ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

ச.சக்தி கவிதைகள் : உழைப்பு

 

 

 

 

அதிகமில்லாத மழை
உழவுக்கு ஏற்றாற் போல்
மாலைநேர மிதமான மழை
கலப்பையை
வயலில் இறக்கினார் தாத்தா
வரிசை வரிசையாக
ஊர்ந்து உழுகும் செதிலைமாடுகள்
நொங்கு பூத்திருக்கும்
பனை மரத்தின் நிழலில் இளைப்பாறுகிறன்றன
பச்சைமிளகாயும்
பொன்னியரிசி கஞ்சியுமிருக்கும்
அலுமினிய குண்டான்மேல்
ஊர்ந்து வரிசையாக
சங்கமிடும் கட்டெறும்புகள்
பாப்பான் குளத்து நீர்
ஐந்து ஆறு பாத்திகளை முத்தமிட
மடையை மாற்றுவான் கபிலன்
வானம் வெப்பமிட
வண்டி வண்டியாக மூட்டை
கட்டி ஏற்றி
முதுகுக்குப் பாரமிட
உழவுக்காக அடகு வைத்த
அம்மாவின் சிமிக்கை
கனவுகளில் அவ்வப்போது மினுமினுக்க
கால்கடுக்க ஓட
துக்கத்தில் உறியடிக்கிறான்
அப்பாவின் தோளிலிருந்த துண்டு
கழுத்தை இறுக்கி
எறவானத்தை இறுகப்
பற்றிக்கொண்டிருக்க

 

கவிஞர் ; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்
பண்ருட்டி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *