Vali Poem By Sambath சு.சம்பத்தின் வலி கவிதை

வலி கவிதை – சு.சம்பத்




ஆசிரியராய் நான்
ஆனபின் இப்போது
‘ஆண்டை’ வீட்டுக்குப்
போனால் போதும்
அதிசயமாய் என்னை மட்டும்
‘அணைக்குடி சம்பத் வாங்க’
என்று
அன்பொழுக அழைத்துச் சென்று
நாற்காலியில் அமர வைத்துத்
தேநீர் கொடுக்கின்றார்கள்
ஆனால்
அப்பா தம்பியையெல்லாம்
இன்னமும்
அதே கொல்லைப் பக்கமாகத்தான்
அழைத்துச் சென்று
தேநீர் கொடுக்கின்றார்கள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. உங்களிடம் பயின்ற மாணவன்.

    ஐயா,கவிதை அருமையாக உள்ளது.இன்னும் பல கவிதைகளை பிரபலமான வலைதளங்களில் காண ஆர்வமுடன் உள்ளேன். கவிதைகளுடன் பொருள் விளக்கமும் இணைத்தால் புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும் என நம்புகிறேன். உங்களின் கவிதைகள் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.

  2. அணைக்குடி சு. சம்பத்

    Book Day
    இணைய தளத்தில் எனது கவிதையை அச்சேற்றி அதனை உலகெங்கும் கொண்டு சேர்த்த தங்களுக்கு எனது பலமான பாராட்டுகளும் வளமான வாழ்த்துகளும்!

    தாங்கள் எனக்களித்த வாய்ப்புக்கு என்றென்றும் நன்றி சொல்லி மகிழ்வேன்.

    தங்களின் ஊக்குவிப்பு என்னை நிறைய எழுத வைக்கிறது.
    Book Day வாழ்க வாழ்கவே!
    அணைக்குடி சு. சம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *