நூல் : மதில்கள்
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 86

அரசுக்கு எதிராக புரட்சிகரமாகப் பத்திரிகையில் எழுதியதால் சிறை செல்லும் ஒருவன் மதில்களுக்கு அப்பாலுள்ள பெண் கைதியின் மீது காதல் கொள்கிறான். அவளும் இவனைப் பார்க்காமலே காதல் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் மதில்தான் அவர்களுடைய காதலுக்குச் சாட்சியாக இருக்கும்.
இருவரும் பேசிக் கொள்கிறார்கள்:

தப்பிக்கச் சரியான வழி என்று யோசித்துக் கொண்டான். தப்பிக்கத் தேவையான பொருட்கள், தன் தோட்டக் கத்தி, சேகரித்த கயிறுகள் எனத் தயாராக நல்லதொரு மழை இரவுக்காய் காத்திருக்கத் தொடங்கினான்.

தன்னை மறந்து விசிலடித்தபடியே. .அப்போது தான் அவன் காதில் இனிமையான குரல் ஒன்று கேட்டது . அது ஒரு பெண்ணின் குரல்.

“யார் அங்கே சீட்டியடிப்பது?”

பஷீரின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. பெண்கள் ஜெயிலிலிருந்து வரும் குரலல்லவா?.

“நான் தான்..”

“கொஞ்சம் சத்தமாக… இரண்டுபேருக்கும் நடுவில் சுவர் இருக்கிறதல்லவா… நான் என்றால்…” என்று குரல் திரும்பவும் வந்தது.

பின் பெயர், தண்டனைக்காலம், செய்த குற்றம் என்று எல்லாம் பேசிக் கொண்டார்கள். அவள் பெயர் நாராயணி. வயது இருபத்தியிரண்டு. பதினேழு வருடம் தண்டனைக்காலம். படித்திருக்கிறாளாம். சிறைக்கு வந்து ஒருவருடம் ஆகிறது… என்று எல்லாம் அறிந்து கொண்டான். சற்று நேரம் பேச்சில் எதுவும் இல்லை. பிறகு கேட்டாள்:

“ஒரு ரோஜா செடி தருவீர்களா??”

“உனக்கெப்படி தெரியும் இங்கு ரோஜா செடி இருப்பது” என்றான்.

“இது ஜெயில்தானே… இங்கு எல்லோருக்கும் எல்லாமே தெரியும். இங்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. ஒரே ஒரு ரோஜாச் செடி…தருவீர்களா??” என்றாள்.

பஷீர் சற்று உரக்கவே ” நாராயணி… இந்த உலகில் உள்ள பூச்செடிகள் எல்லாம் உனக்குத் தான் சொந்தம் என்றான் அவனுள் மகிழ்ச்சி பொங்க.

நாராயணி, ஆயிரம் தங்கமணிகள் குலுங்கவது போல் சிரித்தாள். பின் எனக்கு ஒரு செடி போதும் என்றாள்.

பஷீர் என்ன இந்தப் பெண் ஒரு செடி கேட்கிறாள். நான் என் உயிரையே இவளுக்காகத் தர தயாராக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான்.

அவளுக்குக் கொடுக்கும் ரோஜாவை, ஒவ்வொரு ரோஜா பூவையும், ஒவ்வொரு மொட்டையும், ஒவ்வொரு தளிரையும் முத்தமிட்டு கொடுப்பார்.

//கற்களால் ஆன அந்த உயர்ந்த மதில்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தன. அவை என்னையும் சென்ட்ரல் ஜெயிலையும் வளைத்துக் கொண்டிருந்தன” //

//பெண்களின் தேவைகள் எப்போதும் மிகச் சிறியதானவையும், அடிப்படையானதாகவுமாகவே இருக்கிறது.//

//சோத்துக்குப் போய் இப்படி நடந்துகொள்வதா, நாட்டுக்காக ஒரு நேரம் பட்டினி கிடந்தால் என்ன? /

இருவரும் சந்திக்கும் அடையாளமாக யார் வருகிறார்களோ மதில்மேல் கம்பு நீட்டுவர்.

நாராயணி, எத்தனை நேரம் உங்களுக்காகக் காத்திருப்பது, இந்தக் கம்பைக் கையில் பிடித்துக் கொண்டு… கைகளே கடுப்பெடுக்கத் தொடங்கிவிட்டன!!”

“நான் வேண்டுமானால் கையைத் தடவிக் கொடுக்கட்டுமா?”

” எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்” என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக் கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.

സോജാ രാജകുമാരീ… സോജാ… – ചേതസ്സ്
வைக்கம் முகம்மது பஷீர்

ஒரு நாள், ‘எத்தனை நாள் நாம் இப்படியே பேசிக்கொண்டிருப்பது… எத்தனை இரவுகள் தான் நான் அழுது தீர்ப்பது… உங்களை எப்படிக் காண்பது’ என்று கேட்கிறாள். அப்போது தான் பஷீர் தன்னை ஆஸ்பத்திரியில் பார்க்கலாம் என்று சொன்னான். இன்று திங்கட்கிழமை, வரும் வியாழக்கிழமை பதினோரு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வருவேன் என்று சொன்னாள் நாராயணி. எப்படி? என்றதற்கு அதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று கூறிவிட்டாள். புறப்படும்போது மீண்டும் சொல்லிச் சென்றாள், “மறந்துவிடாதீர்கள்…வியாழக்கிழமை…பதினோரு மணி..” அவள் சென்ற பின்னும் கூட வெகுநேரம் மதிலோரமாகவே நின்றிருந்து விட்டுப் போனான் பஷீர்.

ஆஸ்பத்திரிக்குச் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் தான் எப்படியிருப்போம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

என்னைப் பார்த்தா எப்படித் தெரியும்? அவள் கேட்டாள். நான் சொன்னேன் “முகத்தைப் பார்த்தாலே தெரியும்”. “என்னோட வலது கண்ணத்தில் கருப்பா ஒரு மச்சம் இருக்கு அதை பாப்பீங்களா? என்றால் நாராயணி. அந்த கருப்பு மச்சத்தின் துருதுருவென்று நான் முத்தமிட வேண்டும் என்றான். வலது கன்னத்தில் மச்சம். மறக்காதீங்க? ஞாபகம் இருக்கு. என்னோட கையில் சிவப்பு ரோஜாப்பு ஞாபகம் இருக்கு என்றான் பஷீர்.
அப்போதுதான் விடுதலை செய்ய உத்தரவு வந்திருக்கும்

இதைக் கேட்டு நடுங்கிவிட்டான். கண்கள் இருண்டுவிட்டன. காது குப்பென்று அடைத்துவிட்டது. பைத்தியம் பிடிப்பது போலாகிவிட்டது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

ஜெயிலர், இந்த நிமிஷம் முதல் நீங்க சுதந்திரமானவர். நீங்கள் சுதந்திரமான உலகத்துக்கு போகலாம்.”

சுதந்திரமானவன். சுதந்திர உலகம் எது. சுதந்திரம் உலகம் பெரிய ஜெயிலுக்கில்லையா போகணும்? யாருக்கு வேணும் இந்த சுதந்திரம்?
பஷீர் ரோஜாவைக் கையில் வைத்துக்கொண்டு மதிலை பார்ப்பான் மதில்மேல் கம்பு உயரும்

மதிலருகே நின்ற நாராயணி என்ன ஆனாள், ரோஜாவுடன் சென்ற பஷீர் என்ற இளைஞன் என்ன ஆனான் என்ற முடிவில்லாம கதை முடியும். இதைப் படித்த முடித்தவுடன் சொல்ல முடியாத அழுகை, கோபம் வரும் இருவரும் சந்திக்கவில்லையென இதுதான் பஷீர் அவருடைய எழுத்துக்கள் அப்படித்தான். இக்குறுநாவலை அடூர் கோபாலகிருஷ்ணன் படமாக எடுத்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *