Vaazhaiyadi Vaazhai வாழையடி வாழை

அ.சீனிவாசனின் “வாழையடி வாழை” கவிதை

 

திருமணத்திற்குமுன்
சேலைக் கிழிசலைத் தாவணியாக்கி
தாய்போல் அபிநயித்தாள்.

திருமணமான புதிதில்
தாய் சொல்லிக்
கொடுத்த வார்த்தைகளைப்
பேச ஆரம்பித்தாள்.

பிறகு தாய்
மாதிரி பேச
ஆரம்பித்தாள்.

இறுதியில் தாய்
போலவே
எப்போதைக்குமாக

அமைதியாகி விட்டாள்!

 

எழுதியவர் 

அ.சீனிவாசன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *