சிக்கல்கள் பற்றியும் அதற்கான சட்டத் தீர்வுகளும் முறையே பதிவு செய்து எழுதப்பட்டுள்ளது.

வீட்டுப் பிரசவம் குறித்த அறியாமையைக் களையும் வகையில் சட்ட ஆவணத்துடனும், இந்தியாவில் இன்றும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஆரோக்கியமான இயற்கை முறையிலான வீட்டுப் பிரசவங்களும் மற்றும் அயல்நாடுகளில் கூட தற்செயலாக இருந்த இடத்திலேயே நடைப்பெற்ற சுகப்பிரசவம் பற்றியும் பதிவு செய்யப்பட்ட சான்றுகளுடன் நம்மை அணுகுகிறது. சுகப்பிரசவம் என்றாலே பிள்ளைபேறு தன்னியல்பாக தாய்க்கு சுகமான ஒரு உணர்வுடன் பிரசவித்தல் ஆகும். இன்றைய பிள்ளைபேறு அவ்வாறாகவா நிகழ்கிறது.

பிரசவம் என்றாலே இரத்தக்களமாக மாறிவிட்டது. இயற்கைப் பிரசவம் நடந்து வந்த காலம் மாறி மெல்ல மருத்துவமனை பிரசவங்களில் நகர்த்திச் சென்று இன்று செயற்கையாக பல அடாவடிக் காரணங்கள் குறித்து வைத்து சிசேரியன் என்கிற அறுவை சிகிச்சைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. கருவுற்றப் பெண்களின் மனநிலையை முதல் மாத பரிசோதனையிலேயே அறுவை சிகிச்சைக்குத் தயார் படுத்தி விடுகிறது ஆங்கில மருத்துவம். கருவுறுதலையும் பிள்ளைப்பேறையும் தங்களின் வாழ்வியல் இயல்பின் ஒன்றாகக்கருதி பெரிதுப்படுத்தாமல் தன்னியல்பில் வாழ்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டு இன்றைய நவீனத்துவ தொழில்நுட்பத் தலைமுறைகளுக்கு அருங்காட்சியர்களாகத் திகழ்கின்றனர் என்பது நகைமுரண்.
சரி கட்டுரை குறிப்பிடும் தகவல்களை கவனிப்போம். சமீபமாக பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக தமிழம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்கு உள்ளான, பிரசவம் குறித்த கனமான கிலியை இன்று வரை உண்டாக்கி வைத்திருக்கும் திருப்பூரில் நடந்த பிரசவ மரணம் பற்றிய முழு விவரங்களுடன் கட்டுரை துவங்குகிறது . தொடரும் பக்கங்கள் வீட்டுப்பிரசவத்திற்கு பிறப்பு சான்றிதழ் தொடர்பான தகவல்களின் உண்மை நிலையை பதிவு செய்துள்ளது வீட்டுப்பிரவத்தால் மாநகராட்சியில் சான்றிதழ் பெற இழுபறி நடக்கும் என்கிற பதற்றத்தை குறைக்கிறது.

*பிறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் படிவத்திலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “குழந்தை மருத்துவ மனையில் பிறந்தால் மருத்துவரும், வீட்டில் பிறந்தால் உறவினரும் 21 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.” என்று. எனவே வீட்டில் பிரசவம் நடப்பது என்பது தடை செய்யப்பட்ட தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.”

* இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவீதம் 5%. இந்த நிலை சுமார் 30 ஆண்டுகளாக பெரிய மாற்றமின்றி அப்படியே இருக்கிறது. பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு சிசேரியன் செய்யப்படும் சதவீதம் 10 – 30%. இது சுமார் 25 சதவீதம் கூடுதலாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வு முடிவு.

* இந்திய மாநிலங்களில் பிரசவ கால இறப்புகள் மிகக் குறைந்த மாநிலம், அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளதாக நம்பப்படுகிற 99.99 % பிரசவங்களை மருத்துவமனைகளில் நடத்தும் தமிழ்நாடு அல்ல. மருத்துவமனைகளுக்கு வராமல் அதிகமான பிரசவங்கள் நடக்கும் மாநிலமான நாகாலாந்து தான் பிரசவ கால இறப்புகள் மிகக் குறைந்தமாநிலம். பிரசவம் ஆரோக்கியமாக நடப்பதற்கு மருத்துவமனை மட்டுமே சரியான இடம் என்பது வெறும் நம்பிக்கை தான்.

*பிரசவம் என்றாலே சிசேரியன் என்ற நிலையும் அதிலும் தனியார் மருத்துவமனைகளுக்கு போனால் டீலக்ஸ் பேக்கேஜ் ஆர்டினரி பேக்கேஜ் பிரீமியம் பேக்கேஜ் என்று பிரசவங்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கும்.

*பொருளாதாரக் கொள்ளை பிரசவத்திற்கு பின்பான உடல் ரீதியான தொந்தரவுகள் என மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய மழலைச்செல்வத்தின் வருகை இன்று மக்களை பயமுறுத்தும் போது சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் வீட்டு பிரசவ வாய்ப்பையே நாடுவார்கள்.

*பிரசவம் என்பதை ஒரு நோயாகக் கருதி ஏராளமான ரசாயன மருந்துகளை தாயின் உடலுக்குள் கொட்டும் வேலை இன்னொரு புறம் நடக்கிறது. சிசேரியனுக்குப் பின்பான உடல் தொந்தரவுகள் மக்களை அச்சமூட்டும் காரணிகளில் ஒன்று. ஆக இன்றைய சூழல் மருத்துவமனை பிரசவம் தான் நிகழ வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டு விட்ட சட்ட நெருக்கடிகள் கழுத்தை இறுக்குவதில் மரபுவழி மருத்துவங்களுக்கு பிரசவம் பார்க்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. வீட்டுப்பிரசவம் நடைபெறுவதில் கடுமையான சட்டநடவடிக்கை கொண்டு வரப்பட்டுவிட்ட இன்றைய ஒற்றை மருத்துவ ஆதிக்கத்தில் சுகப்பிரசவத்திற்கான பெரும்பாரியான வழிகள் அடைக்கப்பட்டு விட்டன.ஆங்கில மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனைகள் தவிர வேறு எங்கு பிரசவம் நிகழ்ந்தாலும் அது அரசு அங்கீகரித்த மரபு மருத்துவராக இருந்தாலும் சட்ட விரோதமான செயலாக இன்று நடவடிக்கைகள் கடுமையான சட்டங்களை முன்வைக்கின்றன. இப்படியாக இயற்கையான பிரசவங்கள் மருத்துவமனைகளில் ரணகளமாக மாறியதில் மேலும் பிற மருத்துவங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்படாத நிலையில் மக்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதில் பீதியடைந்துள்ளனர். பெறும் சுமையாகக் கருதும் தாயகள் பிரச்விப்பதை சாபமாகக் கருதும் போக்கு மனதிற்குள் படிந்து விட்டது.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து தங்கள் சிசுவையும் தாயின் ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ளும் பொருட்டே போதிய விழிப்புணர்வின் அடிப்படையில் யூடியூப் போன்ற வளைதளங்களில் தங்களுக்கான நல்வாழ்வைத் தேடி அலைகின்றனர். இப்படியான ஆரோக்கிய அறத்தின் சார்பில் விளைந்ததே பல வெற்றிகரமான வீட்டுப் பிரசவங்கள்.

*நம் நாட்டின் மருத்துவச் சூழலை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. இப்படியான பல்வேறு காரணிகளின் விளைவு தான் தமிழகத்தில் வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு இந்திய குடிமகன் தான் எந்த மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை அரசியல் சாசனம் மக்களுக்குத் தந்தது. இதனை கோரும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உண்டு

* அமெரிக்காவில் நேஷ்வில் பகுதியைச் சேர்ந்த டியா ஃப்ரீமேன் நிறைமாத கர்ப்பக்காலத்தில் துருக்கி சுற்றுலா சென்ற போது அங்கேயே இஸ்தான்புல் நகரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு இயற்கையான முறையில் தானே பிள்ளை பெற்றுக்கொண்டார் என்கிற கட்டுரை பதிவு செய்த தகவல் வீட்டுப்பிரசவத்திற்கு எதிராக வன்முறைக் கொடி தூக்கி நிற்கும் இந்திய அலோபதி மருத்துவ கவுன்சிக்கு ஒரு சவுக்கடி. உலக அளவில் அமெரிக்கா போன்ற மருத்துவத்துறை கோலோச்சியதாகக் கருதப்படும், மருத்துவ வளர்ச்சி பெற்ற நாடுகள் அங்கீகரிக்கும் வீட்டுப் பிரசவத்தை கடைபிடித்து ஆதரித்து கொண்டாடி மகிழும் சுகப்பிரசவத்தை இந்தியாவில் சட்டவிரோதமாக தண்டனைக்குரிய குற்றமாகக் கொண்டு பிரசவம் பார்க்கும் மரபு வழி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது. இதற்கான தீர்வுகளையும் கட்டுரை பதிவு செய்துள்ளது தொடரும்பக்கங்கள்.

*தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஷீலா ராணி சுகப்பிரசவம் குறித்த கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழ் ஒன்றில் எழுதி இருக்கிறார் அதில் அவர் முன்வைத்த தீர்ப்பே பொருத்தமானது. மரபு வழி தாதியர்களை மறுபடியும் உருவாக்க வேண்டும் பிரசவம் பார்ப்பதற்காக மரபு வழி நவீன புரிதல்களையும் கொண்ட புதிய தாதிகளை உருவாக்க வேண்டும் மருத்துவர்களின் குறுக்கீடு பிரசவங்களில் குறைக்கப்பட வேண்டும் மிக அவசியமான தேவை ஏற்பட்டால் ஒழிய எந்த மருத்துவரும் பிரசவத்தில் தலையிடக்கூடாது. இதை நோக்கிய மாற்றம் ஏற்பட்டால் தவிர வீட்டில் பிரசவங்களை சட்டத்தினால் மட்டும் கட்டுப்படுத்த இயலாது. முறையான உடல் பற்றிய அறிவும் புரிதலும் ஒழுங்கான இயற்கை வாழ்வியலும் இல்லாமல் திடீர் வீட்டு பிரசவங்கள் சிக்கலை ஏற்படுத்த கூடும் என்பதையும் வீட்டு பிரசவ முயற்சியாலர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற வீட்டுப் பிரசவம் குறித்த மிக முக்கியமான மருத்துவ பரிந்துரைப்பை மரபு வழி மருத்துவராக நூலாசிரியர் முன்வைத்திருப்பது கவனப்பட வேண்டியது.

இதுவரை நோய்கள் உடலுக்குள் தங்குவதற்கான காரணங்கள் உயிர்கொல்லி நோய்கள் என்று அச்சுறுத்தப்படும் நோய்கள் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றுளம் அதைக் கொண்டு உருவாகி வரும் அரஅரசியல் செய்தும் பீதியை கிளறி விட்டும் தனது தடித்தன கரங்களுக்குள் அடைத்து வைத்துள்ள அத்தனை அடாவடித்தனங்களையும் இந்தத் தொகுப்பு விளக்கமாகஎடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஆங்கில மருத்துவத்தின் இவ்வனைத்து சூட்மங்களிலிருந்து விடுபட மக்கள் பின்தங்கிப் போன மரபுவழி மருத்துவங்கள் புறம் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். ஆனால் இன்றைய மருத்துவ துறை இந்திய மரபுவழி மருத்துவங்களின் ஆணிவேரை வீழ்த்தி மரபியல் தத்துவத்தை திக்குத் தெரியாமல் தொலைய வைத்துள்ளது. ஆனால் சீன மரபுவழி மருத்துவமான அக்குபங்சர் சில நல்ல உள்ளங்கள் வழியாக இன்றும் தனது தத்துவத்திலிருந்து வெளியேறாமல் உலக நாடுகள் பலவற்றிலும் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அக்குபங்சர் மரபு வழி மருத்துவத்தின் மீதான மக்களின் கவனம் பதம் பார்த்து வரும் நிலையில் குறிப்பாக தமிழகத்தில் கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் கல்வி நிறுவனத்தின் வழியாகத் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டு குணப்படுத்தவே முடியாது என்று அலோபதி மருத்துவம் கைகழுவிய பல நோய்களை முழுமையாக குணப்படுத்தி வருகிறது. இந்த மருத்துவத்தின் சிகிச்சை முறை பஞ்சபூதத் தத்துவத்தின் அடிப்படையில் முறையே குணப்படுத்தப்பட்டு வருவதை பிடிக்காத சில சமூகப் புல்லுருவிகள் அக்குபங்சர் மருத்துவம் குறித்த தவறான பிரச்சாரத்தைப் பிரசங்கம் செய்து வருகின்றனர். மருத்துவத் துறையில் ஆயுஷூக்கு நிகரான அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று வரும் நிலையில் அக்குபங்சர் போலி மருத்துவம் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமல் தவறான சிகிச்சை அளித்து வருவதாக ஆங்கில மருத்துவர்கள் சிலரின் பொய்ப்பிரசங்களை உடைத்தெறியும் வகையில் அரசு சார்ந்த பல மருத்துவ அங்கீகார ஆவணங்களை தொகுப்பில் சமர்ப்பித்துள்ளார் நூலாசிரியர்.

குறிப்பாக சென்னையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர் முகமது கிஸார் தமிழக அரசிடம் கேட்டுப் பெற்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல்களில் இருந்து இந்த குழப்பம் தொடங்குகிறது என்று சுட்டிக்காட்டிய உமர் பாருக் அவர்கள் முகமது கிஸார் மட்டுமல்ல வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அக்குபங்சர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமா இல்லையா என்கிற குழப்பங்களுக்கான அரசு பூர்வ மான தரவுகளைப் பதிவு செய்துள்ளார்
இந்த கட்டுரை முழுக்க தமிழக அரசின் ஆர்.டி.ஐ குளறுபடிகளை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வாருங்கள் நாமும் அக்குபங்சர் மருத்துவம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களும் அரசு பூர்வமான தரவுகளையும் அறிந்து கொள்வோம்.

* ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 192 நாடுகளில் 178 நாடுகளும் உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 129 நாடுகளில் 80 சதமான நாடுகளும் இப்போது அக்குபங்சரை அங்கீகரித்துள்ளன. ஒரு மருத்துவ முறை உலகெங்கும் இப்போது மிக வேகமாக பரவி வளர்ந்துள்ளதெனில் அது அக்குபங்சர் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவர்களுக்கான யூகம் எனும் அறிக்கை கூறுகிறது.

* அக்குபங்சர் மருத்துவம் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். 2003 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது இந்த விஷயத்தை உறுதி செய்து மறுபடியும் 2010ல் ஒரு அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. * அக்குபங்சர் சிகிச்சையை அரசு ஊக்குவித்தால் பொதுமக்களுக்கு பயன்படும் என்றும் ராஜ்யசபாவில் டாக்டர் விகாஸ் கேள்வி எழுப்பினார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக பதிலளித்த அமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் அக்குபங்சர் 2003 லேயே அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என்றும் முறையாக பயிற்சி பெற்றவரோ அல்லது ஏற்கனவே பதிவு செய்த மருத்துவர் செய்யலாம் என்றும் அரசாணை விவரங்களை உறுதி செய்துள்ளார்.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையிடம் அக்குபங்சர் அங்கீகாரம் பற்றிய கேள்வி கூட்டமைப்பால் எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறையின் அப்போதைய செயலாளர் முகமது கலீம் பதில் அளித்துள்ளார் ஏற்கனவே 2003 மற்றும் 2010 மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆணைகளின் படி அக்குபங்சர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. என்றார்.

*பல்வேறு வழக்குகளில் அக்குபங்சர் சிகிச்சை முறை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என்பதை உறுதி செய்து பல வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து உள்ளன மிக சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் ஜனவரி 3 2017 அன்று அளித்த தீர்ப்பும் சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 11 2017 அன்று அளித்த அக்குபங்சர் மருத்துவம் செய்ய அனுமதிக்கும் இடைக்கால ஆணையும் மிக முக்கியமானவை

* மேலும் தமிழகத்தில் 1970களில் இருந்து அக்குபங்சர் மருத்துவம் காலூன்ற துவங்கியதும் 2002 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆளுநர் உரையில் அக்குபங்சர் மருத்துவம் முன்னேற்றும் அடிப்படையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதும் அடிப்படையான செய்தியாகும்.

* 2010ல் செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 110 விதியின் கீழ் அக்குபங்சர் உள்ளிட்ட இயற்கை மருத்துவங்களுக்கான வாழ்வியல் மருத்துவமனைகளை துவங்கும் திட்டத்தை அறிவித்தார். *தமிழகத்தில் பல யூ.ஜி.சி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் சிகிச்சை முறையை வைத்திருக்கிறன.

* 2016 ஆகஸ்டில் ஆயுஷ் துறையில் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் இந்தியன் மெடிசன் அமைப்புகளும் மெடிக்கல் கவுன்சிலுக்கும் அக்குபங்சர் மருத்துவத்தை உங்கள் அமைப்பு கட்டுப்படுத்துமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டு இரு அமைப்புகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவத்தை மட்டுமே தங்கள் அமைப்பு கட்டுப்படுத்தும் என்றும் தெளிவாக கூறியுள்ளதைப் பதிவு செய்து தமிழ்நாடு போர்ட் ஆஃப் இந்தியன் மெடிசின் அமைப்பிடம் ஆர்.டி.ஐ யின் அறியாத்தனமான கேள்விக்கான பதிலை கட்டுரை மூலம் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் உமர் பாரூக் அவர்கள். மேலும் ஆயுஷ் என்கிற ஐந்து மருத்துவங்களை மட்டுமே கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிடம் அக்குபங்சர் குறித்த எந்த விளக்கமும் வழிகாட்டுதலும் விவரங்களும் ஒரு காலும் கிடைக்காது என்பதை மருத்துவ துறை சார்ந்த ஆதாரப்பூர்வமாக விளக்கங்களுடன் எடுத்துக் கூறியுள்ளார்.

*தமிழக உயர் நீதிமன்றத்தில் அக்குபங்சர் அங்கீகாரம் குறித்த வழக்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் ஆர் .டி.ஐ யின் பதில்கள் பதிலளித்தவர்களுக்கு தான் சிக்கலை ஏற்படுத்துமே அன்றி இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கும் அக்குபங்சருக்கோ எவ்வித சிக்கலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கட்டுரையில் பதிவு

செய்துள்ளார் நூலாசிரியர்.December 13 அடுத்த கட்டுரை நூலாசிரியருக்குள் அக்குபங்சர் மருத்துவம் நீர் போல் தவழ்ந்து கொண்டு தீப்பொறி போல் வெடித்து கிளம்பி இன்று அக்குஹீலராக மரபு வழி மருத்துவராக உருமாறிய சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஆங்கில மருத்துவ அடாவடித்தனத்தை பொய்த்தன்மையை முன்னுக்குப் பின் முரணான உடல் பற்றிய அறிவியலில் குழப்பம் கொண்டு அதிலுள்ள சிக்கல்களை ஆய்ந்து அறிந்து தூக்கி வீசி மரபு வழி மருத்துவத்தின் தேடலில் கிடைத்த பொக்கிஷமாக அக்குபங்சர் மருத்துவம் உமர் பாரூக் அவர்களின் மருத்துவ கனவு. சமூகத்தின் அத்தனை அவலங்களுக்குமான துவக்கப் புள்ளியாக அரசியலாக இருப்பது மருத்துவத்துறை என்பதை இருபது வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்த நூலாசிரியர் மக்களின் ஜனநாயகம் மருத்துவத்தில் தான் ஒளிந்துள்ளது மறந்து போன மரபு வழி மருத்துவங்களை மீட்டுருவாக்கம் செய்வதே இன்றைய அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்பதை அன்றே உணர்ந்து தேடித் திரிந்த அவரின் சமூக அக்கறைக் கொண்ட பயணங்களின் விளைவாக இன்று இலட்சக்கணக்கான மக்கள் நோய்களிலிருந்தும் மருத்துவ அரசியலிலிருந்தும் பாதுகாப்பாக உள்ளனர். இந்தக் கட்டுரை முழுக்க அவரின் கரைந்து போன மருத்துவ ஆய்வுகளைப் பற்றியும்

ஆய்வுக்கூட பரிசோதகராக இருந்த காலங்களில் ஆங்கில மருத்துவத்தின் திரைக்கு அப்பால் பதுங்கியுள்ள மருத்துவ மர்மங்களை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகி ஆங்கில மருத்துவத் துறையிலிருந்து வெளியேறிய நூலாசிரியரின் சரிதை வெறும் வாழ்க்கைக் கதையல்ல. ஆங்கில மருத்துவ மோகத்தின் அறியாமைக் கிணற்றிலிருந்து நம்மை சிந்திக்கத் செய்த வாழ்க்கைப்பாடம். அலோபதி யின் பல அட்டூழியங்களைத் தாங்க முடியாத நிலைக்கு நிறுத்தியிருந்தாலும் முற்று முழுவதுமாக அந்தத் துறையை கைகழுவச் செய்த சம்பவத்தை நூலாசிரியர் பகிர்ந்தது ஈரல் குலையை நடுங்கச் செய்தது.ஆங்கில மருத்துவத்தை நம்பி தனது வாழ்வாதாரத்தைத் துவங்கிய உமர் பாரூக் மனிதத் தன்மை முற்றிலும் அற்றுப் போன துறையாக, மக்களின் உயிர் காக்கும் உத்தம பணியைத் தேர்வு செய்தோம் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் நோய்களால் அவதிப்படும் மக்களின் ஆரோக்கியத்தை மீட்க ஆய்வு மருத்துவராகத் தனது பங்கிற்கு நோய்க் கூறுகளை பரிசோதித்து கண்டறிந்து மருத்துவர்களுக்கு தெரிவிக்கும் உத்தமமான துறையில் பணியாற்றி வருகிறோம் என்கிற மிதப்பில் இருந்த ஆசிரியருக்கு ஆங்கில மருத்துவம் தனது முகத்திரையை அச்சு அசலாகக் காட்டித் தந்தது. பெருத்த ஏமாற்றத்துடன் தனது கனவை பூர்த்தியாக்க மரபுவழி மருத்துவங்களைத் தேடிப் போன நூலாசிரியருக்கு அக்குபங்சர் அறிமுகமானது. அக்குபங்சர் மருத்துவத்துடனான தனது சுயசரிதையை பல நூல்களில் பதிவு செய்த நூலாசிரியர் இந்தத் தொகுப்பின் வழியாக மீண்டும் தனது வாழ்க்கை வரலாற்றிற்கு உயிரளித்துள்ளார். அக்குபங்சர் மருத்துவத்தின் தன்னிகரில்லா சரித்திரப் புத்தகத்தை அடுத்தடுத்த பக்கங்களில் பதிவு செய்திருப்பது உடலின் ஒப்பற்ற பேராண்மை நைத்து மெய்கூசுகிறது.

“ஒற்றை புள்ளி சிகிச்சை முறை – அக்குபங்சர் வரலாற்றின் வழியே ஓர் ஆய்வு.” என்கிற தலைப்பு சூடிய கட்டுரையின் முக்கியமான சில வரலாற்றுத் தகவல்களை நாமும் அலசுவோம்.

*உலக மரபு வழி மருத்துவங்களில் அக்குபங்சர் ஒரு தொன்மையான மருத்துவ முறையாகும்.

*உலகம் முழுதும் பின்பற்றப்படும் 104 மரபு வழி மருத்துவங்களில் மருந்தில்லா மருத்துவங்களில் தலைமை மருத்துவமாக அக்குபங்சர் விளங்குகிறது.

*உடலின் இயல்பான இயக்கத்தில் உருவாகும் ஆற்றல் தடை தான் நோய் என்று கூறும் அக்குபங்சர் அந்தத் தடை களை எளிமையாக நீக்கும் சிகிச்சையை முன் வைக்கிறது.

* உடலில் ஆற்றல் தடையையும் தேவையையும் உணர்த்தும் நோய் அறிதல் முறைகளையும் உடலில் இயற்கையாக அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளைத் தூண்டும் சிகிச்சை முறைகளையும் கொண்டுள்ளது அக்குபங்சர் மருத்துவம்.

*அக்குபங்சர் தத்துவ அடிப்படையில் ஒரே ஒரு புள்ளியை தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் ஒற்றை புள்ளி சிகிச்சை முறை மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் நோய்களைப் பிரித்து அதற்கேற்றார் போல பல புள்ளிகளில் சிகிச்சை அளிக்கும் பல புள்ளி சிகிச்சை முறை என இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

*சிகிச்சை அடிப்படையிலும் தத்துவ அடிப்படையிலும் பல புள்ளி சிகிச்சை சரியானதா? அல்லது ஒரு புள்ளி சிகிச்சை சரியானதா என்று விவாதிப்பது கட்டுரையின் நோக்கமல்ல ஒரு புள்ளி சிகிச்சை முறை கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் என்று தனது கருத்தை திறந்த புத்தகமாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

*அவ்வாறு இருக்க ஒற்றை புள்ளி சிகிச்சை என்பது அக்குபங்சரின் அடிப்படையான சிகிச்சை வழிமுறையாகும் ஒற்றை புள்ளி சிகிச்சை முறை முற்காலங்களில் பின்பற்றப்பட்டு பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் கட்டுரை பதிவு செய்துள்ளது.

*2010இல் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அக்குபங்சர் மருத்துவத்தை அறிவிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட ஆய்வில் சீனாவின் மூத்தமருத்துவர்களின் சிகிச்சைமுறைப் பற்றிய சில தகவல்கள மரபு வழி மருத்துவர்களான 80 வயது மருத்துவர் ஷெங் சின்னாங், 82 வயது ஹீ பூரன் போன்ற முதிர்ந்த மருத்துவர்கள் மட்டுமில்லாது 70-80 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் பகுதி அக்குபங்சர் மருத்துவர்கள் மூன்று புள்ளிகளில் மட்டுமே சிகிச்சையளித்து நோயாளிகளை குணப்படுத்தி வந்தனர் என்பது இந்தக் கட்டுரை வழியாக ஆவணத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* 1971 இல் அமெரிக்க அதிபர் நிக்சனும் ஊடகவியலாளர் ஜேம்ஸ் ரெஸ்டனும் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முன்பே குடல்வால் அறுவைசிகிச்சை செய்திருந்த நிக்சன் திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதால் சீனாவின் அக்குபங்சர் மருத்துவர் லீ சாங் யுவானிடம் அக்குபங்சர் சிகிச்சை பெற்று வயிற்று வலி குணமடைந்த மிக முக்கியமான தகவலை ரெஸ்டன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அக்குபங்சர் குறித்த கட்டுரை ஒன்றில் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையின் மிக முக்கிய பதிவாக ரெஸ்டன் குறிப்பிட்டிருப்பது
“அக்குபங்சர் மருத்துவர் முழங்கால் பகுதியில் 3 இடங்களில் ஊசியை செலுத்தி சிகிச்சை அளித்தார்.”
என்று நிக்சன் சிகிச்சை பெற்றதை அருகிலிருந்து கண்டு வியந்த தனது அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார் ரெஸ்டன்.

*ஒரே ஒரு புள்ளியின் மூலம் ஆயிரக்கணக்கான நோய்களை குணப்படுத்த முடியும் என்பது சீன பழமொழி.

* ஒரே ஒரு புள்ளியின் மூலம் 10 ஆயிரத்துக்கு அதிகமான நோய்களை களைய முடியும் என்பது டாக்டர் உ. வேய். பிங் அவர்களின் அக்குபங்சர் தத்துவார்த்த அனுபவ வரிகளை இந்நூல் வழியாக அறிய முடிகிறது., இந்தியாவில் முறையற்று புழக்கத்தில் இருந்த அக்குபங்சர் சிகிச்சை முறையை நெறிபடுத்தி ஒழுங்கு செய்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேலான நோயாளிகளை குணப்படுத்தி மருத்துவ உலகில் புரட்சி ஏற்படுத்திய டாக்டர் சகோதரர்களான ஃபஸ்லூர் ரஹ்மான் மற்றும் சித்திக் ஜமால் இருவரும் விதந்து தங்கள் உரைப்பதிவுகளிலும் எழுத்து மூலமாகவும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளது அக்குபங்சர் மருத்துவம் என்பது ஒற்றை புள்ளியின் தூண்டில் வழியே தீராத நோய்கள் நாள்பட்ட நோய்கள் என பிற மருத்துங்களால் கைவிடப்பட்ட அனைத்து நோய்களையும் பூர்ணமாக குணப்படுத்தும் என்பது வெட்ட வெளிச்சமாகியது.

*பேராசிரியர் டாக்டர் ஜின் கே யூ எழுதிய “ஒரு புள்ளி ஒரு சிகிச்சை” (2010) நூலும், டாக்டர் வெய் சீ யங் எழுதிய “ஒற்றை புள்ளி சிகிச்சை” (2018) நூலும், டாக்டர் லியூ ஜோ மற்றும் சென் ஹுவா எழுதிய “ஒரு புள்ளி” நூலும் (2010) சமகாலத்தில் ஒரு புள்ளி சிகிச்சை முறை சீனாவில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான உதாரணங்களாகும். *அக்குபங்சர் சீனாவை தாண்டி ஜப்பானிலும் அதிகமாக பரவலானது சீன புத்த மத துறவி சென்ஜென் ஜப்பானில் அக்குபங்சர் மருத்துவத்தை கற்றுத்தந்ததாக ஜப்பான் அக்குபங்சர் வரலாறு கூறுகிறது.

* பாரம்பரிய அக்குபங்சர் சிகிச்சை முறைகளில் மிக உயர்ந்த முறையாக டான்ஷி அக்குபங்சர் முறை குறிப்பிடப்படுகிறது.
” ஒரே ஒரு புள்ளியை சரியாகத் தேர்வு செய்து சிகிச்சை அளிக்கும் போது உயிர் சக்தியில் மாற்றத்தை உருவாக்குவதாக டாக்டர் குய். குவாஹரா குறிப்பிடுகிறார்.

*சீனாவில் ஒற்றை புள்ளி இருந்திருக்கலாம் என்ற முடிவினை உறுதி செய்யும் ஆவணங்களாக சீன நூல்களும் ஜப்பானின் டான்ஷி முறையும் உள்ளன.

* இலங்கையைச் சேர்ந்த டாக்டர் ஆன்டன் ஜெயசூர்யா அவர்களாலும், டாக்டர் பி.கே. பாசு வழியாகவும் 1960 – 70 காலகட்டத்தில் அக்குபங்சர் இந்தியாவிற்கு அறிமுகமானது.

* இந்தியாவிற்குள் நுழைந்த அக்குபங்சர் ஒரு வலி நிவாரணியாகவும் பல புள்ளி சிகிச்சை முறையுடனும் பிற மருத்துவ கலப்புக்களுடனும் புழக்கத்தில் இருந்தது.

* 1964 இல் டாக்டர் சகோதரர்களின் வருகைக்குப் பிறகுதான் அக்குபங்சர் சிகிச்சை முறை பல புள்ளி முறைகளில் இருந்து ஒற்றை புள்ளி சிகிச்சை முறை வழியாக அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணியாக முழு மருத்துவ முறையாக இந்தியாவிற்கு அறிமுகமாகியது. இந்தியாவிற்குள் அறிமுகமான அக்குபங்சர் சிகிச்சை முறை தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் டாக்டர் சகோதரர்களால் ஒற்றை புள்ளி சிகிச்சை முறை பரவலாக அறியப்பட்டது.

*அக்குபங்சர் மருத்துவம் இந்திய அரசால் சிகிச்சை முறையாக 2003இல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் அக்குபங்சர் மருத்துவத்தை பாடமாக கற்பிக்கின்றனர்.

*தமிழகத்தில் இயங்கும் அக்குபங்சர் சிகிச்சை மையங்களில் அக்குபங்சர் இல்லம் என்ற பெயரில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் ஒற்றை புள்ளி சிகிச்சையை பின்பற்றுகின்றன. *தென்னிந்தியாவின் இயங்கும் அக்குபங்சர் மருத்துவர்கள் அமைப்புகளில் அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு (இந்தியா) தமிழ்நாடு அக்குபங்சர் அமைப்பு அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகளில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ஒற்றை புள்ளி சிகிச்சையாளர்களாக இருக்கின்றனர்.

*ஆக நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது அக்குபங்சர் மருத்துவம் என்பது ஒற்றை புள்ளியின் தூண்டல் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் ஒரு முழுமையான மரபு வழி மருத்துவம் ஆகும்.

* மேலும் இந்த மரபு வழி மருத்துவம் முழுக்க முழுக்க சீனாவின் மரபு வழி மருத்துவ முறையாகும்.

*ஒற்றை புள்ளி சிகிச்சை என்பது அக்குபங்சரின் ஒரு புதிய சிகிச்சை உத்தி அல்ல அது அக்குபங்சர் உயர்நிலை சிகிச்சை முறையும் வரலாற்று தொடர்ச்சியும் ஆகும்.
Todayகடைசி இரண்டு கட்டுரைகள் சமகாலம் மட்டுமில்லாது எல்லா சமயங்களுக்கும் உகந்த மிக முக்கியமான இரண்டு புத்தகங்கள் குறித்த நூல் மதிப்புரைகளைக் கொண்டுள்ளன. ஒன்று எழுத்தாளர் அமர்நாத் அவர்கள் எழுதிய ”யாருக்கோ கட்டிய வீடு” நாவல் குறித்தும் எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் ”உங்கள் குழந்தை யாருடையது” நூல் குறித்தும் தனது மதிப்புமிக்க அவதானங்களை ஆய்வுகளை பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். எத்தனையோ நூல்கள் தமிழிலக்கியத்தில் வரவேற்பைப் பெற்றிருக்க உமர் பாரூக் அவர்கள் இவ்விரண்டு நூல்களைத் தேர்வு செய்து மருத்துவம் குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் பதிவு செய்து வந்த விழிப்புணர்வு கட்டுரைகளுடன் இந்த நூல்கள் குறித்த தனது மேத்தகு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்கிற ஆர்வமே மேலொங்க்கியது. எனது ஆர்வத்தின் எல்லையை இந்நூல்கள் பரி பூர்ணப்படுத்தின.

அமெரிக்க சூழலில் வாழ்ந்த இந்திய பெண்ணின் மன நிலையிலிருந்து எழுதப்பட்ட நாவலாக யாருக்கோ கட்டிய வீடு நூலும் நமது இந்திய குழந்தைகளின் பராமரிப்பு எத்தனை பின்தங்கியுள்ளது என்பதை அறியபடுத்திய உங்கள் குழந்தை யாருடையது நூல் மதிப்புரை கட்டுரையும் இறுதி பக்கங்களை ஆக்கிரமித்தது நூலின் மற்றொரு ஜீவனாம்சம்.காரணம் நோய்கள் குறித்தும் மருத்துவம் குறித்தும் உணவு புழக்கங்கள் குறித்த அநேக தகவல்களை மக்களின் மழுங்கடித்த சிந்தனையை சீர்செய்யும் திருத்தம் விழைந்த நூலாசிரியர் கண்ணுக்குத் தெரியாத பிரிக்கமுடியாத உடலான மனதின் சில நேர ஆவண மேலாதிக்கத்தால் மனிதரை வக்கிர செயலுக்கு ஆட்படுத்தச் செய்யும். மனதின் இளக்கம் உடலின் இயல்பை சமன்படுத்தும் பேராற்றல் கொண்டுள்ளது. மனதின் மமதை சுற்றியுள்ள அனைத்தின் மீதும் வன்மங்களாக வன்முறையாக வெறுப்பாக ஆக்ரோஷமாக ஓங்கரிக்கும் என்பதை மனித உளவியலில் கைதேர்ந்த நூலாசிரியர் மக்கள் மனநலன் கருதி இவ்விரண்டு நூலையும் தனது அவதானிப்பில் அளந்து மக்கள் வாசிப்பிற்கும் பார்வைக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு நூல்களும் மனிதர் அவசியம் வாசித்து தங்களின் இயல்பு வாழ்க்கையில் அமல்படுத்த வேண்டிய அம்சங்கள். மனிதர் மனோபாவத்திலிருந்து வடிகட்டி எழுதப்பட்ட படைப்புகள் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களாகவே இவ்விரண்டு நூல்களும் உமர் பாரூக் அவர்களின் மதிப்புரைகள் நம்மை வாசிப்புப் தூண்டலுக்கு அழைத்துச் செல்கின்றன.

எதிலும் அரசியல் ஊறிப் போன இன்றைய சமகாலம் மக்களை இரண்டு கெட்டான் மனநிலையில் தத்தளிக்கச் செய்யும் கடுமையான பனிப்போர் சூழலை ஏற்படுத்தியுள்ளன. எது எது தவறு என்கிற குழப்ப மனநிலையில் தவிக்கும் மக்களின் ஆரோக்கியம் காற்றடிக்கும் பட்டம் போல அந்தரத்தில் ஊசலாடுகிறது. இப்படியான மக்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மரபுவழி மருத்துவரும் உளவியல் பட்ட முனைவருமான உமர் பாரூக் மக்களின் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியம் இரண்டையும் முறையாக நெறிபடுத்தி நோய்மையின்றி நிலையாக செயல்பட தன்னாலான பெரும் பங்கை தனது ஒவ்வொரு நூல் வழியாகவும் முயற்சி செய்து வருகிறார். நூலாசிரியரின் மக்கள் மீதான அன்பும் கருணையும் வெறும் அனுதாப மேடை பேச்சாக இருந்திடாமல் செயல் வடிவாக்கம் பெற தனது ஒவ்வொரு முயற்சியும் மருத்துவத்தை நோக்கியே பிரதிபலிக்கின்றன. காரணம் மக்கள் அரசியல் சூதாட்டத்தில் விழுந்து தவிப்பது பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில். மக்களின் உடலை வைத்துதான் உலக அளவில் அரசியல் சதுரங்கம் நடைபெறுகிறது என்பதை கணித்து சமூகத்திற்கான தனது ஒவ்வொரு மகத்தான செயலும் மருத்துவம் வழியாகவே செயலாக்கப் படுத்தி வருகிறார் குறிப்பாக எழுத்தின் வழியாக..

எழுத்தும் இலக்கியமும் உலகத்தையே புரட்டிப் போடும் பேராயுதங்கள்.. எழுத்தாளனின் பேனா வெடிகுண்டுகளை விட வலிமையானவை ஆயுதங்களை விட கூர்மையானவை.

இங்கு T.S.Eliot அவர்களின் வரிகள் நினைவுப்படுத்தி எனது மதிப்புரையை நிறைவு செய்கிறேன்.
The purpose of literature is to turn blood into ink….

நன்றி.

து.பா.பரமேஸ்வரி
சென்னை.

நூல். : உயிர்க்கொல்லி நோய்கள்: மீண்டும் வருகிறதா ஆபத்து
நூலாசிரியர் : அக்குஹீலர் அ.உமர் பாரூக்
பதிப்பகம். : எதிர் வெளியீடு
பக்கம். : 112 வணக்கம்.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது  புத்தக  விமர்சனம்,  கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *