வளர்ச்சியின் பெயரால் வன்முறை- நூல் அறிமுகம்

வளர்ச்சி என்பது என்ன ? வன்முறை என்பது என்ன ? இரண்டு கேள்விக்குமான விடையைத் தேடுவதிலும் சொல்லுவதிலும் இருக்கிறது ;அவர் யாருக்கானவர் என்பது .பாக்கியம் மிகத் தெளிவாக அனைவருக்குமான வளர்ச்சியின் பக்கம் நின்று ; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது அரசே திட்டமிட்டு ஏவும் வன்முறையை இந்நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .

வன்முறை என்பது கொலையும் சித்திரவதையும் மட்டுமல்ல தனிநபர் வாழ்வுரிமையைப் பறிப்பதும் மறுப்பதும் வன்முறையே என முதல் அத்தியாயத்தில் நிறுவுகிறார் .. இந்த , “ அதிகார வன்முறை,” எப்படி இதயமற்று நகரமயமாக்கலில் வினையாற்றுகிறது என்பதே இந்நூலின் முழுச்சாரமாகும் .முதலாளித்துவ வளர்ச்சியின் முக்கிய அங்கமாகவே வெறித்தனமாக நகரமயமாக்கல் அரங்கேற்றப்படுவதை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

வீட்டுவசதி ,குடிசை மாற்று என்றெல்லாம் விண்ணதிர முழங்கப்பட்ட ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் வழிந்தோடும் கண்ணீரையும் ரணத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியுமோ ?
சென்னை நகரில் யார் ஆக்கிரமிப்பாளர் , யார் ந்கரைக் கட்டி எழுப்பியோர் யார் , என்ற புரிதல் இல்லாமல் பேசும் புத்திஜீவிகளுக்கு பதிலாக இந்நூல் நெடுக கொட்டிக் கிடக்கிறது புள்ளிவிபரங்களும் தகவல்களும் . மிக முக்கியமாக களச்செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்களின் தொகுப்பாய் இந்நூல் உள்ளது .சென்னை நகர இடதுசாரி இயக்கம் முன்னெடுக்க வேண்டிய – சமரசமற்றுப் போராட வேண்டிய அவசர அவசியப் பிரச்சனையின் ஆழத்தையும் அகலத்தையும் இந்நூல் உணர்த்தி நிற்கிறது .இந்நூல் குறைந்தது ஒரு லட்சம் பிரதியாவது விற்கப்பட வேண்டும் . அதற்கு முன் இந்நூலில் இரண்டு முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் .
ஒன்று இந்நூலுக்கு உயிர் சித்திரம் கொடுக்க ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாய பேசுபொருள் சார்ந்து வர்ணனை சேர்க்கப்பட வேண்டும் .புதிதாகவும் எழுதலாம் , ஏற்கெனவே வெளிவந்த நாவல் , சிறுகதை , கவிதை இவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து  முன்னொட்டாகச் சேர்க்கலாம் .இரண்டு, ஸ்மார்ட் சிட்டி குறித்த விரிவான அலசலும் எச்சரிக்கையும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் . ,
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பை உடனே எதிர்பார்க்கிறோம் .
ஆசிரியர் : அ.பாக்கியம் ,
வெளியீடு : பாரதி புத்தகலாயம் , 7 ,இளங்கோ தெரு ,தேனாம்பேட்டை , சென்னை – 600 018.
பக் : 64, விலை : ரூ .50/
பதிவு: தோழர். சு.பொ.அகத்தியலிங்கம்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *