Subscribe

Thamizhbooks ad

சிறுகதை: வாழையடி வாழை – இளம் பரிதி ந. நந்தகுமார் 

 

 

 

 

இது நம்ம தருமபுரி பண்பலை 102.4 கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க, அடுத்ததாக உங்களுக்கு வரப்போறப் பாட்டு “என் அண்ணன்” படத்திலிருந்து “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” பாடல் வருகிறது கேட்டு மகிழுங்கள் என்றவுடன் முத்துசாமிக்கு சிலிர்ப்பு துள்ளல். பாட்டு கேட்டவுடனே, சைக்கிள் பெடலை வேகமாக மிதிக்கும் உத்வேகம். செயலில் ஒரு துரிதம்.

அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் பாட்டுன்னா முத்துசாமிக்கு உயிரு. எப்பவும் எப்.எம்.ரேடியா சைக்கிள்லே தான் கட்டிக்கிடக்கும். அவர் கரும்பு வெட்ட போகும் ஒரு தினக்கூலித் தொழிலாளி. கரும்பு வெட்டும்போதும் பாட்டுதான். பாட்டுக்கு முத்துசாமி அடிமை என்றே சொல்லலாம்.

பாட்டு முடிஞ்சு விளம்பர ஒலிக்கேட்டதும் ரேடியோ சத்தத்தை குறைச்சுவிட்டு, போற வழியெல்லாம் நிலத்துல என்னென்ன போட்டிருக்காங்கன்னு பாத்துகிட்டே, நம்ம நெலத்துலயும் எதாச்சும் போடனும். அதுக்கு முதல்ல நம்மக்கிட்ட தண்ணீ வேணும், கொட்டுற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்னு சொல்லுவாங்க, நம்ம கூரை தெறந்தே தான கெடக்கு, எப்ப கொட்டும்மோ தெரியல!” சலிப்போடு புலம்பிய முத்துசாமிக்கு அடுத்த பாடல் ஒலித்தது.

பாட்டைக் கேட்டதும் மனசுக்குள் றெக்கை முளைத்ததுப்போல், பெடலை மதிக்கையில் சைக்கிள் செக்காக சுழன்றது.

|வீட்டுக்கு இன்னும் மூணு மைல்கணக்காக இருந்தது|

|குறுக்கு தடத்துல போனா வெரசா வீடுப்போய் சேருவோமென்று நினைத்த முத்துசாமி பாதை வந்ததும் சைக்கிளை திரும்பினான். கொஞ்சம் தூரம் போனதும் சட்டென்று பிரேக்கைப் பிடித்து நின்றான். சக்கரம் மண்தரையில் சறுக்கி நின்றது.

“ஐயோ…..”
“வழியில பாத்தா……”
“எவ்வளவு பெரிய……”
“வாழைமரம் விழுந்துக்கிடந்தது. அது கேட்பாரற்ற ஒரு இடம்”

“ரேடியோவை ஆப் செய்து, சைக்கிளை ஸ்டேண்டு போட்டு வாழையை உற்றுநோக்கினான். யாரோ வாழைகுலையை திருட அவசர அவசரமாக மரத்தை வெட்டி சாய்ச்சமாதிரி விழுந்துகிடந்தது. கொலை நடந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும்போல, வாழைப்பால் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது. அதை கையால் தொட்டு மூக்கால் நுகரும் ஒரு விசாரணை அதிகாரிப்போல் ஆய்வு செய்தான்.”

முத்துசாமிக்கு அந்தளவுக்கு படிப்பறிவு இல்லை. ஆனால், தினமும் நியுஸில் க்ரைம் செய்தியை கேட்பது வழக்கம். அப்படிதான் ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் முகமூடி அணிந்த இரு மர்மநபர்கள் பெண்ணின் கழுத்தை அறுத்து நகையை திருடிச் சென்றிருந்தனர். அந்த க்ரைம் செய்தியின் பின்னணியில் தான் முத்துசாமி வாழைகுலைத் திருட்டை விசாரித்தான்.

முத்துசாமி நினைத்திருந்தால், சைக்கிளை தூக்கிக்கொண்டு வாழையை கடந்து போயிருக்கலாம். ஆனால், அவ்வழியாக வரும் டூவீலர்கள் எப்படி போகும், திரும்பி சென்றால் சிரமப்படுவார்களென்று எண்ணினான்.

கரும்பு வெட்டுவதில்தான் முத்துசாமி வல்லவனாச்சே, சைக்கிளிலிருந்த சொனைத்தீட்டிய கத்தியை உருவி வாழையை ரெண்டா வெட்டி தூக்கிப்போட்டு வழியை சீர்செய்தான்”

“பிறகு வீட்டுக்கு போவோம், நேரமாயிடுச்சுனு சைக்கிள் ஸ்டேண்டை உதைத்த கணத்தில் தாயைப் பிரிந்து வாடும் உள்ளம்போல், நான்கு இலை விட்டிருந்த வாழைகன்றைப் பார்த்தான். அதை விட்டுப்போக மனசில்லாமல் மீண்டும் கத்தியை எடுத்து வாழைகன்றை சுற்றி மண்ணைத்தோண்டி பிடுங்கி எடுத்தான். பின் வாழைகன்றை கேரியரில் வைத்துக்கட்டி கொண்டு புறப்பட்டான்.”

“பாட்டுக்கு எசப்பாட்டு பாடிக்கொண்டே வீட்டை அடைந்தான். எப்.எம்.ரேடியோவின் சத்தம் கேட்டு கண்ணன் வீட்டிற்குள் இருந்து
ஐ….. அப்பா….என்று துள்ளி ஓடிவந்தான்.

|எம்மா அப்பா வந்துடுச்சுமா வாம்மா என்றான். மஞ்சுளாவும் வீட்டைவிட்டு வெளியே வந்தாள்.

‘இந்த வாழ மரம் எதுக்குப்பா?”

“அதுவா கண்ணா, வரவழியில கெடந்தது நம்ம நட்டு வளக்கலாம்னு எடுத்து வந்த”

“எப்பா…..இப்ப நடுவுலாமா..ப்பா?”

“இப்ப வேணா பொழுது சாஞ்சுடுச்சி, நாள காலயில உங்கையால நடுவுலாம் சரியா” என்றதும் ஆனந்த கலிப்பில் ஆட்டம்போட்டான்.

“சூரியன் உதிர்ச்சதும் எப்பா… எப்பா… எந்திரிப்பா…. மரம் நடுவோம்… எழுப்பா… என்று முத்துசாமி எழும்வரை கண்ணன் நச்சரித்தான்.”

“கொட்டாவி விட்டபடி வெளியே வந்து முகத்தை கழுவினான். மண்வெட்டியை கையிலெடுத்து, எந்த இடத்தில் வாழைகன்றை நட்டால் சரியாக இருக்குமென்று யோசித்தான். யோசிக்கும் வேளையில் கண்ணன் இங்க அங்க என்று கையை காட்டினான்.”

“இதுக்கு முன்ன நாலுகரும்ப நட்டிங்களே அதுக்கு பக்கத்துலேயே நடுங்க என்று மஞ்சுளா யோசனை சொன்னாள். அந்த இடமே சரியென்று குழிவெட்ட ஆரம்பித்தான் முத்துசாமி”

“பிறகு மூவருமாய் சேர்ந்து வாழைக்கன்றை நட்டனர்.”

“கண்ணா நீதா தெனமும் வாழைக்கு தண்ணீ ஊத்தனும். சரியா”

“நானா?”

“ம்ம்… நீதா கண்ணா”

“அப்போ அந்த மலையில இருக்கிற மரத்துக்கெல்லாம் யாரு தண்ணி ஊத்துவா?”

“தம்பி அதெல்லாம் கடவுள் நட்டமரம் அதுவா வளர்ந்துக்கும்”

“அப்ப நம்ம நெட்டமரம்?”

“அது கடவுளுக்கு நம்ம நட்ட மரம் நம்மதா தண்ணி ஊத்தி வளக்கணும் என்றான் முத்துசாமி”

கண்ணனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால், அவன் நெட்ட முதல் மரம் அது. பள்ளிக்குச் சென்று அவன் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லுவான் என்று முத்துசாமிக்கு நன்றகாவே தெரியும்.

“கண்ணன் பள்ளி முடிந்து வந்ததும் சின்ன குடம் ஒன்றை எடுத்துக்கொண்டு மரத்துக்கு தண்ணி ஊற்ற ஆரம்பித்துவிடுவான். தண்ணி எடுக்க ஏழு வீடு தள்ளி போகணும். இருந்தாலும் நாலு தரம் சென்று வந்து தண்ணி ஊத்தி விடுவான்”

ஆறு மாதங்கள் கழிந்தன. தொலைவிலிருந்து பார்த்தால் முத்துசாமியின் ஓட்டு வீடு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த அளவுக்கு வாழை மரம் செழித்து வளர்ந்து இருந்தது. இப்போது வாழை அடுக்கடுக்காய் குலை விட்டு முக்கால்வாசி முற்றியிருந்தது. அது மட்டும் இல்லாமல் மூன்று நான்கு கன்றுகளும் அருகே வளர்ந்திருந்தன.

தினமும் வேலை முடிந்து வரும் முத்துசாமி தொலைவில் நின்று, ஒரு கணம் தன் வீட்டை ரசிப்பான். ஆனால் அன்று வேலைக்களப்பில் சோர்வுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சைக்கிள் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வாழையை பார்த்ததும் அதிர்ச்சி. வாழை இலைகள் அறுபட்டு கிடந்தன.

“ஏய் மஞ்சுளா….அடியே…. மஞ்சுளா…. எங்கடி இருக்க…. வீட்டுக்குள் நுழைந்து பார்த்தான் மஞ்சுளா இல்லை.

“கண்ணில் கோபத்துடனும் வாழை மரத்தை நோக்கிய படியே நின்றிருந்தான்”

“தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று சுமந்துக்கொண்டு மஞ்சுளா வீட்டை அடைந்தாள். தண்ணியை சிதறியபடி குடத்தை இறக்கினாள்”

“என்னங்க பாத்துகிட்டே கிடக்கிங்க ஒருகை புடிச்சு எறக்க கூடாதா?”

“முத்துசாமிக்கு அடக்க முடியாத கோபம். வாழை மரத்தில் இலைகளை அறுத்தது யார்? என்று கைகளை ஓங்கி விட்டார்”

“மஞ்சுளாவின் கண்களில் மலமலவென கண்ணீர் ததும்பிவிட்டது”

“என் அண்ணனும் அண்ணியும் குடும்பத்தோடு வந்திருந்தாங்க, சோறு போட தான் நாலு எல அறுத்த அதுக்கு போய் கைய ஓங்குவீங்களோ…. நான் போற எங்க ஆத்தா ஊட்டுக்கு….. என்று சற்று நேரத்திலேயே பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்”

“கண்ண, தெனம் தண்ணி ஊத்தி வளர்த்த மரம். அதுல எல அறுக்க இவளுக்கு எப்புடி மனசு வந்ததென்று கோபத்தில் நின்றிருந்தார்.”

“ஐந்து மணியாகி பள்ளி முடித்து வந்த கண்ணன், முகங்கால் கழுவிக்கொண்டு வீட்டினுள் நுழைந்து அப்பளத்தை தின்றபடி வெளியே வந்தான். நிலத்துல நின்றிருந்த முத்துசாமியை நோக்கி நடந்தான். மகன் வருகிறானே…. வாழை பற்றி கேட்டால் என்ன சொல்கிறதென்ற தகிப்போடு நின்றிருந்தான்.”

“யப்பா….. அம்மா எங்கப்பா…. புது சோறு எல்லாம் செஞ்சியிருக்கு….. அம்மாவ வீட்டுல காணோம். எங்கப்பா… போயிருக்கு? என்றதும், “உங்க மாமா வீட்டுக்கு போயிருக்கு நாளைக்கு வந்துருமென்று சொல்லி சமாளித்து விட்டான்”. ஆனால், அவன் வாழைப்பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. வழக்கம்போல், நான்கு குடம் தண்ணீர் ஊற்றிவிட்டு, வீட்டுபாடம் செய்ய ஆரம்பித்து விட்டான்”

“காலையில வேலைக்கு போகனுமென்ற அவசரத்தில் சட்டென எழுந்தான் முத்துசாமி. பக்கம் படுத்திருந்த கண்ணனை, |கண்ணா எழுந்திருடா…. பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுச்சென்று, கன்னத்தை தட்டியெழுப்பிய கை நெருப்பாய் சுட்டது.”

“நேத்து பள்ளிகொடத்துலிருந்து நல்லா தானே வந்தான். எப்புடி புள்ளைக்கு ஜொரம் வந்துச்சு. முத்துசாமிக்கு மனசு பதைபதைத்தது. முதல ஆஸ்பத்திரிக்கு போவோமென்று அலமாரியில் பணத்தை தேடினான். நாலு நாளுக்கு முன்னதான் சீட்டுப்பணம் மூவாயிரம் கட்டிவிட்டோமே… இப்ப ஒத்தரூபா கூட இல்லையே”

“பேசாம மஞ்சுளாவ ஊருக்குபோய் கூட்டி வருவோமா… ஆனா அவமூஞ்சில எப்புடி முழிக்கிறது. ஜம்புலிங்கம் மாமாகிட்ட கடன் வாங்குவோமா? அவர்தா போன வாரமே பெங்களுரு போயிட்டாரே.”

“ஐயோ…. புள்ளைக்கு உடம்பு நெருப்பாக கொதிக்கிது என்ன செய்ய என்று நினைக்கும்போது, கதவு வழியா முத்துசாமி கண்ணுக்கு வாழைகுலை பணமா தொங்குறது தெரிஞ்சது, ஓடினான்.

அதே சாணை பிடிச்ச கத்தி. நாலு வெட்டுல மரம் பொத்தென்று விழுந்தது. குலையை வெட்டி சைக்கிளில் கட்டினான். அதில் ஒரே ஒருபழம் மட்டும் மஞ்சள் நிறத்தில் பழுத்திருந்தது. படுக்கென்று பிடுங்கி வீட்டுக்குள் வைத்துவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு சந்தைக்கு புறப்பட்டான்.

“வாழைகுலை எவ்வளவுக்கு விற்குமென்று முத்துசாமிக்கு ஒன்னும் தெரியாது. ஆனா ஆஸ்பத்திரி செலவு எப்படியும் ஐநூறு ரூபாய் ஆகுமென்று தெரியும்.
குலை எழுநூறு சொல்லுவோம். அப்போதான் ஐநூறு கிடைக்குமென்று கூவினான்.பலரும் விலைகேட்டு திரும்பிவிட்டனர். 11 மணி ஆயிடுச்சு இன்னும் வித்த பாடில்லை. ஐநூற்றைம்பதென்று கூவினான்.”

“கூட்டத்தில் ஒருவன் ஐநூற்றைம்பதை கொடுத்து, குலையை வாங்கிச் சென்றான். பணத்தை எடுத்துக் கொண்டு விரைந்தான். வீட்டின் திண்ணையில் கண்ணத்தின்மேல் கைவைத்து உட்காந்திருந்த கண்ணனை, அள்ளி எடுத்து சைக்கிளில் உட்கார வைத்து ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டான். வெட்டப்பட்ட வாழைமரத்தை கண்டும் கண்ணன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்பதை பற்றி முத்துசாமிக்கு எண்ண ஓட்டமாக இருந்தது. முதல்ல ஆஸ்பத்திரிக்கு போவோம்மென்று வேகமாக பெடலை மெரித்தான்.

அந்த ஆஸ்பத்திரி நல்ல ஆஸ்பத்திரி நல்ல கைராசியான டாக்டர் கூட. அவரு வைத்தியம் பார்த்தா, எப்படிப்பட்ட நோயும் ஓடிப்போயிருமென்று புள்ளைய அங்கு கூட்டிப்போனான். டோக்கன் போட்ட சற்று நேரத்திலேயே நர்ஸ், டோக்கன் நம்பர் 15 யாரு? கூப்பிட்டாள்.

அப்பா இதுநம்ம தான்பா டோக்கன் நம்பர் 15என்று வற்றிய குரலில் கூறினான். கண்ணன் சொன்னதும் தோளில் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.”

“ஒன்னும் பயப்படாதீங்க. சாதாரண காய்ச்சல் தான் சரியாகிவிடுமென்று கனிவான குரலில் டாக்டர் சொன்ன பிறகுதான் முத்துசாமியின் பதற்றம் நின்றது. ரெண்டு ஊசி, மருந்து மாத்திரை, டாக்டர் பீஸ் சேர்த்து 450 ரூபாதா செலவாச்சு.
“புள்ள இன்னும் எதுவுமே சாப்பிடலையே என்று ஒரு டீ கடையை பார்த்து சைக்கிளை நிறுத்தினான். சர்க்கரை கம்மியா ஒரு பாலும் ரெண்டு பன்னு வாங்கி கண்ணனுக்கு ஊட்டினான்.”

“பின் வீடடைந்ததும். வாழை மரத்தின் அந்த ஒற்றை பழத்தை கண்ணன் கையில் கொடுத்தான்”

“அப்பா….நம்ம வாழைமரத்த கடவுளுக்கு தானே நட்டோம். அப்போ மொதபழம் கடவுளுக்கு தானே” என்றதும் முத்துசாமி திகைத்துபோய் நின்றான். அப்போது தான் முத்துசாமிக்கு எல்லாம் விளங்கியது.

“ஒரு நாள் மலை தீப்பிடிச்சு எரிஞ்சபோது, மரங்கள் எல்லாம் எரியுதென்று அழுதுக்கொண்டிருந்த கண்ணனை ஆறுதல் படுத்த மரத்துக்கு என்ன ஆனாலும், கடவுள் பார்த்துப்பாரு” என்று கூறிய சொற்களை உலகின் மிகப்பெரிய நம்பிக்கையாக தன் மகன் எடுத்துக் கொண்டதை உணர்ந்தான்.

“முத்துசாமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
நா தழுதழுத்தது. குரல் வளையம் திக்காடியது. எல்லாவற்றிற்கும் மேலாக உறைந்துப்போன அவன் உள்ளம். மஞ்சுளாவை அழைத்துவர சைக்கிளை எடுத்து புறப்பட்டான். எப்.எமில் அவனுக்காக ஒரு பாட்டு ஒலித்தது.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” கவிதை தொகுப்பின் தலைப்பே பார்த்த மாத்திரத்தில் நமக்குள் பல்வேறு வினாக்களை எழுப்பிவிடுகிறது. ஒரு தலைப்பு நம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு சிறுமி ஒரு நாயுடன் இருக்கும், வளர்ப்பு பிராணி மீது ஈர்ப்புடையவர் எனது மகன், குறிப்பாக நாய் என்றால் மிகவும் பிடிக்கும்....

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே என்றே சொல்கிறது. உனக்கும் எனக்குமான காதலைப்போல.... 5) உன் பிறந்தநாளைத்தான் ரோஜாக்கள் தினமென அழைக்கிறார்கள். ஆம் அவையும் உன் இனம்தானே!   மு.அழகர்சாமி கடமலைக்குண்டு

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here