வெ.மன்னார் எழுதிய “நேரத்தை நேசிப்போம்” – நூல் அறிமுகம்
காலம் அகண்டது..!
ஆனால்
நேரம் குறுகியது..!!
நம்முடைய நேரத்தை நம்முடையதாக்குவது எப்படி? என்பது பற்றி நூலாசிரியர் தம் நேரத்தை முதலீடாக்கி நம் நேரத்தை திட்டமிட வைத்திருக்கிறார்.
எனக்கு 24 மணி நேரமும் போதவே இல்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு நேர மேலாண்மையை நேர்த்தியாக எழுதியிருக்கிறார்.
“ஞாலங்கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்” என்ற வள்ளுவத்தின்படி , நேரமே மனிதனின் மூலதனம் என்கிற போது அந்த உழைப்புக்கான நேரத்தை பயனுள்ள முறையில் செலவழித்தல் வேண்டும்.
அதற்கு நேர நிர்வாகம் குறித்த ஞானம் அவசியம் வேண்டும். தவிர்க்க முடியாமல் வீணடிக்கப்படுகிற நேரமும் உண்டு.
பொதுவாக பிரயாணம் இத்தன்மையானது. நீண்ட வரிசையில் பல மணி நேரங்கள் பலவற்றுக்கு காத்துக் கிடப்பதுண்டு. முயன்றால் இந்த நேரங்களை கூட புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளும் நண்பர்களும் உண்டு.
என்ன செய்வது என்று தெரியாமல் மூன்றாவது கையாக முளைத்திருக்கும் கைபேசியை வைத்துக்கொண்டு, அது கதறும் வரை நேரத்தை பயணிப்பவரும் உண்டு.
“Efficiency is doing the right job ;
Effectiveness is doing right job”
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் பத்திரிக்கை நிருபர்களை அழைத்துக் கொண்டு தம் சோதனைச் சாலையை சுற்றி காட்டினார்.
உள்ளே நுழைகிற போது ஒவ்வொருவரும் கதவை தள்ளிவிட்டு செல்ல வேண்டி இருந்தது.
சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்த நிருபர்கள் கூறினார்கள் “எல்லாம் நன்றாக இருந்தது. நுழையும் கதவும்தான் அழுத்தமாக இருந்தது .அதை சற்று இலகுவாக்கி வையுங்கள்” என்றனர்.
அதற்கு எடிசன் “அது சரி அப்படி இலகுவாகிவிட்டால், ஒவ்வொரு முறையும் கதவை திறக்கும் போது 60 காலன் தண்ணீர் என் கிணற்றிலிருந்து இறைத்து நீர் தொட்டிக்கு போகாதே!!என்றாராம். இதுதான் சரியான வேலையை சரியாக செய்வது போலும்..
சுய சோதனை ஒவ்வொரு நாளும் நாம் செய்கின்ற வேலைகளை பட்டியலிட்டு வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை எப்படி செலவிட்டோம் என்பதை சீர்தூக்கிப் பார்க்கச் சொல்கிறார்.
நேரநிர்வாக நிபுணர்கள் நான்கு வழிகளை பதிவிட்டுள்ளனர்.
அவசரமானதா ? முக்கியமானதா?
எத்தகைய தேவைகள்
நிகழ்காலத்துக்கா வருங்காலத்துக்கா?
முதலீடா செலவீடா?
Catch it when shins. (இப்போதே வசப்படுத்துங்கள்) என்று வார்த்தை உண்டு. இந்த வேலையை செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றிய உடன் செயலில் இறங்க வேண்டும்.அதற்கு மனதை எப்பொழுதும் அன்றலர்ந்த மலர் போல் வைத்துக் கொள்ள வேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள் அப்போதுதான் உருவாகும். நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நேரத்தின் அவசியத்தை உணர்ந்தவர்கள் வெற்றியின் ரகசியத்தை தெரிந்தவர்களாக இருப்பர் என்பது நிச்சயம் உண்மைதான் .
அதை இந்த புத்தகம் தெளிவாக பதிவிட்டுள்ளது.
நேரத்தை நேசிக்கும் பொழுது வாழ்க்கையும் நம்மை அர்த்தமுள்ளதாக நேசிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
எண்ணக் கூடுகளுக்குள் முடங்காதீர், ‘எல்லா நேரமும் நல்ல நேரம்’,
நல்ல மனிதரை சம்பாதியுங்கள்,
மனவலிமையே மற்ற வலிமைக்கு அடிப்படை,
நந்திகளை நகர்த்துங்கள்,
தசாவதானியா சதாவதானியா,
ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை,
மனித வளத்தை மேம்படுத்துங்கள்,
நிற்க அதற்குத் தக ஊக்கமது கைவிடேல், ஆகிய தலைப்புகளில் நம் நேரத்தை பயனுள்ளதாக மாற்றியுள்ளார்.
The purpose of education is not knowledge but action
என்ற சிந்தனை போன்று சிறந்த செயல்தான் நமது அறிவை முழுமையாக மாற்றுகிறது .நேரத்தை நேசிக்கும் ஒருவரால் சிறந்த செயலில் பயணிக்கவும் முடியும், வெற்றி காணவும் முடியும்.
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
நூலின் விவரங்கள்:
நூல்: நேரத்தை நேசிப்போம்
ஆசிரியர்: வெ.மன்னார்
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ரூ.20
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com
எழுதியவர் :
✍🏻 – சு.மாரியப்பன்
அரசு மேல்நிலைப்பள்ளி
ஆடுதுறை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
