தடுப்பூசி பற்றாக்குறையும் வீணடித்தலும் – அ. பாக்கியம்மாநிலங்களுக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பவில்லை உற்பத்திக்கான முன்னேற்பாடுகளையும் உரிய நேரத்தில் செய்யவில்லை.
வந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் போதுமான வசதிகள் இல்லாததால் வீணடித்தல் அதிகமாகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட 10 கோடி தடுப்பூசிகளில் 44 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி இருக்கிறது. அதாவது 6 சதவீதம் வீணாகிறது.

Vaccines Vial Monitors என்று சொல்லக்கூடிய தடுப்பூசி குப்பிகளை பராமரிக்கும் குளிர்சாதன வசதிகள் இல்லாத நிலையில் வீணடித்தல் அதிகமாகிறது. ஒவ்வொரு குப்பியிலும் 10 பேருக்கான மருந்து இருக்கும். ஒரு குப்பியை திறந்தவுடன் நாலு மணி நேரத்துக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குமேல் அந்த தடுப்பூசி இருப்பதற்கு 8 செல்சியஸ் மேல் வெப்பம் அதிகமாகாமல் குளிர்பதனதில் இருக்க வேண்டும். அதற்கான வசதிகள் இல்லாததால் வீணடிக்கப்படுகிறது.எனவே மத்திய அரசு அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற முடிவை உடனடியாக அமல் ஆக்கினால் மட்டுமே வீணடித்த குறைக்க முடியும். மற்றொரு புறம் உரிய முறையில் குளிர்பதன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் தமிழகத்தில் 12.4 சதம் வீணடிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் 10 சதம், பீகாரில் 8.1 சதம், பஞ்சாபில் 8 சதம், அசாமில் 7.3 சதம், ஆந்திராவில் 7.3 சதம், மணிப்பூரில் 7.2 சதம், டெல்லியில் 7 சதம் என்று வீணடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சதத்துக்கு மேல் வீணடிக்கக் கூடாது என்று வழிகாட்டுதல் உள்ளது. ஆனால் கட்டமைப்பு வசதியும் திட்டமிடலில் உள்ள பலவீனமும் 6 சதம் வீணடிக்கப்படுகிறது.
மத்திய அரசு போதுமான அளவு தடுப்பூசிகளை அனுப்புவது இல்லை. தடுப்பூசிகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லை. ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட குப்பிகள் அனைத்தையும் பயன்படுத்தக்கூடிய முறையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை அமலாக்கிடவும் முயற்சிகள் இல்லை. மேற்கண்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தான் பெறமுடிகிறது.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)