வாங்க பேசலாம் : நூல் அறிமுகம்
நூல் – வாங்க பேசலாம்
ஆசிரியர் – பூங்கொடி பாலமுருகன்
பதிப்பகம் – பாரதி புத்தகாலயம்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்… ‘இது உனக்கு எதுக்கு?’ ‘அங்க என்ன பொன்னுங்களோட பேச்சு வேண்டி இருக்கு?’ ‘அங்க என்ன பையங்களோட பேச்சு வேண்டி இருக்கு?’ என்று குழந்தைகளை செய்ய கூடாத குற்றம் செய்தது போல அவர்களை மாற்றுவது நாம் தான்…. ஆணும் பெண்ணும் எதிர்பாலினத்தவரே தவிர எதிரிகள் இல்லையே…. ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுத்தர வேண்டும்… அவர்கள் தவறான வழிக்கு செல்ல நாமே காரணமாக இருக்கக் கூடாது…. அவர்களின் வளரிளம் பருவத்தில் ஏற்படும் சிக்கல்களையும் அந்த வயதில் நாம் அவர்களை எப்படி வழிநடத்துகிறோமோ அப்படித்தான் அவர்கள் மொத்த வாழ்நாள் வரை வாழும் விதத்தை தீர்மானிக்கின்றது…. இதில் பெற்றோர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது… அப்பா அம்மாவை எப்படி நடத்துகிறாறோ அதை போலத்தான் மகன் அவன் மனைவியை நடத்த வேண்டும் என்று அவன் மனதில் ஆழமாக பதித்துக்கொள்வான்… அவர்கள் எதிர்காலம் நம் நடவடிக்கையிலும் உள்ளது… வளரிளம் பருவத்தில் அவர்கள் மனம் மற்றும் உடல் அளவில் மாற்றங்கள் ஏற்படும் அந்த பருவத்தில் அவர்களை புரிந்து கொண்டு அந்த வயதில் ஏற்படும் இயல்பான விஷயங்கள் தான் இது என்று இயல்பாக சொல்ல வேண்டியது பெற்றோர்களின் கடமை….
Loan, EMI என்று மெஷின் உலகமாய் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்… எதற்காக இப்படி ஓடுகிறோம் நம் பிள்ளைகளின் நலனுக்காக….
அந்த பிள்ளைகள் தவறு செய்து விட்டால் உங்களுக்காக இரவும் பகலுமாய் நாங்க ஓடிக்கிட்டு இருக்கோம் என்று அவர்களை சாடுவது தவறாகும்…
அதற்கு முன் அவர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களின் மன, உடல் குழப்பங்களின் கவனம் செலுத்தி இருப்போமா? இல்லையென்றால் தவறு நம்மீது தான்… அவர்கள் சமூகத்தில் சரியானவர்களாய் வளர அவர்களுடன் நேரம் செலவிட்டு நட்புடன் இருப்பதும் மனக்குழப்பங்களை தீர்த்து வைப்பது ஒவ்வொரு பெற்றோர் ஆசிரியர்களின் கடமை….
நமது கலாச்சார மௌனங்கள் உடைக்கப்பட்டு குழந்தைகளின் வளரிளம பருவ மனநிலையையும் சூழ்நிலைகளையும் அவர்களுக்கு உணர்த்தி வெளிப்படையாக கூறியிருந்தால் பாலியல் வன்கொடுமைகளும், போதைப் பொருள் அடிமைத்தனங்களும் இல்லாமல் இருந்திருக்குமோ….?
புத்தகத்தை படியுங்கள் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் அவர்களுடன் நேரம் செலுத்த தவறாதீர்கள்…..
நூல் அறிமுகம் எழுதியவர் :
சங்கீதா கந்தன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.