மனித மொழியில் நிலச்சரிவு
என்
மனநிலையில் மனசிதைவு
அறிந்து ஆராயிம் அறிவு உண்டு _ உங்கள்
அன்பில் அல்லவா மூழ்கிப் போனேன்”
கொஞ்சிய பிஞ்சு கைகள்
என்மேல்
ஒட்டிக்கொண்டதும் _
அவர்கள் கால்தடமும்
கறைந்தும் போனதே” கண்முன்னே…!!
இறுகப்பற்றி இதம் மகிழ்ந்த இதயத்தின்
துடிப்புகளின் நிசப்தம்
என் இதயத்தில்
இடி விடிந்தாற்போல் ஆனதே”
குழந்தை பருவத்தில் மகிழ்ந்தோம்_
மேடு பள்ளம் விளையாடி உடல் வலி மறந்தோம்
இன்றோ உயிர் வலி எனக்கு”
இன்பம் துன்பம் என உணர்த்திய
நீங்கள்தான்
இழப்பும் பிரிவும் அனைத்து
உயிர்களுக்கும் சமம் என உரைத்தீர்களோ”
அழுகுரலில் மனம் கரைந்திருந்தால்
காப்பாற்ற அவனும் வந்திருப்பான்
உங்கள்
அன்பு மொழியில் சிலையானேன்
என்னருகே உறங்கிய உயிர்கள்தான்
இன்று
உறங்கி போயின
மீண்டு(ம்) வரும் வரை
இனி உறக்கம் ஏது எனக்கு”
_வா செ முத்துராமன்
குரும்பலூர்.,
பெரம்பலூர்_மாவட்டம்.

