பக்கத்துப் பக்கத்துத்
தெருதான்;
என் வீட்டுத் தெருவில்
தேய்ந்ததை விட…
உன் வீட்டுத் தெருவில்தான்
அதிகம்
தேய்ந்தன என் கால்கள்!
வளைந்து வரும்
உன் தெருவில் வைத்திருந்த
எச்சரிக்கைப் பலகையை
ஏறெடுத்தும் பார்த்ததில்லை
உன்னைக்
கொய்து கொள்ளவே
விரும்பினேன் நான்!
நீ
உதிர்ந்து போயிருந்தால் கூட
உடைந்துப் போயிருக்க
மாட்டேன்!
உதறிப் போனதினால்தான்
உருக்குலைந்துப் போனேன்!
உருக்குலைந்த உருவம்
இப்போது
நடைப் பிணம்!
கவிஞர் பாங்கைத் தமிழன்…

